கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்! – அதிகரிக்கும் இளவயதினர் மரணங்கள்!

கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்! - அதிகரிக்கும் இளவயதினர் மரணங்கள்!

ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் பதினைந்து வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்குள் உள்ள பிஞ்சுகளின் தலைகள் தான் காணப்படுகிறது. பெண்கள் தலையை காட்டிலும் ஆண்கள் தலைகள் தான் இந்தப் பட்டியலில் அதிகம் காணப்படுகிறது.

அத்தனை இளைஞர்களும் அறியாமையில் சுற்றித் திரிந்த இளைஞர்கள். வர்தா புயலில் வாரியது போல தலை முடியை வெட்டிக்கொண்டு கையில் சாதிக் கயிறையும் ரப்பர் பேண்டையும் காப்பையும் போட்டுக்கொண்டு ஹீரோயிசம் காட்டுகிறேன் என்ற பெயரில் உருப்படாத கழுசடைகளுடன் சேர்ந்துகொண்டு ஊதாரியாக சுற்றித் திரிகிறார்கள் இந்த மாதிரி இளைஞர்கள்.

அதிலும் பைக் ஒன்று வாங்கி கொண்டு அவர்கள் செய்யும் குரங்கு வித்தை நம்மை கவலைப்பட வைக்கிறது. இந்தப் பசங்களோட அம்மா அப்பாலாம் என்ன பாவம் செஞ்சாங்களோ இப்படிபட்ட குரங்குகள பெத்துப் போட்ருக்காங்க என்று ஊரில் போவோர் வருவோரெல்லாம் கண்டபடி பேசினாலும் கொஞ்சம் கூட சொரனையே இல்லாமல் ஹே… நா இப்படித்தான் இருப்பேன்… உனக்கு என்ன வந்துச்சு… என்று அவன் மேல் அக்கறை கொண்டு பேசுவோரை மரியாதை இல்லாமல் எதிர்த்துப் பேசிவிட்டு தண்ணியைப் போட்டுக்கொண்டு பைக்கை முறுக்கிக் கொண்டு சென்று லாரி டயருக்கு அடியிலும் பஸ் டயருக்கு அடியிலும் சிக்கி நசுங்கிப் போய் ஈக்களும் காக்கைகளும் கொத்தித் தின்பதற்கு ஏதுவாக மரணித்து கிடக்கிறார்கள் இந்த மாதிரி அரவேக்காட்டு இளைஞர்கள்.

இதுபோன்ற முட்டாள்கள் ஒருபுறம் இருக்க சினிமா ரசிக குஞ்சுகள் அதற்கும் மேல் அட்டூழியங்கள் செய்கிறது. தலைவனுக்கு பாலாபிஷேகம் செய்கிறேன் என்ற பெயரில் ஜேசிபியில் வௌவால் போல தொங்கிக் கொண்டும் பல அடி உயர கட்அவுட்டில் நின்றுகொண்டும் செய்யும் சேட்டை எல்லாம் சிரிப்பையும் கோபத்தையும் உண்டாக்க கூடியவை. கட் அவுட் மேல் கட் அவுட் வைத்து சொந்தக் காசை கரியாக்கித் திரியும் அந்த இளைஞர்களின் மனநிலை தான் என்னவோ? டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் நடிகர்களுக்காக நேரத்தை விரயம் செய்துவிட்டு காலம் முழுக்க கோமாளியாகவே திரிகிறான். நடிகர்களோ கோடிகளில் புரள்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் உட்கார்ந்து வாழ்வதற்கு இந்தக் கோமாளிகள் நாய் போல் ஓடியாடித் திரிந்து உழைத்த காசை தெண்டமாக வாரி இறைத்து வருகிறார்கள். இதெல்லாம் சொன்னா நம்மள பைத்தியங்காரம்பாங்க… இல்லனா வயித்தெரிச்சல் புடிச்சவன் பொறாம புடிச்சவன்னு சொல்வாங்க… என்று சிலர் அக்கறை இருந்தும் அவர்களை தண்ணி தெளித்துவிட்டு செல்கிறார்கள்.

