கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள் கூட இரண்டு மூன்று முறை தியேட்டருக்கு வந்து பாத்து ரசித்த படம் விஐபி. அத்தகைய ப்ளாக் பஸ்டர் படம் ரிலீசாகி இன்றுடன் நான்கு வருடங்கள் ஆகிறது.
தனுஷுக்குத் தொடர்ந்து தோல்வி படங்களாக அமைந்து கொண்டிருந்த காலம் அது. 3, மரியான் போன்ற படங்களில் அற்புதமான நடிப்பைக் கொடுத்திருந்தாலும் அவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக 3 படம் கொடுத்திருந்த உலகளவிலான எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பது தான் அவருடைய சறுக்கலுக்கு காரணம் என்று கூட சொல்லலாம். இனி அவ்வளவு தான் இந்த ஒல்லிப்பிச்சான் சோலி முடிஞ்சுது. எவ்வளவு நாளைக்குத் தான் மாமனார் பேர சொல்லியே ஊர ஏமாத்துறது என்று பல விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் தான் அவருக்கு விருதுகள் குவிந்து கொண்டிருந்தது. அதே போல தமிழில் அவர் சறுக்கலை கண்டாலும் இந்தி சினிமாவில் ராஞ்சனா, ஷமிதாப் என்று அந்தப் பக்கம் தன்னுடைய முத்திரையைப் பதித்து அங்கயும் சில விருதுகளை அள்ளி வந்தார்.
தமிழில் மீண்டும் தான் ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கி செய்த படம் தான் விஐபி. வேல்ராஜ், அனிருத், சமுத்திரக்கனி என்று திறன்மிகுந்தவர்களை அணி சேர்த்துக்கொண்டு தன்னுடைய இருபத்தி ஐந்தாவது படமாகக் கொடுத்து தன்னுடைய கேரியரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு திருப்பிக் கொண்டார்.
” தம்பி… யாரு மொத சம்பாதிக்குறாங்கறது முக்கியம் இல்ல… யாரு கரக்டான டைம்ல சம்பாதிக்குறாங்கறது தான் முக்கியம்… ” என்று டீசர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்க, ” ரகுவரன வில்லனா தான பாத்திருப்ப… ஹீரோவா பாத்தது இல்லையே… இனி பாப்ப… ” என்று பின்னாடியே வந்த டீசர் இன்னும் எதிர்பார்ப்பை உண்டாக்க, மறுபக்கம் அனிருத்தின் பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
தம்பியிடம் வம்பு இழுத்தர்களை புரட்டி எடுக்கும் சண்டைக் காட்சி, அப்பாவுடன் முரண், பக்கத்து வீட்டு அமலாபாலுடன் மோதல், அம்மாவின் இறப்பும் அம்மா அம்மா பாடலும், வேலை கிடைத்த பின் ரகுவரன் சந்திக்கும் பிரச்சினைகள், விவேக்கின் தங்கபுஷ்பம் காமெடி, தனுஷ் மூச்சுவிடாமல் பேசும் நெடிய வசனம், கிளைமேக்ஸில் சிக்ஸ்பேக் ஃபைட் என்று படத்தில் ரசிப்பதற்கு அத்தனை விஷியங்கள் குவிந்து இருக்கிறது. ஒரு சரியான டீம் அமைந்தால் அது ஏ,பி, சி என அனைத்து சென்டர்களிலும் ஹிட் அடிக்கும் என்று நிரூபித்த படம்.
ஆனால் விஐபி2 தோல்வி அடைந்தது. காரணம் இயக்குனர் வேறு. இசையமைப்பாளார் வேறு. விஐபி படத்தின் இன்னொரு நாயகன் அனிருத். பவர்பாண்டி படத்தின் இன்னொரு நாயகன் ஷான் ரோல்டன். பவர்பாண்டி படத்தில் அனிருத்தை பொருத்தி பார்க்க முடியாது. அதை உணர்ந்து தனுஷ் விஐபி 3 ல் அனிருத்துடன் இணைந்தால் நிச்சயம் ப்ளாக் பஸ்டர் தான்.
Be the first to comment on "#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தான பாத்திருப்ப… ஹீரோவா பாத்தது இல்லையே… இனிமே பாப்ப"