கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளை உருவாக்கிய ரிக்சா இழுக்கும் தொழிலாளி

கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளை உருவாக்கிய ரிக்சா இழுக்கும் தொழிலாளி

திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம் ஜென்டில்மேன் தொடங்கி சிவாஜி வரை. திரையில் நாம் பார்த்து ரசித்த நாயகன் போலவே நிஜத்திலும் இருந்தால் எப்படி இருக்கும்? உண்மையில் நிறையப் பேர் அப்படி தங்கள் வாழ்வை அடுத்தவரின் கல்விக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர். எந்தவொரு சிறு வெளிச்சமும் இல்லாமல். அப்படிப்பட்ட ஒருவர் தான் அகமது அலி.

அகமது அலியின் கதை

அகமது அலி அடிப்படையில் ஒரு  ரிக்சா இழுக்கும் தொழிலாளி.அச்சாம் மாநிலம் மதுர்பான்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்.  சிறு வயதில் தனக்கு இருந்த வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத இக்கட்டான நிலை. பள்ளிப்படிப்பைத் துறந்து ரிக்சா ஓட்ட ஆரம்பித்த போது அவர் தனக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். இனி இந்தக் கிராமத்தில் வறுமையின் காரணமாக ஒரு குழந்தையின் படிப்பும் பாதியில் நிற்கக் கூடாது என்று.

ஒன்பது பள்ளிகள் உருவாக்கம்

1978 ஆம் ஆண்டு ரிக் ஷா இழுத்து முதல் பள்ளியை தொடங்கிய அகமது அலியின் பயணம் இன்று வரை தொடர்கிறது. இதுவரை அவர் ஒன்பது பள்ளிகளை உருவாக்கியுள்ளார். அதில் மூன்று ஆரம்ப பள்ளிகள், ஐந்து நடுத்தர பள்ளிகள் மற்றும் ஒரு பள்ளியும் அடக்கம். பத்து கல்வி நிறுவனங்களை உருவாக்குவதைக் கனவாக கொண்டுள்ள அகமது அலி, பத்தாவதாக ஒரு கல்லூரியை கட்டிவிடும் முனைப்பில் இருக்கிறார். அகமது அலிக்கு தற்போது வயது எழுபதுக்கும் மேல்.

தனது ஒப்பற்ற பணி குறித்துப் பேசிய அகமது அலி ‘கல்வி அறிவு இல்லாமல் இருப்பது என்பது இருக்கும் பாவங்களில் முதன்மையான பாவம். சமூக நோய்களின் முக்கிய காரணமாக கல்வியறிவின்மை இருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன’ என்றார்.

எண்ணற்ற சிக்கல்கள், அதனால் ஏற்பட்ட எதிர்மறை தாக்கங்கள் இது அத்தனையையும் மீறி ஒன்பது பள்ளிகளை உருவாக்கியுள்ளார் அலி. தனியொருவராக அவர் மேற்கொண்ட இந்த வீரமிக்க முயற்சியில், அவர் தனது பெயரை ஒரே ஒரு பள்ளிக்கு மட்டுமே வைத்துள்ளார். அதுவும் சக கிராமத்தினர் வற்புறுத்துதலின் பெயரில் தனது உயர்நிலைப் பள்ளிக்கு அகமது அலி உயர்நிலைப் பள்ளி என்று பெயர் சூட்டியுள்ளார்.

அகமது அலியை ‘அரிய ஆளுமை’ என்று பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர் பால், அலியின் சேவையை பாராட்டி அவரது உயர்நிலைப் பள்ளிக்கு பதினோரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

திரையில் நாம் ரசித்து மகிழும் கனவு நாயகர்களுக்கு இணையாக, சமயங்களில் அவர்களை விடவும் மேம்பட்ட ஒருவராக நிஜ நாயகர்களை நம்மை சுற்றி சிறு வெளிச்சமும் இன்றி இருக்கிறார்கள். அவர்களை அடையாளப்படுத்துவோம், கொண்டாடுவோம்.

Related Articles

மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரச... மெண்டலுங்கப்பா... எல்லாருமே மெண்டலுங்கப்பா... என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பண...
தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!... ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும். நமக்கு மாறுபட்ட கருத்துடையயோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில்...
2019 சென்னை புத்தக திருவிழாவில் களமிறங்க... 2019 சென்னை புத்தக திருவிழா வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி கிட்டத்தட்ட இருபது நாட்களாக நடக்க இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழின் முக்கியமான பதிப்ப...
ரயில் நிலையங்களுக்கும் இனி ரேங்க் கார்ட்... எண்பதுகளின் இறுதியில் வந்த நிறையத் தமிழ் திரைப்படங்கள் ரயிலை மையமாக வைத்து வெளிவந்தன. அப்போது ரயில் என்பது ஒரு ஆச்சரியம். புதிய நட்புகள் உருவாகும் இடம...

Be the first to comment on "கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்பது பள்ளிகளை உருவாக்கிய ரிக்சா இழுக்கும் தொழிலாளி"

Leave a comment

Your email address will not be published.


*