கப்பலில் 60000 யானைகளை ஏத்திட்டு போய் போர் செஞ்சாங்க என் முன்னோர்கள்! – இது பொய் அல்ல உண்மை!

Actor Politician Seeman

கப்பலில் 60000 யானைகளை ஏத்திட்டு போய் போர் செஞ்சாங்க என் முன்னோர்கள் என்று சீமான் சமீபத்தில் சொன்னதை அடுத்து அது எப்படி வாத்தியாரே அறுபதாயிரம் யானையைக் கொண்டு போயிருக்க முடியும், சீமான் வர வர புழுக ஆரம்பிச்சிட்டாரு… என்று பலவிதமாக கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

நெட்டிசன்களின் கலாய்கள்:

  1. அடேய் …. யானைக்கு பதிலா எலின்னு சொன்ன கூட நான் நம்பி இருப்பேன் ….
நார்னியா படத்துல எலி படை இருக்கு . ஆனா அவன் கூட இந்த அளவுக்கு ரீல் விடலடா சாமீ .... 
  1. அடுத்த படம் ரிலீஸ்….
#சைமனும்_60000ஆனைகளும்....
ஆமைக்கறியன் பொய் சொல்றதுன்னு முடிவான பின் வேற என்னத்த சொல்ல....
  1. 60000 பானையாக இருக்கும் தல மத்திய சொல்லிடாப்ல…
  2. வாயால வடை சுடுவது மாதிரி, அண்ணன் வாயாலேயே கம்பு சுற்றுவார்….
  3. முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவசர அறிக்கை:

எனக்கும் சீமானுக்கும் எவ்வித அறிமுகமோ பழக்கமோ கிடையாது. நான் இறந்த செய்தி அறிந்ததும் நானும் வாஜ்பாயும் ஒரே பாயில் படுத்து தூங்கும் அளவிற்கு நட்பாக இருந்தோம் என்று அவர் புரூடாவிடக் கூடும். ஆதலால் அவர் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம்.

நெட்டிசன்கள் கவனத்திற்கு:

தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் கலாய்த்து தள்ளுவது நெட்டிசன்களின் பொழுதுபோக்கு. அதற்காக அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் கலாய்த்து தள்ளினால் இங்கு எதுவுமே பொருளற்று போய்விடும்.

சீமானை உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றால் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் சீமானை பிடிக்காது என்ற காரணத்திற்காக அவர் கூறும் முன்னோர்களின் பெருமையை கலாய்ப்பதன் மூலம் நீங்கள் சீமானை தரம் தாழ்த்துவதாக எண்ணுகிறீர்கள். ஆனால் அது தான் இல்லை… மாறாக ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையையே நீங்கள் தாழ்த்துகிறீர்கள் இன்னும் சொல்லப் போனால் யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதற்குச் சமம்.

சமீபத்தில் அவர் கூறிய கருத்து முற்றிலும் உண்மை. சோழர்களின் ஆட்சிக் காலம் அத்தகைய பிரமிப்புக்களை உள்ளடங்கியது. தஞ்சை பெரிய கோயில் மாதிரியான உலகம் வியக்கும் அதிசயங்களை செய்தவர்கள் சோழர்கள். சோழர்களின் ஆட்சிக்காலம் பற்றிய புத்தகங்கள் உங்களுக்கு கிடைத்தால் எடுத்துப் படித்துப் பாருங்கள். அதில் எத்தனாயிரம் யானைகள், எத்தனாயிரம் குதிரைகளை ஏற்றிக் கொண்டு போர் செய்ய சோழர் படை கிளம்பியது என்று தெளிவாகப் புரியும்.

பாகுபலி என்ற ஒரு படத்தைப் பார்த்து சிலாகித்தீர்களே நீங்கள் பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா? அது போன்ற நாவல்கள், மற்றும் தமிழ் ஆட்சியாளர்கள் வரலாற்று புத்தகங்கள் படித்த பிறகு தெரியும் தமிழ் மண் எத்தகைய பிரமிப்பை உள்ளடக்கியது என்று. இதே கருத்தை சீமானுக்குப் பதில் வேறு யாராவது சொல்லி இருந்தால் தமிழன்டா கெத்துடா என்று கிளம்பி இருப்பீர்கள். சொன்னது சீமான் என்பதால் இத்தனை வசவுகள்.

 

Related Articles

பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத,... இயக்குனர் ராம் பத்திரிக்கையாளர் ஜெயராணி கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஜோதிமணி இசை தமிழ்நதி ஆதவன் தீட்சண்யா தமயந்தி ஜி. ...
" இவிங்கள நம்பி அரசியலுக்கு வராதீங்... தமிழகத்தில் தற்போது கோமாளி ஆட்சி நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா இறப்புக்குப் பின் திறமையான தலைமை அமையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த ரஜி...
பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெ... மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐ...
சார்பட்டா திரைவிமர்சனம்! ...  ஒரு சில படங்களை பார்த்தால் ஏண்டா பார்த்தோம் என்று இருக்கும் ஒரு சில படங்களை பார்த்தால் இந்த மாதிரி படங்களை நல்ல வேளை பார்த்து விட்டோம் என்று தோன்றும்...

Be the first to comment on "கப்பலில் 60000 யானைகளை ஏத்திட்டு போய் போர் செஞ்சாங்க என் முன்னோர்கள்! – இது பொய் அல்ல உண்மை!"

Leave a comment

Your email address will not be published.


*