2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுத்த தியாக உள்ளங்கள்!

Celebrities who gave the content for meme creators in 2018

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தது. இன்று மீம் என்பது கலை வடிவமாகப் பார்க்கப் படுகிறது. பல சமூக மாற்றங்களும் சில மீம்களால் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அவ்வகையில் 2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டன்ட் கொடுத்து சிரிக்க வைத்த சிந்திக்க வைத்த பல விஷியங்களைப் பற்றி பார்ப்போம்.

மீம் கிரியேட்டர்களை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழிசை, எச் ராஜா, ஓபிஎஸ், ஈபிஎஸ், ஸ்டாலின் ஆகியோர் இந்த வருடமும் தங்கள் கடமை தவறாது சிறப்பாக செய்து மீம் கிரியேட்டர்களின் வளர்ச்சிக்கு நல் ஆதரவு புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்ப்புலவர் ஹர்பஜன் :

இந்த வருடம் ஐபிஎல்லில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார் செந்தமிழன் ஹர்பஜன். சென்னை மக்கள் காட்டிய அன்பின் மிகுதியால் தன்னை ஒரு தமிழனாகவே நினைத்துக் கொண்டு அவர் போட்ட டுவிட்கள் எல்லாம் நம்மை வெகுவாக கவர்ந்தது. தமிழ்நாட்டைச் சார்ந்த பாண்டியன் என்ற அவருடைய ரசிகர் தான் அவருக்கு தமிழில் டுவிட் டைப் செய்து கொடுக்கிறார் என்றாலும் தமிழர்களை அவர் மிகுதியாக நேசிக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வருடம் புது வரவாக இருந்தவர் இனி தமிழகத்தின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக கொண்டாடப்படுவார் என்பது உறுதி.

ஐபிஎல் இடமாற்றம் – சீமான் கட்சியினர் எறிந்த செருப்பு :

இந்த வருடமும் விட்டுவிட்டால் காவிரியை நாம் திரும்ப பெறுவது மிகவும் சிரமம் என்று பெரியவர்கள் போராட காவிரி பிரச்சினை குறித்து பேச வேண்டிய இளைஞர்களோ ஐபிஎல் மேட்ச்சில் கவனம் கொண்டிருந்தனர். அதை திசை திருப்பும் பொருட்டு சென்னை மேட்ச் நடக்கும் மைதானத்துக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. கிரவுண்டுக்குள் செருப்பை வீசி பரபரப்பை உண்டாக்கியது யாராலும் மறக்க முடியாதது. செருப்பை எறிந்த புகைப்படத்தை ஜடேஜா தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நாதஸ்வரம் கோபி அண்ணா & ஸ்ர்ர்ரூவ் கரண் அண்ணா :

மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் எனும் இரண்டு தொடர்கள் மூலம் தமிழகப் பெண்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் கோபி. எம்மகன், மூனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் என்று இரண்டு திரைப்படங்களையும் இயக்கியவர். யூடியூப் சேனல்களில் இப்போது பழைய தொடர்கள் எல்லாம் தூசுதட்டி பதிவிறக்கப்பட்டு வருகிறது. அப்படி பதிவிறக்கம் செய்த தொடர்களில் இருந்து மீம் கிரியேட்டர்களிடம் வகையாக மாட்டிக் கொண்டவர் தான் கோபி அண்ணா.

மிகச் சில படங்களே நடித்திருந்தாலும் தன் நடிப்பால் மக்கள் மனதில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறார் நடிகர் கரண். நெட்டிசன்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை சம்பந்தமே இல்லாமல் அவரை இழுத்து வந்து வச்சு செய்தார்கள். அப்படி இருந்தும் இந்த இரண்டு அண்ணன்களும் எந்தக் கோபமான வார்த்தைகளையும் தெரிவிக்கவில்லை என்பது சிறப்பான விஷியம். நெட்டிசன்கள் என்ன தான் கலாய்த்தாலும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என பாசமழை பொழிந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கப்பலில் 60000ம் யானை :

ஆமைக்கறியை வைத்து சீமான் அவர்களை ட்ரோல் செய்தார்கள். இந்த வருடம் அறுபதாயிரம் யானைகளும் அண்ணன் அளந்து விடும் கதைகளும் என்ற பெயரில் அவர் சொன்ன ராஜராஜ சோழனின் பிரம்மாண்ட கடற்படை குறித்த விவகாரம் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டது. இது நெட்டிசன்களின் அறியாமையை பிரதிபலித்தது. கொஞ்சம் தமிழ் இலக்கியம் பக்கம் போங்கடா பொடி பசங்களா என்று கலாய்த்த நெட்டிசன்களுக்குப் பதிலடி கொடுத்தனர் நாதக கட்சியினர்.

