ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தொடர்ந்து, கோ க்ரீன்(Go Green) என்ற சூழலியல் இயக்கித்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த முயற்சி ராஜஸ்தான் அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றோடு இணைந்து முன்னெடுக்கப்படும்.
பத்து லட்சம் மரக்கன்றுகள்
கோ க்ரீன் முன்னெடுப்பைப் பற்றி பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாக தலைவர் ரஞ்சித் பார்தாகூர் ‘ஆர்சிபி அணியின் கோ க்ரீன் சூழலியல் இயக்கம் சமரசம் அற்ற முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. அவர்களின் இந்த முன்னெடுப்பு சுற்றுச்சூழல் நம்முடையது என்ற எண்ணத்தை உண்டு செய்கிறது. சமூக பொறுப்புணர்வு நேரடியாகச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் தொடர்புடையது. வருடாந்திர கோ க்ரீன் ஆட்டத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தேர்ந்தெடுத்ததற்காக அம்ரித் தாமஸ் மற்றும் ஆர்சிபி அணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றார்.
ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கே ரஹானேவுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினார். இந்த அடையாள முன்னெடுப்பைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பத்து லட்சம் மரக்கன்றுகள் நட இருக்கின்றனர்.
சூழலியல் கல்வி
மரக்கன்றுகள் நடுவதோடு மட்டுமல்லாமல், சூழலியல் இயக்கம் குறித்த கல்வியையும் மக்களுக்கு எடுத்துரைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதில் கார் பூலிங், மழைநீர் சேகரிப்பு, கழிவு மேலாண்மை போன்ற நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
‘இயற்கை அன்னையைப் பாதுகாக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும், எல்லா வழிகளையும் பயன்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னெடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் சார்பு சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து வேலை செய்வோம். கழிவு நீர் மற்றும் பிற ஆற்றல் ஆதாரங்களைச் சிறப்பாக நிர்வகிக்க ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகள் மற்றும் நிலையான செயல்பாடுகளுக்கு விரிவான கவனம் செலுத்த வேண்டும் என்று எங்களது பங்குதாரர்களை கேட்டுக்கொள்வோம்’ என்று பார்தாகூர் தெரிவித்தார்.
‘விளையாட்டு நிறையச் சமூகங்களை ஒன்றிணைக்கிறது. ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான இலக்கைக் கொண்டுள்ளோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரர்கள், அணியைப் பின்தொடர்பவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரது ஆதரவைக் கொண்டு நிச்சயம் அந்த இலக்கை அடைவோம்’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.
Be the first to comment on "சூழலியல் இயக்கத்திற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக திட்டம்"