சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை!

chengalpattu-court-delivers-judgement-today-on-haasini-murder-case

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங்கள் ஓராண்டு ஆன பிறகு கிடைத்துள்ளது.

சிறுமி ஹாசினி வீட்டின் அருகில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார்.

தலைமறைவானவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்‌தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு மீண்டும் தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹாசினி  கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடத்தல், பாலியல், கொலை, மிரட்டல் என்று ஐந்து வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தஷ்வந்தை குற்றவாளி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் தண்டனை பற்றிய விவரங்களை ஒரு மணிநேரத்திற்கு ஒத்தி வைத்தது. பிறகு நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிறுமியின் தந்தையை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் “கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்று தெரிவித்தார். ஹாசினியின் வழக்கறிஞரோ தஷ்வந்த்தின் வயது இருபதுகளில் இருப்பதால் தூக்கத்தண்டனைக்குப் பதிலாக இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் ஹாசினியின் பெற்றோர் விருப்பபடியே தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

Related Articles

இந்தியாவில் நடப்பது சர்வதிகார ஆட்சி தான்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தை உண்மையிலயே ஆட்சி செய்பவர் எடப்பாடியைச் சார்ந்தவரா அல்லது குஜராத்தை சார்ந்தவரா என்பது தெர...
ரிங்டோன்களாக இருந்த தனி ஒருவன் வசனங்கள்!... * "உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்"* " டேய் செங்கலு... உன் பொண்டாட்டிக்கு பிரசவ வலி வந்துடுச்சி ஆஸ்பத்திரிக்கு போவனும் இறங்கி வ...
பாஜக ஆதரவாளர்களுக்கு எழுத்தாளர் இரா. முர... 37 எம்பியும் வேஸ்ட், தமிழகத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள் வராது என்று சங்கிகள் ரொம்பத்தான் கவலைப் பட்டுத் திட்டுகிறார்கள். திட்டிக் கொண்டே கவலைப் படுகி...
தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள... சமீபத்தில் முகநூலில் ஒருவர், தனியார் பள்ளியில் வாத்தியார் வேலை பார்ப்பதற்கு பேசாமல் நாலு ஆடு மாடு வாங்கி மேய்க்கலாம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ப...

Be the first to comment on "சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை!"

Leave a comment

Your email address will not be published.


*