ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடாக மாறிவருகிறது – தொடர் கொலைகள்!

Tamilnadu turns into bloodshed - serial murders!

வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல்
இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன
உளைச்சலால் பாதிக்கப்பட்டு வன்முறையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும்
இப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடி தமிழகத்தை ரத்தக்காடாக மாற்றி வருகிறது.
ரவுடிக்கும் ரவுடிக்கும் இடைப்பட்ட வன்முறை தாண்டி இப்போது காதலுக்காக மாணவர்களின்
வன்முறை அதிகரித்து வருகிறது.

கடந்த 2012 நவம்பர் மாதத்தில் காதலிக்க மறுத்ததால் வினோதினி என்ற பெண் மீது சுரேஷ்
என்ற இளைஞர் ஆசிட் வீசினார். தமிழகத்தில் நடைபெற்ற முதல் ஆசிட் வீச்சு சம்பவம் அது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினி 90 நாட்கள் போராடி உயிரிழந்தார். சுரேஷுக்கு
ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அடுத்தது நான்கு ஆண்டுகள் கழித்து 2016 ஜூனில் மென்பொறியாளர் சுவாதி என்ற யுவதியை
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் அவரை ஓருதலையாக காதலித்த ராம்குமார் என்பவர்
வெட்டிக்கொலை செய்தார். கொலை செய்த ராம்குமாரோ அடுத்த சில நாட்களில் சிறையில்
மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அதே வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கரூரில் சோனாலி என்ற மாணவி சகமாணவன் உதயகுமார்
என்பவரால் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடியில் சர்ச்சில்
வழிபாட்டில் இருந்த பிரான்சினாவை ஜோன்ஸ் என்பவர் வெட்டிக்கொலை செரய்துவிட்டு
தானும் தற்கொலை செய்துகொண்டான். செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தன்
உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட செந்தில் பிளஸ் டூ மாணவி நவீனாவை கட்டிப்பிடித்தார்.
இதில் செந்தில் உயிர்பிழைத்துக் கொள்ள நவீனா உயிரிழந்தார். டிசம்பரில் சென்னை
பெருங்குளத்தில் சோனியாவை பிரசாந் என்பவர் வெட்டிக்கொலை செய்தார். இது
விசாரணையில் உள்ளது.

2017 நவம்பரில் சென்னையில் இந்துஜா மற்றும் அவரது தாய் இருவரையும் ஆகாஷ் என்பவர்
பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் தாய் சேய் இருவரும் உயிரிழந்தனர். ஆகாஷ் ஜாமீனில்
வெளியே வந்துவிட்டார். 2018 பிப்ரவரியில் 9ம் வகுப்பு மாணவி சித்ராதேவி மீது பாலமுருகன்
என்பவர் பெட்ரோல் ஊத்தி கொளுத்தினார். இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றவை பாதி மட்டுமே. தமிழகத்தில் நடந்துவரும் காதல் வன்முறை,
ஆணவக்கொலை வன்முறை, ஆசிரிய மாணவ சமுதாய வன்முறை அனைத்தையும்ப ட்டியலிட்டால் பக்கம்பக்கமாக செல்லும். இப்படி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறைக்கு என்ன தான் தீர்வு என கேள்வி எழுப்பினால் அது இறுதியில் ஒழுக்கம் என்ற வார்த்தையில் தான் வந்து நிற்கும்.

தன்னுடன் பழகியவனை, தன்னை விரும்பியவனை அலையவிடாமல் அவமதிப்பு செய்யாமல்
தன்னுடைய பிரச்சினையை அவனுக்கு புரிய வைக்க வேண்டியது பெண்களின் கடமைகளுள்
ஒன்று. சில சமயம் தவறு பெண்கள் மீதும் இருக்கிறது. காரணமே இல்லாமல் கொலை
செய்யுமளவிற்கு யாருமே செல்லமாட்டார்கள். இதை தெளிவாக அப்பா படம் எடுத்துரைக்கும்.
இரண்டு பேரும் அமர்ந்து தெளிவுற பேசினாலே இங்கு பாதி பிரச்சினைகள் முடிந்துவிடும்.
ஆனால் இங்கு அந்த அளவிற்கு பாலியல் விழிப்புணர்வு இல்லாததும் இன்னொரு குறை.
பள்ளிகளில் ஒழுக்கத்தை கற்றுத்தராதது இன்னொரு குறை. இப்போது பள்ளிகளில் நல்லொழுக்க
கல்வியை புகுத்த வேண்டுமென்று சொல்கிறார்கள். அதனால் சுமை மட்டுமே அதிகரிக்கும்.
ஒழுக்கம் என்பது இயற்கையாக சுற்றுப்புறத்திலிருந்து கற்றுத்தர வேண்டியது. அது குடும்ப
உறுப்பினர்களும், பள்ளி ஆசிரியர்களும் கற்றுத்தர வேண்டியது. ஆனால் ஆசிரியர்களே இன்று
கத்தியை தூக்கிக்கொண்டு தன்னுடைய மாணவிக்கு ரோஸ் பூ கொடுத்து காதல் டார்ச்சர்
செய்கிறார். வீட்டில் இருக்கும் பெற்றோர்களோ பிள்ளைகள் முன்பு கெட்ட வார்த்தைகள்
பேசுகின்றனர். இன்னும் ஒரு சில வீடுகளில் அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கிறார்.
இந்த செயல் தான் சமூகத்தில் நடைபெறும் அத்தனை வன்முறைகளுக்கும் தொடக்கப்புள்ளி.

Related Articles

இவ்வளவு தாங்க வாழ்க்கை ! – அனைவரும... நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா? என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் பட...
இணையத்தில் வெளியான 2018ம் ஆண்டின் 38 படங... திரைப் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரும்பாலான படங்களுக்கு உரிய ரிலீஸ் தேதியும் போதுமான அளவிலான தியேட்டர்களும் கிடைப்பது இல்...
“இந்தக் காலத்துல காசு இருக்குற எல்... நிறைகள்: கிளப்புல மப்புல பாடல் பாடியது என் தப்பு என்று கூறும் ஆதி மனசாட்சிக்கு நேர்மையாக இப்போது பாடிய "சிவக்குமார் பொண்டாட்டி" பாடலையும் தப்பான...
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினி... இயக்குனர் பாலாவை பற்றி யாவரும் அறிந்ததே. மனதுக்கு மிக நெருக்கமான மனிதர்களுக்காக என்ன வேண்டுமானால் செய்யக் கூடியவர். உதாரணமாக தங்க மீன்கள் படத்தின் ட்ர...

Be the first to comment on "ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடாக மாறிவருகிறது – தொடர் கொலைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*