ஹைகோர்ட்டாவது மயிராவது :

அஞ்சா சிங்கம் எச். ராஜா அவர்கள் இந்த வருடத்திலும் பெஸ்ட் என்டர்டெயினர் ஆப் த இயர் என்ற விருதை தட்டிச் செல்கிறார். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை கொச்சையாகப் பேசி தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஹை கோர்ட்டை எதிர்த்து, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று வாய்விட்டு மீம் கிரியேட்டர்களுக்கு எப்பவுமே நான் தான் சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபித்தார். இது என் குரல் அல்ல வெளிநாட்டில் டப்பிங் செய்யப் பட்டது என்று சமாளிக்க முயன்று கடைசியாக மாட்டிக்கிட்ட பங்கு என்று அவரை எச்சரித்து அனுப்பியது ஹைகோர்ட்.

வெற்றிகரமான தோல்வி, பாசிச பாஜக ஒழிக… ஆட்டோ ட்ரைவர் :

உண்மையில் பாராட்டத்தக்க மனிதர் தமிழிசை. இளசுகள் இவரை எவ்வளவு தான் கலாய்த்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் டாக்டர் தமிழிசையை பாராட்டியே ஆக வேண்டும். பாசிச பாஜக ஒழிக என்று தான் பயணித்த விமானத்தில் இருந்த பெண் கூவ, உணர்ச்சிவசப்பட்டு அவருடன் சண்டை இழுத்தார். அறிவில்லாம அப்படி பேசிருச்சு வுட்ருங்க என்றவரிடம், அறிவு இல்லாமலாம் இல்ல… அறிவு இருக்குறனால தான் பாஜக ஒழிகன்னு சொல்லிருக்கு என்று தன்னை தானே கலாய்த்துக் கொண்டார். அடுத்ததாக ஆட்டோ ட்ரைவரிடம் வம்பு இழுத்து அது பரபரப்பாக பேசப்பட உடனே அவர் வீட்டுக்கு ஸ்வீட் டப்பாவை தூக்கிக்கொண்டு சமாதானம் பேச ஓடினார். சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக மண்ணை கவ்விவிட அதை ” வெற்றிகரமான தோல்வி ” என்று மீண்டும் தன்னை தானே கலாய்த்துக் கொண்டார்.

குணமா வாயில சொல்லணும்… :

ட்ரெண்டிங் என்ற வார்த்தை இன்றைய பெற்றோர்களை கிறுக்குப் பிடித்து வைத்துள்ளது. குழந்தைகள் எது செய்தாலும் அழகாகத் தான் ( கெட்ட வார்த்தை பேசுவதை தவிர, கண்டவற்றை கையில் தொடுவத் தவிர ) இருக்கும். அதை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி எச்சத் தனமான பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர்களில் இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். முதலில் இந்தப் பெற்றோர்களுக்கு யாரேனும் புத்திமதியை குணமாக வாயில சொல்லுங்க பாவம்!

பக்சிராஜன் சிவக்குமார் :

எங்க பாத்தாலும் செல்பி! எதுக்கெடுத்தாலும் செல்பி! நகைகடை திறப்பு விழா ஒன்றிற்குச் சென்றிருந்த நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த இளைஞனின் செல்போனை ஆவேசமாக தட்டிவிட்டார். அனுமதி இல்லாமல் யாருடனும் செல்பி எடுக்க கூடாது என்ற மிகப் பெரிய படிப்பினையை இந்த சம்பவத்திலிருந்து இளைஞர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பது உண்மை. 2.O படத்தில் செல்போன்களின் எதிரியாக இருந்த பக்சி ராஜன் கதாபாத்திரத்தோடு சிவக்குமாரை ஒப்பிட்டு ட்ரோல் செய்தார்கள் நம்ம நெட்டிசன்கள். அதைப் பற்றி சூர்யா ஒரு கட்டுரை எழுதி இருந்ததை யாரும் கண்டுகொள்ள வில்லை என்பது வருத்ததிற்குரிய விஷியம்.

