தென் ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப் டவுண். உலகின் பிரதான நகரமான இது தற்போது முழுக்க முழுக்க பாலைவனமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நாற்பது லட்சம் மக்களும் தற்போது தண்ணிக்கு பெரும்பாடு படுகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதி செழிப்பாக இருந்தது என்றே கூறலாம். 2014ம் ஆண்டுகளில் இந்த பகுதியில் இருந்த அணைகளில் நீர் அதிக அளவில் தேங்கி இருந்தது. நீர் உபயோகத்தை எந்தவித குழப்பமின்றி முறையாக பாதுகாத்து அதை வீணாக்காமல் பயன்படுத்தும் மக்கள் அடங்கிய பகுதி என்று பாராட்டைக் கூட பெற்றிருக்கிறது. அப்படி இருந்த நகரம் பாலைவனமாக மாறக் காரணம் என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் பகுதி பாலைவனமாக மாற்றம் அடைய முதல் காரணம் ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழையற்ற வறட்சியே ஆகும். இந்த வறட்சி அப்படியே மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்துள்ளது. அதனால் அந்தப் பகுதிக்கு நீர் ஆதாரத்தை அளிக்கும் தி வாட்டர்ஸ் குலூஃப் எனும் அணையில் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் கூட 13 சதவீத நீர்ப்பிடிப்பு மட்டுமே இருந்திருக்கிறது.
இதற்கு மற்ற காரணங்களும் கூறப்படுகிறது. அது வறட்சி ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகும். அது மட்டுமில்லாமல் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தண்ணீரை போதுமான அளவிற்குப் பயன்படுத்தாததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அதே போல் அரசியலும் ஒரு காரணம் என்று கூறலாம். அந்தப் பகுதியின் நிர்வாக முறை நீர் உபயோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் தேசிய அரசு விவசாயத்து தேவைக்கும் மேற்பட்ட நீர் கிடைக்கும் படி செய்துள்ளது. அது மட்டுமின்றி அரசு புதிய நீர்த்தேக்கங்களை அமைக்காததும் காரணம் ஆகும். இப்போது அந்தப் பகுதியின் எல்லா தண்ணீர்க் குழாய்களும் அடைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் என்று இருநூறு பகுதிகளில் மட்டுமே ஆளுக்கு நாள் ஒன்றுக்கு ஐம்பது லிட்டர் என்று தண்ணிர் வருகிறது. இது போதாதென்று வருகிற மே மாதம் தண்ணீர் கிடைப்பது பூஜ்யம் என்ற நிலைக்கு மாற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மற்ற நாடுகளிலும் பஞ்சம்
இதே போல் இந்தோனிசியா, இந்தியா, மெக்சிகோ, பிரேசில் போன்ற உலகின் மற்ற நாடுகளிலும் அவ்வப்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மெல்போன் நகரில் இதே நிலைமை இன்னும் பத்து ஆண்டுகளில் உருவாகலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரம் இதே நிலைமையை இன்னும் சில தினங்களில் காண இருக்கிறது. இந்த விஷியத்தில் ஏற்கனவே அனுபவம் பெற்ற நாடாக இருபது லட்சம் மக்கள் தொகை கொண்ட பிரேசிலின் சாவோ பாலோ நகர் 2015ம் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு நீர்கிடைக்காமல் போனது. நல்ல வேளையாக உரிய நேரத்தில் மழை பெய்து அப்பகுதி மக்களை காப்பாற்றி உள்ளது. இந்தியாவிலும் இந்த நிலை விரைவில் வரலாம் என்றும் வந்தால் முதலில் சிக்குவது பெங்களூர் என்றும், தமிழகத்தின் பல மாவட்டங்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உஷாராக இருங்க மக்களே!
தமிழகத்தில் இந்த நிலை வராமல் இருக்க, அரசு நீர் ஆதாரங்களை முறையாகப் பராமரித்து மக்களை காக்க முற்பட வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியில் அது சாத்தியம் இல்லை என்பதால் மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.
Be the first to comment on "கேப் டவுணைப் போல் பாலைவனமாக மாறி வருகிறது தமிழ்நாடு!"