எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாது! – தெரிந்தே தவறு செய்வதை சகஜப்படுத்திவிடும் பெற்றோர்கள்!

நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பல தலைமுறை என்றாலே தெரிந்து இருக்கும் அது காவிரி பிரச்சினை என்று. பல தலைமுறைகளாக தொடர்கிறது என்றால் தவறு யார் மீது? நம் மீது தானே? நாம் தேர்ந்து எடுக்கும் ஆட்சிகள் மூலமாக தொடர்ந்து தவறுகளை செய்வது மக்கள் தானே?

எலக்சன் காலத்தை தவிர மற்ற காலங்களில் இந்த அரசை காரி உமிழும் மக்கள் எலக்சன் சமயத்தில் மனம் மாறி மீண்டும் அதே அரசை தேர்ந்து எடுப்பது எதனால்? விடை பண மோகம். எலக்சன் நெருங்கும் சமயங்களில் பண மோகம் பிடித்த மக்களுக்கு வெறி ஊட்டும் வகையில் பணம் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் வாரி இறைக்கப் படுகிறது. மறதி அதிகமாகிவிடுகிறது மக்களுக்கு. இதில் இருந்து மீண்டு வர இன்றைய தலைமுறை முயன்றாலும் அதை சில பெருசுகள் பெற்றோர்கள் விடுவதில்லை. பணம் வாங்க மறுக்கும் புதிய வாக்காளர்களை மனம் மாற்றம் செய்ய வைப்பது எவ்வளவு பெரிய தேசத் துரோகம்.

இந்த தேசத் துரோகம் செய்வது பெரும்பாலும் பெற்றோர்கள் தான். தனித்திரு விழித்திரு என்ற கொள்கையை எந்தப் பெற்றோரும் பின்பற்ற முன்வருவது இல்லை. எல்லோரும் இதை தானே செய்கிறார்கள் நாமும் இதையே செய்வோம், எல்லோரும் செய்கிற போது தவறு ஆகாது இந்த செயல் நாம் செய்யும்போது மட்டும் தவறு ஆகி விடுமா ( அந்நியன் பட வசனம் ) என்று தவறு செய்வதை சகஜப்படுத்திவிடுகிறார்கள். இந்த மனநிலை தான் தூத்துக்குடியில் பல உயிர்களை இழக்க வைத்து இருக்கிறது. இறந்தவர்களில் பலர் இருபதுகள் வயதினர். வாழ்க்கையை இன்னும் முறையாக வாழவே தொடங்காதவர்கள். அவர்களை படுகொலை செய்தது எவ்வளவு பெரிய தேசத் துரோகம். இந்த தேசத்துரோகத்தில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட அத்தனை பேருக்கும் இதில் பங்கு உண்டு தானே. இந்த தலைமுறை பெற்றோர்களே நீங்களும் இதே தவறை தொடர்ந்து செய்யாதீர்கள்.

Related Articles

நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்க...
கழிவுகள் மறு சுழற்சி செய்ய திட்டங்கள் – ... கார்ப்பரேஷன் ஆணையர் எஸ். அனீஷ்சேகர் ஹோட்டல்கள், தியேட்டர் வளாகங்கள் மற்றும் திருமணமண்டபங்கள் ஆகியவற்றின் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்க்கு வெறும் இரண்...
சுஜாதா நினைவு தினம் இன்று! வித்தியாசமான ... 1. கேள்வி: பெட்ரோல் டீசல் முழுவதும் எதிர்காலத்தில் வற்றிப்போகும் வாய்ப்பு உள்ளதா? பெட்ரோல் முழுக்கத் தீர்ந்து விட்டால் கோடிக்கணக்கான வாகனங்களுக்கு மாற...
பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்... வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறு...

Be the first to comment on "எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாது! – தெரிந்தே தவறு செய்வதை சகஜப்படுத்திவிடும் பெற்றோர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*