சேர்க்கையும் வாழ்க்கையும் :

சேர்க்கை நல்லா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் என்பது இந்த அர மண்டையன்களுக்குப் புரிவது இல்லை. நான் நாசமாத் தான் போவேன் என்று கண்ட கண்ட கழுதைகளுடன் சேர்ந்து குப்பையாக திரிந்துவிட்டு இறுதியில் வாழ்க்கையை வாழத் தொடங்குவதற்கு முன்பே கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் பல் இளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நல் வழிப்படுத்துபவனே நண்பன். அந்த வகையில் உயிரோடு இருக்கும் போது கெத்துடா மயிருடா என்று அப்பாவிகளை உசுப்பேத்தி உயிர் விட வைத்துவிட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் “கண்ணே நீ மண்ணைவிட்டு போனாலும் எங்கள் நெஞ்சை விட்டு நீங்க வில்லை” ” எங்களை தவியாய் தவிக்க வைத்துவிட்டு நீ மட்டும் எப்படிடா இப்படி கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் சிரித்துக் கொண்டு இருக்கிறாய்” ” பார்க்க கண்கள் வேண்டும், சுவாசிக்க இதயம் வேண்டும், உன்னைப் போல் நட்பு கிடைக்க இன்னொரு ஜென்மம் வேண்டும் ” போன்ற வசனங்களை வெட்கமே இல்லாமல் எழுதி போஸ்டரும் பேனரும் அடிப்பதில் என்ன தான் சுகமோ?

இந்த தீபாவளிக்கு ரிலீசாகும் படத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் பேனர்கள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. எதற்குத் தான் இத்தனை வெட்டிச் செலவோ? இவர்களுடைய மனநிலை தான் என்ன? நிஜ பைத்தியங்களா? அல்லது பைத்தியங்கள் போல் நடிக்கிறார்களா? நிச்சயமாக இவற்றை எல்லாம் கொண்டாட்டம் என்று சொல்ல முடியாது. கொண்டாட்டம் வேறு கிறுக்குத் தனம் வேறு.

குடித்துவிட்டு ஒரு வண்டியில் எருமை மாடு போல் நாலைந்து பேர் தாவிக்கொண்டு தலையில் கர்சீப் கட்டிக்கொண்டு ஊ ஊ என்று கத்திக் கொண்டு செல்வது அல்ல கொண்டாட்டம். நிழலுக்கு மட்டுமே உதவக்கூடிய பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது அல்ல கொண்டாட்டம். பெண்களும், குழந்தைகளும் கூடும் இடம் தியேட்டர் என்றும் பாராமல் தியேட்டருக்குள் கெட்ட வார்த்தையால் கூச்சலிட்டுக்கொண்டு உட்கார்ந்த இடத்திலயே பொளிச் பொளிச் என்று எச்சில் துப்பிக் கொண்டு, முன்சீட்டில் செருப்புடன் காலை தூக்கிப் போட்டுக்கொண்டு திரிவது அல்ல கொண்டாட்டம்.

சுற்றி இருப்பவரையும் திருப்திபடுத்துவது தான் கொண்டாட்டம். அவர்களின் துயரை நீக்கி அவர்களுடன் ஆடிப்பாடுவது தான் கொண்டாட்டம். அந்த வகையில் அனாதை இல்லங்களுக்கு உணவுப் பொருள்கள் வாங்கித் தரும் ரசிகர்களையும், அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தரும் ரசிகர்களையும் வெகுவாகப் பாராட்டலாம். இது தான் கொண்டாட்டமே தவிர பொறுக்கித் தனம் செய்வது அல்ல கொண்டாட்டம். இது போன்ற கொண்டாட்டத்தை ஒரு சிலர் மனப்பூர்வமாக அனுபவிக்கிறார்கள். ஒரு சிலர் விளம்பரத்திற்காக செய்கிறார்கள். எதோ ஒன்று மொத்தத்தில் கொண்டாட்டம் என்பது சுற்றியிருப்பவரையும் திருப்தி படுத்த வேண்டும்.

Related Articles

கருப்பு சட்டை காரர்களையும் கருப்பு நிற ம... கருப்பு - அழகு:கருப்பு நிறம் பெண்களுக்கு ஏன் அவ்வளவு பிடித்திருக்கிறது என்று பெண்களிடம் கேள்வி எழுப்பினால் இதற்கெல்லாம் சரியான பதில் சொல்ல முடியாத...
டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிக... காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர...
“நான் பெத்த மகனே” இந்த திரைப... நான் புடிச்ச மாப்பிள்ளை, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, வீட்டோட மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா போன...
சினிமாவில் உதவி இயக்குனர் ஆவது எப்படி? &... சினிமாவைப் பற்றி கொஞ்சம்... இது ஒரு இலக்கணம் இல்லாத தொழில். காரணம் ஒரு படத்தை இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று யாராலும் கற்றுத்தர முடியாது. இது ஒர...

Be the first to comment on "கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்! – அதிகரிக்கும் இளவயதினர் மரணங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*