எல்லோருடைய வாழ்விலும் கேள்வி என்பது மிக முக்கியமானது. அதனால் நல்லா இருக்கியா, வீட்டுல என்ன பண்ணுறாங்க போன்ற அடிப்படை கேள்விகளை நாம் நம்முடைய நண்பர்களிடம் சுற்றத்தாரிடம் கேட்கிறோம். அதே போல நம்மிடம் வந்து யாராவது கேட்கிறார்களா என்ற ஏக்கமும் நமக்குள் இருக்கும். குறிப்பாக சில பிரபலங்களின் பேட்டியை படிக்கும்போது நாம் எப்போது பேட்டி கொடுக்கும் அளவுக்கு உயர்வோம் என்ற கேள்வி நம் எல்லோர் மனதுக்குள்ளும் வந்து செல்லும். உண்மையிலயே நாம் பேட்டி கொடுக்கும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் நமக்குள் நாமே சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு நம்மால் எப்படி பதிலளிக்க முடிகிறது? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் இங்கே…
- உங்களின் லட்சியம் என்ன ? லட்சியத்துக்காக தீவிரமாகப் போராடுகிறீர்களா? அல்லது இலட்சியத்திலிருந்து விலகி வேறு வழியில் சென்றுகொண்டிருக்கிறீர்களா?
- உங்கள் லட்சியத்தை புரிந்துகொண்டு உங்களின் முயற்சிக்கு துணை நிற்பவர் மற்றும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் யார்?
- உங்களின் லட்சியத்தை நீங்கள் வெளியே சொன்னதும் உங்களை கேலி பண்ணும் விதத்தில் சிரித்தவர்கள் யார்யார்? நீயெல்லாம் இதுக்கு ஆசைப்படலாமா என்று மட்டம் தட்டியவர்கள் யார்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
- நாம் எப்படிபட்டவர் Introvert ஆ Extravert ஆ ?
- அதிகாலை எழும் பழக்கம் இருக்கிறதா? ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் உறங்குகிறோம்? எவ்வளவு மணிநேரம் செல்போன் உபயோகிக்கிறோம்?
- உங்கள் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்களா? ஹெல்மெட் அணிந்து செல்கிறீர்களா ?
- நேரத்திற்கு உணவருந்துதல், பீடி, புகையிலை, மது போன்ற பழக்கவழக்கங்களை தவிர்த்தல் போன்ற செயல்களில் கவனமாக இருக்கிறீர்களா?
- யாருடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கிறீர்கள்? எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுடன் பழகும், உங்களுக்காக ஓடிவரும் நண்பர்களை பெற்றிருக்கிறீர்களா?
- புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறதா? ஒரு வருடத்திற்கு எத்தனை புத்தகங்கள் படிக்கிறீர்கள்? வாசிப்பு பழக்கும் இருக்கும் நண்பர்கள் இருக்கிறார்களா ?
- பாலியல் துன்புறுத்தலுக்கு சிறு வயதில் உள்ளாகி இருக்கிறீர்களா ? நீங்கள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறீர்களா ? இப்போது அதை உணர்ந்து கொள்ள முடிகிறதா?
இன்னும் பல கேள்விகள் இருப்பினும் இந்த பத்து கேள்விகளும் மிக அடிப்படையான கேள்விகள். இந்த கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொண்டு பேட்டி எடுத்துப் பாருங்கள். நிச்சயம் ஒரு நாள் பேட்டி கொடுக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்பீர்கள்.
Be the first to comment on "உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள்!"