சமீபத்தில் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பதிநான்கு பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு
முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே பெட்ரோல்
ஊத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது. அது போன்ற சமயங்களில் தீக்காயம்
அடைந்தவரை காப்பாற்ற தோல் தானம் உதவுகிறது.
தோல் தானம்
கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசு மருத்துவமனைகளிலயே முதன்முறையாக ரூபாய் 70 லட்சம்
செலவில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் அழகியல் துறையில் தோல் வங்கி
துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த
ஜனவரி 24ம் தேதி தோல் வங்கி துவங்கப்பட்டது.
மூளைச்சாவு அடைந்தவர்கள், தற்கொலை விபத்து இல்லாமல் இயற்கையாக மரணமடைபவர்கள் தோல் தானம் செய்யலாம். உயிரழந்த ஆறு மணி நேரத்திற்குள் தானமாக வழங்கப்பட வேண்டும்.
இப்படி தானமாக பெற்ற தோலை மூன்று வாரங்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்டு தோலில்
எந்தவொரு நோய்த்தொற்றும் இல்லை என்று உறுதி செய்த பிறகு அந்த தோல் தீக்காயம்
அடைந்தவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமில்லாது அமிலம், மின்சாரம், ரசாயன
அலர்ஜி, மருந்து ஒவ்வாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்படுபவர்களும் இதன் மூலம் பயன்
பெறலாம்.
Be the first to comment on "தீக்காயத்தால் பாதிக்கப்படுவோரை தோல் தானம் செய்வதன் மூலம் காப்பாற்றலாம்!"