மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள்! – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்!

Fans of mentally challenged mass heroes!

மெண்டலுங்கப்பா… எல்லாருமே மெண்டலுங்கப்பா… என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பணிச்சுமை, குடும்பத்தில் புகைச்சல், காதல் தோல்வி,  ஏமாற்றம், நண்பர்கள் துரோகம் என்று எல்லோருமே கிட்டத்தட்ட மெண்டல்களாகத் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறோம்.

இவர்கள் எல்லாம் ஒருபுறமிருக்க நாங்க மெண்டலுக்கு எல்லாம் மெண்டல் என்று சொல்லி அடிக்கும் சில மனிதர்களும் இந்ண சமூகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் ரஜினி வெறியன், விஜய் வெறியன், அஜித் வெறியன், சிம்பு வெறியன் போன்றோர். நான் ரசிகன் அல்ல வெறியன் என்று சொல்லிக் கொண்டு திரியும் இளசுகள் பெருசுகள் செய்யும் அட்டூழியங்கள் இருக்கிறதே ஸ்ஸப்பா! போதாக்குறைக்கு டிக்டாக் வேறு.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது பட்டாசு வெடித்து தாரை தப்பட்டையோடு திரையரங்கிற்குள் நுழைவது காலங்காலமாக நடந்துவரும் கொண்டாட்டமான செயல். இடையில் இந்த கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் முறை எப்படி வந்தது என்பதுதான் தெரியவில்லை. கட்அவுட் வைப்பது விளம்பரத்திற்காக. அந்த கட்அவுட்டிற்கு சம்பந்தமே இல்லாமல் பால் ஊத்துவது எதற்காக காலணா பிரயோசனம் இல்லை. இதை சமீபகாலமாக பின்பற்றி வரும் ரசிகர்கள் ஏன் சிந்திப்பதில்லை.

கட் அவுட் கட் அவுட் என்று வெறிப்பிடித்து திரிகிறார்கள் இளைஞர்கள். அத்தனையும் சாலையோரமே வைக்கப் படுகிறது. வாகனத்தில் சென்றுகொண்டிருப்போர் மீது ஒன்று சரிந்துவிழுந்தால் என்ன ஆகும்? இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதே கிடையாதா?

அரசியல் அறிவிப்பு வெளியிட்டது முதல் ரஜினி ரசிகர்கள் கட்அவுட்டிற்குப் பாலாபிஷேகம் செய்வதை நிறுத்திக்கொண்டார்கள். விஜய்யோ மெர்சல் படத்தில் பாலாபிஷேகம் வேண்டாம் என்று அன்புக் கட்டளை விதித்திருந்தார். அதை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. அஜித், சிம்பு ரசிகர்களோ எதற்கும் அடங்காதவர்களாக இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தற்போது சிம்பு வேறு அண்டாவில் பால் அபிஷேகம் செய்ய சொல்லி தன் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பொய் பல பொய்களை உருவாக்கும் என்பது போல ஒரு மெண்டல் பல மெண்டல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக சிம்புவின் ” வந்தா ராஜாவா தான் வருவேன் ” படம் வெளியாகும் தினத்தில் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடக்கத் தான் போகிறது. இந்த வெறியன்களின் அம்மா அப்பா தான் பாவம்!

Related Articles

சன்ரைர்ஸ் ஹைதராபாத் (SRH) ஐபிஎல் 2018 அண...  வரிசை எண் போட்டி எண் தேதி சன்ரைர்ஸ் ஹைதராபாத் போட்டிகள் நேரம் இடம்1 4 9-ஏப்ரல் ஹைதராபாத் vs ராஜஸ்தான் 8:00 PM ஹைதர...
தீவிரவாதியை நல்லவனாக்க பார்க்கிறாரா இயக்... தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனர் வெற்றிமாறன். அவர் நவம்பர் 3ஆம் தேதி வந்த ஆனந்த விகடன் இதழில் தன்னுடைய அடுத்த படமான விடுதலை படம் குறித்து நிறை...
இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்!... இன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு...
நூறு சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் மு... மின் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உலகம் முழுவதும் மின் சக்திக்கு உண்டான மாற்று என்ன என்பதை அடிப்படையாக வைத்து ப...

Be the first to comment on "மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரசிகர்கள்! – கட் அவுட்டும் பால் அபிஷேகமும்!"

Leave a comment

Your email address will not be published.


*