கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, படங்களைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார் விக்ரம் பிரபு. கனக்கச்சிதமான தோற்றத்துடன் மிளிர்கிறார் நாயகன். பஞ்ச் டைலாக், காமெடி வசனங்கள், டூயட் பாடல்கள் என்று தலைவலி உண்டாக்க கூடிய விஷியங்கள் எதுவும் இல்லை என்ற போதெ படம் வெற்றிக் கனியை எட்டிவிட்டது என்பது உறுதியாகி விட்டது. அனைத்துக் கதாபாத்திரங்களும் அடக்கி வாசித்திருக்கிறது.
எம். எஸ். பாஸ்கர் தான் படத்தின் நாயகனா? அல்லது விக்ரம் பிரபுவா? அல்லது ஆசாத்தாக நடித்த மிர்ச்சி ஷாவா? என்று வினா எழுப்பும் வகையில் அனைத்துக் கதாபத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருந்தது. குறிப்பாக மொழி, எட்டு தோட்டாக்கள், அரிமா நம்பி படங்களைத் தொடர்ந்து நடிப்பில் எம்.எஸ். பாஸ்கர் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் மிர்ச்சி ஷா! அடடே! என்று வியக்க வைக்கிறது அவருடைய நடிப்பு.
பொட்டு பொட்டுனு நாய்களை சுட்டுத் தள்ளுவது போல என்கவுண்டர் செய்யும் பதவியில் விக்ரம் பிரபு. அவருடைய அம்மாவோ உயிரைக் காப்பாற்றும் மருத்துவர். ஆக செய்யும் தொழிலால் இருவருக்குள்ளும் மனப் பிளவு உண்டாகிறது. எல்லாரையும் போல ஆசாத் என்ற இளைஞன் சட்டத்தால் சுட்டுக்கொள்ளப் பட்டானா? என்பதே கதை. ஒவ்வொரு புல்லட்டும் ஒரு கதை கொண்டுள்ளது என்பதை ஆசாத்தின் நெற்றிப் பொட்டில் இருந்து தொடங்கி ஆசாத்தின் நெற்றிப் பொட்டிலயே முடிக்கிறார்கள்.
” ஒரு மனசுனுக்கு அவனோட நேர்மை தான் போட்டியே… ” ” எத்தன நாளுக்கு தான் காந்தி காமராசர் பேர சொல்விங்க… இத்தன வருசத்துல ஒரு காந்தி காமராசர கூட தயார் செய்ய முடிலனா உன் சட்டம் தான்டா கிரிமினல்… ” ” மூன்றாம் உலகப் போர் எப்பவோ தொடங்கிடுச்சு… அது பெண்களையும் குழந்தைகளையும் மையமாக வச்சு நடந்துட்டு இருக்கு… ” போன்ற வசனங்கள் கைதட்டலை பெறுகின்றன.
குறிப்பாக கிளைமேக்ஸில் எம்.எஸ். பாஸ்கர் பேசும் ஒவ்வொரு வசனமும் நறுக் நறுக் என்று ஆண்களின் சபல புத்தியை குத்திக் கிழிக்கிறது.
இந்தப் படத்தில் கூறப்பட்டிருப்பது போலவே விபச்சாரத்த சட்டப்பூர்வமாக்கனும் என்ற கருவை எழுத்தாளர் யுரேகாவின் இயக்கத்தில் வெளிவந்த சிகப்பு எனக்குப் பிடிக்கும் படமும் சுமந்துள்ளது என்பது கவனிக்கத் தக்க விஷியம்.
” உங்க பொண்ண அவிங்க கற்பழிச்சு கொன்றுக்காங்க… அவிங்க உங்க கைல கிடச்சும் நீங்க ஏன் அவிங்கள கொல்லல… ” என்று ” பெண் ” நிரூபர் கேட்கும் கேள்விக்கு, ” ஒருத்தன ஏன் கொல்லலனு சாதாரணமா கேட்குற அளவுக்கு நம்ம மனசுக்குள்ள அவ்வளவு வன்மம் புதைஞ்சுக் கிடக்கு… ” என்று பாஸ்கர் சார் பதில் சொல்லும் இடத்தில் கண்கலங்காத ஆட்களே இருக்க முடியாது. இசையமைப்பாளர் எல்வி முத்துராஜ் படத்தின் இன்னொரு பலம்.
ஹன்சிகா தேவையில்லாத கதாபாத்திரமாகத் தெரிந்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தை அப்படியே தூக்கினாலும் படத்தில் எந்தக் குறையும் தெரியாது. இதைப் போலவே படத்தில் ஆங்காங்கே சில தேவையில்லாத காட்சிகள், லாஜிக் மிஸ்டேக்குகள் போன்றவை இருந்தாலும் எம். எஸ். பாஸ்கர், மிர்ச்சி ஷா, விக்ரம் பிரபு போன்றவர்களின் உழைப்புக்காக, அற்புதமான கதைக்களத்துக்காக நிச்சயம் ஒரு முறை இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டும்!
Be the first to comment on "மூன்றாம் உலகப் போர் எப்பவோ ஆரம்பிச்சிடுச்சு – துப்பாக்கி முனை விமர்சனம்!"