அப்பா எங்கே :

இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த சிரத்தைக்கு உள்ளானார்கள். பல நூறு கிமீ தள்ளி உள்ள மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துவிட அலைச்சலால் ஒரு மாணவனின் அப்பா மாரடைப்பால் உயிரிழந்தார். தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவன், அப்பா எங்கே என்று கேட்க ஒட்டுமொத்த தமிழகமும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றது.

விஜய் ரசிக குஞ்சுகள் :

நடிகர் விஜய்யின் படத்தில் ஒரிஜினல் கதை இருக்கிறதோ இல்லையோ சர்ச்சைக்குரிய காட்சிகள் நிரம்பி இருக்கும். பண்றத எல்லாம் பண்ணிட்டு பால் குடிக்குற பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொள்ளும் யுத்தியை எங்கிருந்து தான் கற்றுக் கொண்டாரோ! வருசாவருசம் எதாவது ஒன்றைப் பற்றி பேச வைத்து விடுகிறார். சர்கார் படத்திற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க உடனே கொதித்து எழுந்தார்கள் அவருடைய ரசிக குஞ்சுகள். அருவாவை நீட்டி ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் கெட்ட வார்த்தையால் திட்டி வீடியோக்கள் போட்டு வகையாக வாங்கி கட்டிக்கொள்ள இன்னொரு பக்கம் இலவச பொருட்கள் இனி இருக்க கூடாது என்று மிக்சி கிரைண்டர்களை தூக்கி வீசி தாங்கள் எவ்வளவு பெரிய அரவேக்காடுகள்னு பாத்தியா! கெத்துடா! என்று முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட்டனர்.

வைரமுத்து :

இந்த ஆண்டு இவருக்கு சோதனைகள் நிரம்பிய ஆண்டு என்றே கூற வேண்டும். முதலில் ஆண்டாள் பற்றிய விவகாரத்தில் சிக்கிக் கொண்டார். அதை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் பாரதியார் பாடலில் தொடங்கி ஒம்மாள என்று திட்டிய ஐயராகட்டும், குறிப்பிட முடியாத வார்த்தைகளால் வைரமுத்துவை திட்டித் தீர்த்த நித்யானந்தாவின் சிஷ்யைகள் ஆகட்டும் அத்தனையும் அடக்கருமமே… என்ன எலவுடா ரகம். ஒரு பிரச்சினையில் இருந்து மீள்வதற்குள் கலைஞர் மரணம் அவரை தள்ளாட வைக்க பின்னாடியே இன்னொரு குடைச்சலை தந்தார் பாடகி சின்மயி. ஸ்ஸப்பா… இன்னும் எத்தனை… என்று சலிக்க வைத்துவிட்டது வைரமுத்து பற்றிய சர்ச்சைகள்.

பிஜிலி ரமேஷ் :

நான் பாட்டுக்கு சிவனேனு தானடா போய்ட்டு இருந்தேன்… என்று ஒயின்ஷாப்பில் இருந்து வீட்டிற்கு அரைகுறை நிதானத்துடன் ஒரு ஓரமாகச் சென்றுகொண்டிருந்த ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷைப் பிடித்து வம்பு இழுத்து பிரபலமாக்கி விட்டது பிளாக்ஷீப் குழு.

பிலிப்சு :

தமிழக அரசை வாழ வைக்கும் தெய்வங்களில் மிக முக்கியமானவர்களான இரண்டு குடிமகன்கள் ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்து கொள்ளும் வீடியோ இந்தாண்டு பெரிய அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோக்களில் ஒன்று.

பிரியா வாரியர் :

கண்ணடித்தால் போதும் உன்னை கண்டமேனிக்கு ட்ரெண்ட் ஆக்குவோம் என்று விடாப்பிடியாக இந்தப் பிள்ளையை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். கைவிரல்களால் துப்பாக்கி சுடுவது, இருபக்க புருவங்களையும் உயர்த்திக் காண்பிப்பது என்று கவர்ந்திழுக்கும் செயல்களால் வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருக்கும் தமிழக இளைஞர்களை ஒரு வழியாக்கி விட்டார்.

