கௌரி சிங்வி என்ற பதினான்கு வயது பெண் கர் தண்டா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள நாற்பத்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்க இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்ட அவர், இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கான உடற்பயிற்சியை இன்று காலையில் இருந்து மேற்கொள்ளத் தொடங்கினார்.
ஒர்லி கோலிவாடா முதல் கேட்வே ஆப் இந்தியா வரை உள்ள கடல் வழிப் பயணத்தை முதன்முதலில் கண்டடைந்த பெண் என்ற பெருமையை கடந்த மார்ச் 2017 ஆம் ஆண்டு கௌரி பெற்றார். நீச்சலில் எப்போதும் பேரார்வம் கொண்டிருக்கும் கௌரி, இங்கிலிஷ் சேனல் மற்றும் அரேபியன் கடலை நீந்திக் கடக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார். இரவில் குளிர்ந்த நீரில் நீந்தும் வல்லமை பெற்ற பெண்ணாகக் கௌரி திகழ்கிறார். அவரது முயற்சி வெற்றி அடையட்டும்.
Be the first to comment on "48 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கவிருக்கிறார் 14 வயது பெண்"