சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்று வரும் இரண்டு விளம்பரங்களைப் பற்றி இங்கு பேச உள்ளோம். ஒன்று 3 Roses டீத்தூள் விளம்பரம் மற்றொன்று 5 Star சாக்லேட் விளம்பரம்.
இந்த விளம்பரத்தில் ஓர் இரவுப் பொழுதில் காற்றோட்டமாக அப்பாவும் மகளும் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கிறார்கள். அப்போது மகள் தன் அப்பாவிடம், “அப்பா நான் ஒருத்தர லவ் பண்றேன்… ஆனா அவரு நம்ம ஜாதி இல்ல… ” என்று கூற அப்பாவோ, “அட ஏன்மா… நம்ம சாதீல எத்தன நல்ல பசங்க இருக்காங்க…” என்று சொல்கிறார்.
மகள் அப்பாவின் பதிலைக் கேட்டு சில வினாடிகள் யோசிக்கிறாள். அப்பாவின் அருகே இருக்கும் டீ டம்ளரை பார்க்கிறாள். டீ குடிக்காமலே இருக்கிறது. அதை பார்த்த மகள் ” அப்பா… டீல சக்கர கரெக்டா இருக்கா… டேஸ்ட்டா இருக்கா…” என்று கேட்கிறாள். உடனே, “அதெப்படிம்மா டீ குடிக்காமலே சொல்ல முடியும்… டீ குடிச்சு பாத்தா தான அது டேஸ்ட்டா இருக்கா, சக்கர கரெக்டா இருக்கானு சொல்ல முடியும்… ” என்று பதில் சொல்கிறார், சிறிதும் யோசிக்காத மகள் “அதே மாதிரி தானப்பா என் காதலனும்… அவர பாக்கறதுக்கு முன்னாடியே வெறும் சாதிய வச்சு வேணாம்னு சொன்னா எப்படி?” என்று கேள்வி கேட்க அப்பாவுக்கு சுருக்கென இருக்கிறது.
சில வினாடிகள் யோசித்து தன் தவறை உணர்ந்து “உன் காதலன எப்பம்மா மீட் பண்ணனும்…” என்கிறார். மிக குறுகிய காலத்தில், “சாதிவெறியை புறக்கணிப்போம்” என்று சமூகத்திற்கு மிக அவசியமான விஷியத்தை கியூட்டாக சொல்லி இருக்கிறது இந்த விளம்பரம். அழகான புரட்சி கவிதை போல் இருக்கும் இந்த விளம்பரத்திற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது 5 star சாக்லேட் விளம்பரம்.
சாலை அருகே உள்ள பெஞ்சில் ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறார். அவருடைய கைத்தடி கையிலிருந்து தவறி உருண்டு சற்று தூரத்தில் தள்ளி விழுகிறது. பாட்டி உடனே, அருகே நின்று கொண்டு 5 star சாக்லேட் தின்றுகொண்டு இருக்கும் இளைஞனிடம் ” தம்பி… அந்த கைத்தடிய எடுத்து தாப்பா… ” என்கிறார். கண்டிப்பாக பாட்டி என்ற இளைஞன் தடியை எடுத்து தராமல் மெய் மறந்து சாக்லேட்டை தின்றுகொண்டே இருக்கிறான்.
பாட்டி, தானே எழுந்து வந்து தடியை எடுக்க அப்போது பாட்டி அமர்ந்திருந்த இடத்தில் மேலே இருந்து பழைய பொருளொன்று தொப்பென்று விழுகிறது. பாட்டி அதிர்கிறார், இளைஞனைப் பார்த்து எதுவும் செய்யாமல் இருந்ததற்கு நன்றி என்கிறார்.
சில சமயங்கள்ல எதுவும் செய்யாம இருக்கறது கூட நல்லது தான், Do nothing என்ற விளம்பரத்திற்கு இது மனிதநேயத்தை சிதைக்கும் விளம்பரம் என்று இணையத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
Be the first to comment on "மனிதம் போற்றும் 3 Roses விளம்பரம்! vs மனிதாபிமானத்தை சிதைக்கும் 5 Star விளம்பரம்!"