இந்தியாவிலயே அதிக ஜிஎஸ்டி வரி கட்டி வரும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. ஜியோ இலவச இணைய சேவை திட்டத்தின் மூலம் இந்தியா முழுக்க பெரும்பாலான வாடிக்கையாளர்களை மிகக் குறுகிய காலத்தில் சம்பாதித்துவிட்டது.
கடந்த ஆண்டு ரூபாய் ஆயிரத்து ஐநூறுக்கு தனது சொந்த தயாரிப்பு செல்போனான ஜியோ போனை, மூன்று வருடங்களில் உங்களுடைய பணம் திருப்பி செலுத்தப்படும் என்று கூவி கூவி விற்றனர். இருந்தாலும் அவற்றில் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான வாட்சப், கூகுள் மேப் போன்ற வசதிகள் இல்லாததால் பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெறவில்லை. பேஸ்புக், யூ டியூப் மட்டுமே போதும் என்று எண்ணியவர்களின் ஆதரவை மட்டுமே பெற்றது.
இந்நிலையில் தற்போது வாட்சப், கூகுள் மேப் வசதியுடன் ஜியோ போன் வரப் போகிறது என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.
வருகிற ஆகஸ்ட் 15 முதல் சந்தைக்கு வர இருப்பதாக அறிவித்து உள்ளது. டச் வசதி இல்லாமல் ஆல்பாநியூமரிக் கீபோர்டு வசதியுடன் வாட்சப் வசதி உள்ள போன் என்பதால் வாடிக்கையாளர்களை கவருமா? அல்லது கவராதா என்பதை அந்தப் போனுக்கு நிர்ணயிக்கப் படும் விலையை பொறுத்தே அமையும்.
Be the first to comment on "ஜியோ போன் 2வில் வாட்சப், பேஸ்புக், யூ டியூப், கூகுள் மேப் என்று சகல அம்சங்களும் உண்டு! – ரிலையன்ஸ்"