கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்தது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ளார். வாத்துக்கள் நீந்தும் நீர்நிலையில் ஆக்சிஜன் தாமாகவே உயரும் என திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
ருத்ரசாகரில் பாரம்பரியப் படகுப் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிப்லப் தேப், அழகான இயற்கைக் காட்சியை உருவாக்கி சுற்றுலாத்துறையை மேம்படுத்த மற்றும் கிராமத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த நீர் நிலைகளை ஒட்டி வாழும் கிராம மீனவர்களுக்காக ஐம்பது ஆயிரம் வெண்ணிற வாத்துக் குஞ்சுகளை அரசு விநியோகிக்கப் போவதாக தெரிவித்தார்.
புதிய சர்ச்சை:
வாத்துக்கள் நீந்தும் நீர்நிலை சுத்திகரிக்கப்பட்டு, ஆக்சிஜன் தாமாக உயர்ந்து அதை சுவாசிக்கும் மீன்கள் இயற்கையான முறையில் விரைவாக வளரும் எனவும் பிப்லப் தேப் கூறியுள்ளார். நீரில் அசைவுகள் இருந்தால் ஆக்சிஜன் கிடைக்கும் என்றும், ஆனால், அது நீந்தும் வாத்துக்களால் கிடைக்கும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர்கள் மறுத்துள்ளனர். அதே சமயம் இந்தக் கருத்தை பலர் ஆதரித்தும் வருகின்றனர்.
Be the first to comment on "நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது, அதனால் மீன்கள் பெருக்கமும் அதிகரிக்கிறது – திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் !"