திடீரென ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டு மக்களை மண்டை காய
வைத்திருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசே இப்படி படுத்துகிறது என்றால், 2018ல் வரும்
ஜனவரி சாதாரண ஜனவரியா இருக்காதுனு சொன்ன நம்ம மோடி நம்மை என்ன பாடு
படுத்தப்போகிறாரோ!
எவ்வளவு தான் அல்லல் பட்டாலும் நாமளும் திருந்திய பாடில்லை. செம்மறி ஆட்டுக்கூட்டமாய்
தேர்தலின் போது செயல்படும் மானங்கெட்ட மக்கள் ஒருபுறம்! தேர்தலுக்கு பின் மக்களின்
தலையில் எரிமலையை வைத்துவிட்டு, அவர்களின் கூக்குரலை சிறிதும் கவனம் கொள்ளாமல்
செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கும் மங்குனி அமைச்சர்கள் ஒருபுறம்! இதுதான்
தமிழகத்தின் மாறாத நிலை!
பேருந்து நடத்துனர்களா கட்டண உயர்வுக்கு காரணம்?
பேருந்து கட்டண உயர்வு இன்று தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கணிசமான முறையில் கட்டண உயர்வு ஏற்றாமல் எடுத்த எடுப்பில் இரட்டிப்பு கட்டணம்
வசூலிப்பது தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். ஆனால் இந்த கட்டண உயர்வை, ஏற்றுக்கொள்ள
மறுக்கும் மக்கள், “நீங்க சம்பள ஜாஸ்தி கேட்டனால, எங்களுக்கு ஆப்பு வச்சிடுச்சு அரசாங்கம்…
நீங்க மட்டும் பஸ் ஓட்டிக்கிட்டு நல்லா இருங்க… பஸ் டிக்கெட் விலையை ஏத்திப்புட்டு யாருக்காக
பஸ் ஓட்டப்போறிங்களோ தெரியல… வெறும் பஸ்ஸ ஓட்டி நல்லா சம்பாதிங்க… “என்று பேருந்து
நடத்துனர்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களிலோ பயணிகளுக்கும்
பேருந்து நடத்துனர்களுக்கும் இடையேயான வாய்ச்சண்டை கைகலப்பு வரை சென்றுள்ளது.
இதனால் எரிச்சலடைந்த நடத்துனர்களோ, “இது ஏன் எங்ககிட்ட வந்து கேட்குறிங்க… என்னால
மேலிடத்துல சொன்ன ரேட்டுக்கு டிக்கெட்ட கிழிச்சுத்தான் தரமுடியும்… உன் வக்கனையான
கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது… வைகை ஆத்துல தர்மகோல
மிதக்கவிட்டு காச தண்ணியா செலவு பண்ணப்ப கேள்வி கேட்டியா… எம்.ஜி.ஆர்
நூற்றாண்டுவிழாவ அதிக பொருட்செலவுல பிரம்மாண்டமா நடத்துனப்ப கேள்வி கேட்டியா…
நூறு ஐநூறுனு, காசு வாங்கிகிட்டு கோட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி தின்னுப்புட்டு, அந்த
பிரம்மாண்ட விழாவுல கலந்துகிட்டு பல்ல இழிச்சிட்டு வந்தியே… அப்பலாம் அறிவு எங்க போச்சு… எம்எல்ஏக்கு டபுள் மடங்கு சம்பளம் ஏத்துனப்ப என்ன செஞ்ச… எம்எல்ஏல்லாம்
கஷ்டத்துல வாழ்றானுங்க பாரு, அவுனங்களுக்கு டபுள் மடங்கு ஏத்த… நாங்க ஆயிரம்
ரெண்டாயிரம் சேர்த்தி கேட்டதனால தான் உன் பஸ் டிக்கெட்ட ஏத்திபுட்டானா… என்கிட்ட
கேட்குற இந்த வக்கனையான கேள்விய எவன் விலை ஏத்துனானோ அவன்ட்ட போயி கேளு
போ… ” என்று அவர்கள் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. இவர்கள் கூறுவது நியாயம்
தானே! இவர்களும் நம்மைப் போல சாமான்யர்கள் தான் என்பதை புரிந்துகொள்ளாத பயணிகள்
முறையின்றி நடந்துகொள்கிறார்கள். தப்பு நம் மீது! தப்பை நம் மீது வைத்துக்கொண்டு எதிரில்
வருபவனை ஏசுவது சரியாகுமா?
தப்பு செஞ்சா தண்ணி தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும் மக்களே! எலக்சன் நேரத்தில் காசு வாங்கிக்கொண்டு பல்லை இழித்தபடி ஓட்டு போட்ட நமக்கு என்றுமே பேபே தான்!
Be the first to comment on "பேருந்து கட்டண உயர்வால் நடத்துனருகளுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் – மங்குனி அமைச்சர்களும் மானங்கெட்ட மக்களும்!"