பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இருங்கள்! – நீட் தேர்வும் அலைச்சலும்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளுக்கு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி வருகின்றனர். கடந்த ஆண்டு அனிதாவின் உயிர். இந்த ஆண்டு கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை உயிர். இவர்கள் ஆட்சியில் இன்னும் பல அட்டூழியங்கள் நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் யாரும் ஒற்றுமையுடன் போராடி நீதி காண்பது இல்லை. அது தான் நமது மாநிலத்தின் குறைபாடு. தமிழர்களின் நிலைமை இது தான் என்று எழுதி வைக்காத குறை. இது பல ஆண்டுகளாக பார்த்து வரும் பெற்றோர்களே இன்றைய சூழலை புரிந்து கொள்ள முடியாமல் பதற்றமாகி தங்கள் பிள்ளைகளையும் பதற்றமாக்கி விடுகின்றனர்.

அத்தகைய பெற்றோர்களுக்கும், மகனை மகளை அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட விடாமல் தடுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்தோம் கவுத்தோம் என்றும் முழுசா முளைக்குறதுக்குள்ள பெருசா முளைக்கணும் என்று விரும்பும் இன்றைய மாணவர்களுக்கும் சில வரிகள்.  அப்பாக்களே… முதலில் நீங்கள் நிதானமாக, இருங்கள். உங்களிடம் இருந்து வந்தவன் உங்கள் மகன். அவனுக்கு நீங்கள் தான் ஹீரோ. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை தான் உங்கள் மகனும் செய்வான். ஆதலால்,  உங்களால் இயன்றவரை உங்கள் மகனை பலவற்றிலும் திறமைசாலி ஆக்குங்கள். அவன் தனித் தன்மைக்கு இடையூறு ஆகாதீர்கள். நன்மை தீமைகளை எடுத்துச் சொல்லுங்கள், வலியுறுத்துங்கள். அவன் முடிவுக்குப் பக்க பலமாக இருங்கள். படிப்பில் அவன் விருப்பத்தையும் கேளுங்கள்.( நீட் தேர்வு எழுதியவர்களில் எத்தனை மாணவர்கள் பெற்றோரின் தொந்தரவால் எழுதினார்கள் என்று தெரியவில்லை)  அவனுடைய சாதனையை வெளிப்படையாக அங்கீகரித்து, அவனுடைய வெற்றியை கொண்டாடுங்கள். மகனுடன் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். அடிக்காதீர்கள். ஒப்பிட்டு குறை சொல்லாதீர்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

அப்பா அம்மாவை புரிந்து கொள்ளாமல் சட்டென்று தற்கொலைக்கு துணியும் சில மகன் மகள்களுக்கு சில வரிகள். உனக்கு சரி என்று படுவது எல்லாம் சரி அல்ல. முடிவு எடுக்கும் முன் அவர் சொல்வதைக் கவனி, யோசி. அவர்கள் பேச்சைக் கேள். அவர்கள் சொல்வதைச் சிந்தித்து செய். பொது மற்றும் வீட்டு நிகழ்ச்சிகளில் அவரை அங்கீகரி, மரியாதை கொடு. அவருடைய தேவைகளை சூழ்நிலைகளைப் புரிந்து கொள். அவரிடம் பணம் கேட்டு நிர்பந்திக்காதே, தொல்லை கொடுக்காதே. அவரை அலட்சியப் படுத்தாதே. குறிப்பாக அவருடம் நேரம் செலவிடு. ஒரு குடும்பத்தில் இழப்பு ஏற்பட்டால் அது நரகத்தினும் கொடுமையானது. உயிரோடு இருக்கும் உங்கள் குடும்பத்தினர் தினம் தினம் குற்ற உணர்வில் நொந்து நடை பிணமாக சுற்றித் திரிவார்கள் என்பதை மனதில் கொள். அப்பாக்களுக்கு மகன்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம். ஆனால் இவர்களை அந்த சூழலுக்கு தள்ளும் அரசியல்வாதிகளை, அலட்சியம் நிறைந்த அரசு அதிகாரிகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்ல வேண்டியவற்றையும் கமெண்டில் பதிவிடுங்கள்.

Related Articles

அண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி ... " அண்ணன் செத்த அடுத்த பதினாவது நாள் அவன் தம்பி வந்தாண்டா... " துப்பாக்கி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் ...
தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!... கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்! தன்னை தேடி வர...
தமிழ்பிரபாவின் “தெய்வத்தால் ஆகாதென... செருப்பு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் இரண்டரை அடி உயரமுள்ள நாகேஷ்...க்ளவுனிங் டாக்டர் மாயா...தேசிய அமைப்பொன்றால்  அங்கீகரிக்கப்பட...
ப்ளூசட்டை மாறன் சொன்னதுபோல் ஹிப்ஹாப் ஆதி... நான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனத்தில் ப்ளூசட்டை மாறன் ஹிப்ஹாப் ஆதியின் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருப்பதாக கூறியிருந்தார். அவருடைய இசையை பற்ற...

Be the first to comment on "பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இருங்கள்! – நீட் தேர்வும் அலைச்சலும்!"

Leave a comment

Your email address will not be published.


*