ஸ்லிம் சிவாஜியின் வடசென்னை படம் எப்படி இருக்கு? புதுப்பேட்டையை மிஞ்சியதா?

Vada Chennai Movie Review

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த படம் இது. ரவுடிசம் சார்ந்த படம் என்பதால் புதுப்பேட்டை பாகம் இரண்டை மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நிரம்பி இருந்தனர் தனுஷ் ரசிகர்கள். இது புதுப்பேட்டையை மிஞ்சியதா? ஆடுகளம், விசாரணையை மிஞ்சியதா?

கேரம் விளையாடுவதில் கில்லாடியாக இருக்கும் அன்பு எப்படி சூழ்நிலை காரணமாக மக்களின் தலைவனாக மாறுகிறான் என்பதே படத்தின் மையக்கதை. இந்தக் கதையின் சாயலில் பல படங்கள் வந்து உள்ளது. ஆனால் வெற்றிமாறன் தனக்கே உரிய மேக்கிங் ஸ்டைலில் புதுமையான சினிமாவை காட்டி இருக்கிறார்.

எங்கிருந்தோ ஓடிவந்து கிணற்றைத் தாண்டி புறாவை புடிப்பது போல் தனுசுக்கு அறிமுகக் காட்சி வைக்காமல் சிறைக்குள் நுழையும் சிறைவாசி என்று மிக எளிமையாக காட்டிய விதத்திலயே நாம் கதைக்குள் மூழ்கத் தொடங்குகிறோம். அன்பு ஏன் சிறைக்கு வந்தான்? அன்பு வாழ்க்கையில் பத்மா எப்படி வந்தாள்? அன்புவுக்கும் ராஜனுக்கும் என்ன சம்பந்தம்? அன்பு எப்படி கத்தி எடுத்தான்? போன்ற கேள்விகளுக்கு வெற்றிமாறனே தன்னுடைய குரல் வழியாகவும், காட்சி வழியாகவும் விடை தருகிறார்.

பத்மா அறிமுகமாகி அன்புவுடன் நெருக்கமாகும் காட்சிகளில் தியேட்டரில் கலகல. குறிப்பாக பத்மா பேசிய கெட்டவார்த்தைக்கு தியேட்டரே அலறியது. பத்மாவாக ஐஸ்வர்யா கச்சிதம்.

அடுத்தது ஆண்ட்ரியா. எந்தக் கலகலப்பும் இல்லாமல் அமைதியாகவே இருந்து மிரட்டுகிறார். டாப்லெஸ் காட்சியில் நடித்ததற்காகவே ஆண்ட்ரியாவுக்கு ஒரு சல்யூட்.

வாயில் அலகு குத்தி இருக்க எதிரிகளை எட்டி மிதித்து விளாசும் சமுத்திரக்கனி ஒரு பக்கம் மிரட்ட, மறுபக்கம் ஜெயிலுக்குள் இருந்துகொண்டே கெத்து காட்டுகிறார் கிஷோர். இப்படி படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ஹீரோவைப் போல தெரிகிறார்கள். ஆனால் படத்தில் துளி ஹீரோயிசம் இல்லை. காரணம் கதை தான் இங்கு ஹீரோ. இரண்டாம் பாதியில் பல நிமிடங்களுக்கு தனுஷ் திரையில் காணாமலே இருக்கிறார். அப்படி இருந்தும் படம் சுவாரஸ்யமாக செல்கிறது. தனுஷ் ரசிகர்கள் எரிச்சல் அடையாமல் இருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இருபத்தைந்தாவது படம். தனக்கு கொடுத்த வேலையை நன்றாகவே செய்திருக்கிறார். வெற்றிமாறனுடன் வேல்ராஜ் சேர்ந்தால் ஒளிப்பதிவு வேற லெவலில் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

சமீபத்தில் வெற்றிமாறனிடம் ஒரு நேர்காணல் நடத்தினார் மாதீவன். அப்போது அவர் கேட்ட ஒரு கேள்வி மிக முக்கியமானது. “புத்தகங்களை சினிமாவாக எடுக்க முயற்சிக்கிறாரா வெற்றிமாறன்?” என்ற கேள்வி தான் அது. வடசென்னையில் அது தான் நடந்து உள்ளது. காவல்கோட்டம் போல ஒரு தடியான நாவல் மாதிரி 900 பக்கங்கள் உடைய ஒரு நாவல் எழுதி மூன்றாகப் பிரித்து அதை சினிமாவாக மாற்றி முயற்சிக்கும் எண்ணம் அபாரம். நீங்கள் ஒரு நாவலை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று  படத்தின் வித்தியாசமான எடிட்டிங் சொன்னது.

நடிகர் தனுஷ் என்பதைக் காட்டிலும் தயாரிப்பாளர் தனுஷுக்கு மிகுந்த பாராட்டுக்கள். எந்த சமரசமும் இல்லாமல் ஏ சர்டிபிகேட் வாங்கி உள்ளார். படத்தில் மக்குக்கூதி, சூத்து, தேவடியா, கொம்மாலே என்று கெட்டவார்த்தைகள் நிரம்பிக் கிடக்கிறது. தன்னுடைய ரசிகர்களில் பாதி பேர் குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் எனத் தெரிந்தும் தனுஷ் எடுத்த இப்படியொரு முடிவு அபாரம். மொத்தத்தில் வடசென்னை முரட்டு நாவலின் திரைவடிவமாக மாறி தமிழ்சினிமாவை பல அடிகள் உயர்த்தி நிறுத்தியிருக்கிறது!

Related Articles

நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன்... கடந்த இரண்டு நாட்களாக நியூஸ் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பேரிகார்டு பீட்டரின் பெயர் அடிக்கடி கண்ணில் படுகிறது. யார் அந்த பிரபலம்? புத்தா...
மனிதர்கள கொலை பண்றது மட்டும் கொலையல்ல! உ... விஜய் சேதுபதியின் இருபத்தி ஐந்தாவது படமான சீதக்காதி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது.சன் டிவி சீரியலில் நடிக்கத...
சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்... சுஜாதா எழுதிய புத்தகங்களில் ரொம்ப பிராடு தனம் நிறைந்த புத்தகம் என்றால் அது கண்டிப்பாக அவர் எழுதிய "சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற புத்தகம் தான். அந்த ...
கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி ம... தமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும்  வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகி...

Be the first to comment on "ஸ்லிம் சிவாஜியின் வடசென்னை படம் எப்படி இருக்கு? புதுப்பேட்டையை மிஞ்சியதா?"

Leave a comment

Your email address will not be published.


*