அசு(Asu) என்ற பெயர் கொண்ட திறன் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது சீனாவை சேர்ந்த ஹயர் நிறுவனம். இதற்கு முன்பு ஒளி புகும் மற்றும் மூளையால் கட்டுப்படுத்தப்படும் தொலைக்காட்சிகளைச் சந்தையில் அறிமுகம் செய்து வந்த அந்த நிறுவனம் தற்போது ப்ரொஜெக்டருடன் இணைந்த திறன்கடிகாரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
1.54 அங்குல அளவு கொண்ட திறன் கைக்கடிகாரத்தை திரையும், அதோடு இணைந்த ப்ரொஜெக்டர் திரை 480 x 854 அளவு கொண்டுள்ளதாகவும் இந்தச் சாதனம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ப்ரொஜெக்ட் செய்யப்பட்ட படத்தை திறன் கைக்கடிகாரத்தில் இருக்கும் தொடுதிரையின் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
தரமான திறன் கைக்கடிகாரத்தை காட்டிலும் அசு திறன் கைக்கடிகாரத்தின் ப்ரொஜெக்டர், காட்சிகளை அளவில் பெரியதாக காட்டுகிறது. இதன் மூலம் புள்ளி விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண்களை ப்ரொஜெக்டரின் உதவிக் கொண்டு பார்த்துக் கொள்ள முடியும். அதிக அளவில் மக்கள் கூட்டம் உள்ள இடங்களில், ஜன நெருக்கடி மிகுந்த சந்தைகளில் இந்தத் திறன் கைக்கடிகாரம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஹயர் நிறுவனம் இந்தத் திறன் கைக்கடிகாரத்தை இந்த ஆண்டு சீனாவில் சந்தைப்படுத்த முடிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் சோனி எக்ஸ்பீரியா டச் நிறுவனத்தோடு திறன் கைக்கடிகாரத்தை உருவாக்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஹயர் நிறுவனமும் இணைந்துள்ளது.
திறன் கைக்கடிகாரம் என்றால் என்ன?
அடிப்படையில் திறன் கைக்கடிகாரம் என்பது ஒரு மொபைல் சாதனமாகும்(Mobile Device). இதனுடன் தொடுதிரை (Touch Screen) இணைக்கப்பட்டிருக்கும். ஒரு கைக்கடிகாரத்தை போலவே இந்தச் சாதனத்தை நீங்கள் மணிக்கட்டில் அணிந்து கொள்ளலாம். உங்கள் திறன்பேசியை (Smart Phone) இணைத்துக் கொள்வதன் மூலம் அதன் அறிவிப்புகள் அனைத்தையும் திறன் கைக்கடிகாரத்திலேயே நீங்கள் பார்த்து கொள்ளலாம்.
காலத்தைக் கைக்கடிகாரத்தில் அடைத்த காலம் போய், தற்போது உலகத்தைத் திறன் கைக்கடிகாரத்தில் அடைக்க முயற்சி செய்கிறோம்.
Be the first to comment on "ப்ரொஜெக்டருடன் இணைந்த திறன் கைக்கடிகாரத்தை(Smart Watch) உருவாக்குகிறது ஹயர் நிறுவனம்"