ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா! – காலா விமர்சனம்

ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆமாம் என்பது தான் பதில்.

காலம் காலமாகப் பணக்காரர்களுக்கு உழைத்து உழைத்து ஓய்ந்து போய் ஒழுங்காக கால் நீட்டிப் படுப்பதற்கும் முழுமையான இல்லற சுகத்தைக்கூட இடைஞ்சல் இல்லாமல் அனுபவிப்பதற்கும், வீட்டிற்கு வீடு சொந்த பாத்ரூம் அமைக்க முடியாமல் தம்மாத்துண்டு குடிஇருப்புக்குள் வாழ்ந்து வருபவர்களின் நிலம் சிட்டிக்கு நடுவே இருக்கிறது. அது மும்பை தாராவி. அதன் விலை நாற்பத்தி ஐயாயிரம் கோடி போகும். அதனால் அதிகாரவர்க்கத்தினர் அவர்களை அடியோடு வேறு இடத்திற்கு மாறிப் போக சொல்கிறார்கள். ஆனால் இது #நிலம் எங்கள் உரிமை என்று உரிமையை விட்டுக்கொடுக்காமல் ஓற்றுமையாகக் கூடி நிற்கிறார்கள் தாராவி மக்கள். அந்த மக்களை ஒற்றுமையாக வைத்திருக்கிறான் காலா என்ற தலைவன். இது தான் கதை. படம் ரிலீசாவதற்கு முன்பே இதுதான் கதை என்பதும் தளபதியின் அப்டேட்டட் வெர்சன் என்பதும் பலருக்கும் தெரிந்ததே.

ரஜினி கிரிக்கெட் விளையாடிக்கொண்டே அறிமுகம் ஆகும் காட்சி அப்படியே மெர்சல் அஞ்சு ரூபா டாக்டரை நினைவு ஊட்டுகிறது. அட்லியே பிட்டு அடிப்பார். அட்லியிடம் இருந்தே சுடுகிறார்களா.( ஒரே மாதிரி சிந்தனை பலருக்கும் வரும் என்பதால் இதனை விட்டுவிடலாம்). காமெடி, ரொமான்ஸ். மாஸ் என்று அனைத்திலும் பட்டாசு கிளப்பி இருக்கிறார் ரஜினி. அதிலும் முன்னாள் காதலியை சந்திக்கும் காட்சிகளில் செம ஆக்டிங் தலைவா. இரண்டு நடிகைகளும் மற்ற சின்னச்சின்ன கதாபாத்திரங்களும் தங்கள் பணியை சரியாக செய்து இருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. நானே படேகர் ரஜினிக்கேற்ற வில்லனாக திரையில் தெறிக்கவிட்டிருக்கிறார். சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் தான் ஏமாற்றம் தந்தது. அவரை இன்னும் கொஞ்சம் நல்லவிதமாகப் (அவருக்கு காமெடியன் கதாபாத்திரம் வேண்டாம்) பயன்படுத்தி இருக்கலாம்.

படத்தின் பின்னணி இசையும் படல்களும் செம. ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைனிங், எடிட்டிங், ஸ்டண்ட், டான்ஸ் என்று அத்தனை துறையும் தீயாக வேலையாக செய்து இருக்கிறது. நானே படேகர் எப்போதும் வெள்ளை உடையில் தூய்மை என்ற பெயரில் செய்யும் அயோக்கிய அரசியலை எதிர்த்து கேட்பதற்காக கருப்பு உடை அணிந்து கொண்டு நானே படேகர் வீட்டிற்கு செல்கிறார் ரஜினி. நானே படேகர் “இடது” கால் மேல் “வலது” காலைப் போட்டு அமர, ரஜினி “வலது” கால் மேல் “இடது” கால் போட்டு அமரும் காட்சி மரணமாஸ் அரசியல். ராமன் தனது ஆயுதத்தால் ராவணனைக் கொன்றான். ஆனால் ராவணனுக்கு மீண்டும் தலைவந்தது. மறுபடியும் ராமன் கொன்றான். மறுபடியும் ராவணன் தலையோடு வந்து நின்றான் என்று ரஜினியை ராவணனாகச் சித்தரிக்கும் காட்சிகள் செம. கிளீன் இந்தியா என்று நிலத்தை ஆட்டையப் போடும் (தூத்துக்குடி மற்றும் இன்னும் பிற தமிழகப் பகுதிகள் களவாடப்படுவதை) பிஜேபியை பிஜேபியின் ஆளை வைத்தே செய்து இருக்கிறார்கள். படத்தில் ரஜினி, மந்திரியைப் பார்த்து யாரு இவரு என்று கேட்கிறார். அதைப்பார்க்க பார்க்க தூத்துக்குடி “யாரு நீங்க…” “நான்தான்பா ரஜினிகாந்த்” சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

போலீஸை அடிக்கக் கூடாது என்று வெளி உலகில் ரஜினி சொன்னார். ஆனால் படத்தில் காலாவின் ஆட்கள் போலீஸை அடிப்பது நியாயமாகக் காட்டப்பட்டுள்ளது. ஹேராம் படத்தில் ” ஓநாயோட இடத்துல இருந்து பார்த்தாதான் அதோட வலி புரியும்… ” என்று ஒரு வசனம் வரும். அது அப்படியே இந்தக் காட்சிகளுக்குப் பொருந்தும். படத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை வசனங்கள். மூன்று பேர் எழுதி இருக்கிறார்கள். “கை குடுக்கறது தான் ஈக்குவாலிட்டி… கால்ல விழ வைக்குறது இல்ல… ” ” முடிஞ்சா என் முதுகுல குத்திக்கோ… ” போன்ற வசனங்கள் செம. நிக்கல் நிக்கல் பாடலை இடைவேளையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய இடைவேளை. ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியின் (காலாவின்) ஹீரோயிசம் நிச்சயம் பிடிக்கும். அதே சமயம் ரஞ்சித்தின் கருத்தியலும் பிடிக்கும். நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பாஜக நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நல்ல படம்.

Related Articles

ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...
கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம்... ஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் ...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! ... இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...
ஜெய் பீம் ராஜாகண்ணு மனைவிக்கு அரசாங்கம் ... ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் என்று தான் முதலில் தலைப்பு வைக்க தோன்றியது. ஆனால் மாற்றிவிட்டோம். சின்ன கட்டுரை தான் பொ...

Be the first to comment on "ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா! – காலா விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*