கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் கடினம் – சொல்கிறார்கள் விஜயவாடா தேர்வர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 12000க்கும்  மேற்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்கள் தங்களுக்கான முதல்நிலை தேர்வுகளை விஜயவாடா நகரில் ஒதுக்கப்பட்டிருந்த 27 தேர்வு  மையங்களில் தேர்வு எழுதினர். காலை ஒன்பது முப்பது முதல் முற்பகல் பதினொன்று முப்பது முதல், முதல் தாளும், உணவு இடைவேளைக்குப் பின்னர் மதியம் இரண்டு முப்பது முதல் நான்கு முப்பது வரை இரண்டாவது தாளும் நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் முழுவதற்கும் சேர்த்து மூன்று தேர்வு மையங்களே ஒத்துக்காட்டு இருந்தன. அவை முறையே விஜயவாடா, விசாகபட்டணம் மற்றும் திருப்பதி ஆகும்.

 

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்வு கடினம்

தேர்வர்கள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்வு மிகக் கடினம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். தேர்வர்களில் சிலர் முதல் தாள் கடினமென்றும் இன்னும் சிலர் இரண்டாம் தாள் கடினம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

வி.பி. பத்மாஜா, யுபிஎஸ்சி தேர்வர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் , ‘இந்த ஆண்டு கேள்விகள் மிகவும் வித்தியாசமானவையாக இருந்தன, முதல் தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் மிகவும் கடினமானவையாக இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை, வெவ்வேறு விதமாகக் கேட்கப்பட்டிருந்ததால் , பகுப்பாய்வு செய்து பதிலளிக்கப்  பல மணி  நேரம் எடுத்துக் கொண்டது. முதல் தாளில்  உள்ள வரலாற்றுக் கேள்விகள் மிகவும் கடினமானவை. முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு கட்ஆப்  குறைவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

கடந்த ஆண்டு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கட்ஆப்  105.3 ஆக இருந்தது. இந்த ஆண்டின் கேள்விகள் கடினமானதாக இருந்ததனால் இந்த ஆண்டு கட்ஆப்  குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன... சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆ...
வேலைக்காரன் இது உழைப்பாளிகளின் படம்!... யாருக்கு இந்த படம்? ஓடி ஓடி உழைத்துவிட்டு அதற்குத்தகுந்த பலனை பெறாமல் காலங்காலமாக அறியாமையால் ஏமாந்துகொண்டு வறுமையின் வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிரு...
ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சா... கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரம் இருக்கும் ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை புரிந்திருக்கிறான் ஹைதராபாத்தைச் சேர...
“ஜல்லிக்கட்டு போராட்டம்” மாத... சமூக வலைதளங்களினால் மிகப்பெரிய வரலாற்று போராட்டமாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம், மெரினா கடற்கரையில் மிகப்பெரிய மாற்றத்தை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறத...

Be the first to comment on "கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் கடினம் – சொல்கிறார்கள் விஜயவாடா தேர்வர்கள்"

Leave a comment

Your email address will not be published.


*