சேகுவாரா பிடல்காஸ்ட்ரோ :

தமிழகத்தின் சேகுவாரா பிடல்காஸ்ட்ரோவான ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஹெலிகாப்டரில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு நிலத்தை வேடிக்கைப் பார்த்த காட்சி பெரிய அளவில் ட்ரோல் செய்யப் பட்டது. இது ஒருபுறமிருக்க சர்கார், நோட்டா என்று இரண்டு திரைப்படங்கள் இவர்களை வகையாக செய்தது.

எனக்கு ஒரு நிமிசம் தலைசுத்திருச்சு :

கொள்கை என்னானு கேட்டாங்க… எனக்கு ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு… என்று இந்த வருடத்தின் முதல்முறையாக கண்டன்ட் தர ஆரம்பித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். அதை அடுத்து வேங்கையன் மகன் ஒத்தைல நிக்கேன் தில்லிருந்தா மொத்தமா வாங்களே… நான்தான்பா ரஜினிகாந்த்… ஏய் ஏய்… வேற எதாச்சும் கேள்வி இருக்கா தேங் யூ சோ மச்… எந்த ஏழு பேர்… கஜா புயல பாக்க நான் இன்னும் கட்சி ஆரம்பிக்கலயே… என்று தொடர்ச்சியாக மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டார் தலைவர்.

பிக்பாஸ் சங்கடங்கள் :

முதல் பாகம் அளவுக்கு இல்லை என்று பலரால் கண்டுகொள்ளப் படாத நிகழ்ச்சி.
பாலாஜி நித்யாவின் வெங்காயப் போர்,
ஐஸ்வர்யாவின் மிரட்டல், யாஷிகாவின் ஆபாசம், சென்றாயனின் நான் அப்பா ஆயிட்டேன் போன்ற சில சில விஷியங்களே பிக்பாஸை உருட்டிக் கொண்டிருந்தது. மூன்றாம் பாகம் வருவதாக சொல்கிறார்கள்! சொம்பு தான்!

கலைஞர் இறப்பு கேப்டன் கண்ணீர் வீடியோ :

இந்தாளு எப்ப போவான்… எத்தன நாளு லீவு கிடைக்கும் என்று கலைஞர் மரணத்திற்காக காத்திருந்து ஸ்பைடர் சுடலைகளாக நாம் மாறிய தருணம். மெரினா பீச்சில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா… என்ற பதட்டத்தை உண்டாக்கி கடைசியில் மெரினா சுடுகாடாக மாறிவிட்டது என்ற பலருடைய விமர்சனம் வரை வந்துநின்ற நிகழ்வு. கலைஞரின் மரணம் தன்னை உலுக்குகிறது என்று கேப்டன் கண்ணீர் வடித்த வீடியோவை நினைத்தால் இன்றும் அழுகை வருகிறது.

அனிதா ராஜேந்திரன் :

செய்தி வாசிப்பாளரான இவர் புடவையில் தகதகவென இருக்க நம்ம பையன்கள் ஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத, வீண் விளம்பரம் தேடாத அனிதாவோ வழக்கம்போல தன் பணியில் கவனம் செலுத்து வருகிறார்.

கதாபாத்திரங்கள்:

மஞ்ச சுடிதார் ஜானு, பரியேறும் பெருமாள் தாத்தா, கிப்ட் கொடுக்கும் கிறிஸ்டோபர் என்று சினிமா கதாபாத்திரங்களையும் நெட்டிசன்கள் கலாய்த்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஏழைத்தாயின் மகன் :

No comments

ஸ்டாலின் :

வைரமுத்துவை போலவே இவருக்கும் இது சோதனையான ஆண்டே. ஸ்டாலின் பழமொழிகள், தந்தை மரணம், கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பிரியாணி கடை சண்டை, பியூட்டி பார்லர் சண்டை, பஜ்ஜி கடை சண்டை என்று பல தருணங்களில் மனுசன் நொந்துவிட்டார்.

வருண் ராஜேந்திரன் vs ஏஆர் முருக தாஸ்

கதை திருட்டு சர்ச்சை, அரசு இலவசப் பொருட்களை தூக்கி எறியுங்கள் என்ற சர்ச்சை என்று முருகதாசுக்கும் இது கடுப்பான ஆண்டு தான். நடிகரோ கம்முனு உம்முனு ஜம்முனு இருந்துகொண்டார்.

