அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் தினகரன்

Dinakaran started a new party

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக
மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம்
அணியும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எனினும் சசிகலாவால் கட்சியின் துணை பொது
செயலாளராக அறிமுகம் செய்யப்பட்ட டிடிவி தினகரனைக் கட்சியில் இருந்து நீக்கினர் ஓபிஎஸ் –
ஈபிஎஸ் அணியினர். டிடிவி தினகரன் தனி ஒரு அணியாகச் செயல்பட்டு வந்தார். இவருக்கு
ஆதரவாக அதிமுகவில் இருந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து வந்தனர். அவர்களையும்
தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு இன்னும்
நிலுவையில் உள்ளது.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து காலியான ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில்
போட்டியிட்ட டிடிவி தினகரன், யாரும் எதிர்பாராத நிலையில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு
வெற்றிபெற்றார். அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை
எதிர்கொள்ள புதிய கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்தார் . இதற்கு சசிகலாவின் ஒப்புதலையும்
பெற்றார். அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்கவே தற்காலிகமாக புதிய
கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக தன முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டார் டிடிவி தினகரன்.

புதிய கட்சி உதயம்

இந்நிலையில் இன்று காலையில் மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் சார்பில்
பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் இருந்து
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்குப் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த தினகரன் விழா மேடையில்
வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் தான் புதிதாக தொடங்கியிருக்கும் கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
என்ற பெயரை அறிவித்தார். மேலும் கருப்பு சிவப்பு வண்ணம் கலந்து, நடுவே ஜெயலலிதாவின்
உருவம் பொறித்த புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். விழா பந்தலில் 100
அடிக்கு அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் தனது புதிய கட்சியின் கோடியை அவர் ஏற்றி
வைத்தார்.

காலைத் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது ‘அதிமுகவையும்,
இரட்டை இல்லை சின்னத்தையும் மீட்பது ஒன்றே நமது லட்சியமாகக் கொள்ள வேண்டும். இனி
வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட்டு பெரும்
வெற்றி பெறும். இதுவரை எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு உறுப்பினர்களை நாம் சேர்த்து
காண்பிக்க வேண்டும்’ என்றார்.

முன்னதாக திறந்த வேனில் டிடிவி தினகரன் ஊர்வலமாகப் பொதுக்கூட்ட மேடைக்குக்
கொண்டுவரப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Articles

பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்... புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டதுவகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)ஆசிரியர் பற்றி...இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்பிறந்த இடம...
உசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்து... கடந்த சில தினங்களாகவே சர்கார் பட இசை வெளியீட்டு விழா குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துகிறோம், ஒ...
உலகில் அதிகம் மாசுபட்ட 20 நகரங்கள் பட்டி... உலகச் சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், உலகில் அதிக அளவில் மாசுபட்ட 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...

Be the first to comment on "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் தினகரன்"

Leave a comment

Your email address will not be published.


*