அம்மா சிலை, கலைஞர் சிலை :

தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளின் இறப்பையொட்டி அவர்களுக்கு சிலை செய்கிறேன் என்ற பெயரில் காமெடி செய்திருந்தார்கள் அவர்களுடைய கட்சி உறுப்பினர்கள்.

ஓரினச் சேர்க்கை, கள்ளக்காதல் :

இந்த வருடத்தில் மிக முக்கியமான நிகழ்வுகள் ஓரினச் சேர்க்கை தடை நீக்கம் மற்றும் கள்ளக் காதல் குற்றமற்றது என்ற இரண்டு சட்டங்கள். அய்ய ச்சி என்ன இது… என்று இந்த சட்டங்களை புரிந்துகொள்ளாத நெட்டிசன்கள் இதனை வெகுவாக கலாய்த்தார்கள்.

எம்ஜிஆர் தமிழ் :

கழுத்தில் குண்டடி பட்ட பிறகு எம்ஜிஆரின் குரலில் மாற்றம் ஏற்பட்டது. பேசும் தமிழ் சற்று மாறியது. இதனை தோண்டி எடுத்து அவருடைய தமிழை கலாய்த்து தள்ளினார்கள் நெட்டிசன்கள்.

தோசையில் சாதி இருக்கு :

பெரியாரிஸ்ட் வே. மதிமாறன், தோசைல கூட சாதி இருக்கு என்று கூறிய வீடியோ பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானது. வழக்கம் போல நெட்டிசன்கள் புரிந்துகொள்ளாமல் இதனையும் கலாய்த்து தள்ளினார்கள்.

2018ன் பிரபல பாடல்கள் :

* ராமரின் ஆத்தாடி என்ன உடம்பீ
* இன்கேம் இன்கேம் காவேலே ( கீதா கோவிந்தம் )
* மொராக்கா மாட்ராக்கா ( லட்சுமி )
* வாயாடி பெத்த புள்ள ( கனா )
* பல்டி பக்குற டர்ல விடணும் பல்தே ( சர்கார் )
* கல்யாண வயசு தான் வந்துடுத்துடி ( கோலமாவு கோகிலா )
* நீயும் நானும் அன்பே… ( இமைக்கா நொடிகள் )
* தங்க கத்தி வெள்ளிக் கத்தி ( சவரக்கத்தி )
* காதலே… காதலே… தனிப்பெருந்துணையே… ( 96 )
* ரவுடி பேபி ( மாரி 2 )

சிரிக்க வைத்த ட்ரெய்லர்கள் :

தாய் இல்ல பேய், பொறுக்கி இல்ல பூதம் என்ற வசனத்தால் சாமி 2 ட்ரெய்லர் கலாய்க்கப்பட்டது. எக்எல் வண்டியில் வீலிங் செய்த சண்டக்கோழி 2 ட்ரெய்லர், If u r bad, im ur dad என்ற வசனம் இடம் பெற்ற மாரி2 போன்ற படங்களின் ட்ரெய்லர்கள் மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனி தந்தது.

பிரபல மீம் டெம்ப்ளேட்கள் :

* நம்ம பய தான் கிர்ர்ச்
* பொம்பள சோக்கு கேக்குதோ
* தம்மாத்துண்டு ஆங்கர் தாண்டா அவ்ளோ பெரிய கப்பல தாங்குது

Related Articles

பூ ராமு” – நம் மனதில் நீங்கா... " இவர் தான் உன் அப்பாவா... "" ஆமா சார்... ""இப்படியொரு அப்பாவியான அப்பாவ வச்சிக்கிட்டு ஆள மாத்தி கூட்டி வந்துருக்கியேடா... "" உனக்கொரு விஷ...
உங்கள் ஊர் பேருந்து நிலையம் சுத்தமாக இரு... சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில் " ஒரு நாடு எப்படி இருக்குங்கறத ரோட வச்சே சொல்லிடலாம் "...
நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்க...
நடிகை ஷாலினி பாண்டே மற்றும் நடிகை இந்துஜ... நடிகை ஷாலினி பாண்டே :பிறப்பு செப்டம்பர் 23, 1993 மத்திய பிரதேசை சேர்ந்த ஜெபல்பூர் தான் ஷாலினிக்கு சொந்த ஊர். தெலுங்கில் வெளியாகி தென்னிந்த...

Be the first to comment on "2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுத்த தியாக உள்ளங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*