எல்கேஜி பையங்கூட சிஎம் ஆகிடலாம் தமிழகத்தில்! – எல்கேஜி விமர்சனம்!

LKG movie Review

ஜல்லிக்கட்டு புரட்சியின் போது மக்களுடன் மக்களாக நின்ற திரைப்பிரபலங்களில் முக்கியமானவர்கள் ஹிப்ஹாப் தமிழா, ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே. பாலாஜி. ஹிப்ஹாப் தமிழா தன் பங்கிற்கு மீசைய முறுக்கு எனும் படத்தை தந்து தன்னை ஹீரோவாக உயர்த்திக் கொண்டார். ராகவா லாரன்ஸ் பற்றி சொல்லவே தேவையில்லை, தனக்குத் தானே மக்கள் சூப்பர்ஸ்டார் என்று பெயர்சூட்டிக் கொண்டார். தற்போது ஆர். ஜே. பாலாஜியும் களத்தில் குதித்து உள்ளார்.

தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்கு யார் வேண்டுமானாலும் அதாவது எல்கேஜி பையன்கூட அரசியலுக்கு வரலாம் என்பதை மையமாக கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக  ட்ரெண்டிங்கில் இருந்த அத்தனை விஷியங்களையும் கலக்கி கமர்சியல் படமாக தந்துள்ளார் எழுத்தாளர் பாலாஜி.

கலாய்… கலாய்… கலாய்… படம் முழுக்க இதே தான் கான்செப்ட். ஹிப்ஹாப் தமிழாவில் இருந்து ஜூலி வரை அத்தனை பேரையும் கலாய்த்து கிழித்து தொங்கவிட்டுள்ளார். ஆர். ஜே. பாலாஜி அரசியல்வாதிகளை நக்கல் செய்யும் இடங்களில் எல்லாம் சோ வாக தெரிகிறார். ஒரு காட்சியில் சோ நடித்த முகமதுபின் துக்ளக் காகவே மாறி குதித்து குதித்து நடந்து நான் தான் அடுத்த சோ என்பதை உறுதியும் செய்துவிடுகிறார்.

தாய் ஒலி என்பது தான் படத்தின் முதல் கலாய். இங்கு தொடங்குகிறது ரசிகர்களின் கரகோசம். அதன்பிறகு பல இடங்களில் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.

அப்பா நேர்மையான அரசியல்வாதி அதனால் அவர் பிழைக்கத் தெரியாதவர் என்ற காட்சி சூதுகவ்வும் படத்தையும், அப்பா தொட்டதற்கெல்லாம் தமிழ் இலக்கியம் பேசி சாகடிப்பார் என்ற சீன் மான்கராத்தே படத்தையும் நினைவூட்டுகிறது.

வீரத்தமிழச்சி என்று ஜூலி பெயரை வைப்பது, ஆண்குழந்தை எனத் தெரிந்ததும் ஆரவ் என பெயர் வைப்பது, ப்ரொபசரை பார்த்து கில்மா விஷியம் விசாரிப்பது, தண்ணிப் பிரச்சினைக்கும் ஐபிஎல்க்கும் என்ன சம்பந்தம்னு கேட்பது, கவுர்மெண்ட் ஸ்கூல்க்கு சப்போர்ட் செஞ்சு oxford english schoolங்கற நிஜ ஸ்கூலை கலாய்த்தது, கருப்பு சட்டை காவி வேட்டி ரெண்டுங்கெட்டான் அரசியல்வாதிகளை கலாய்த்தது போன்ற காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பொளக்கிறது.

இது போதாதென்று காமராசர், கலைஞர் போன்ற பெரிய தலைகளையும் ஒற்றை ஆளாக கலாய்த்து தள்ளியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி நீங்க வேற லெவல்!

இசை, எடிட்டிங், கேமரா போன்றவை பட்ஜெட்க்குத் தகுந்தாற்போல இருக்கிறது. நாஞ்சில் சம்பத்க்கு நடிகராக நல்ல அறிமுகம். மீம்களை ரசிப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். அப்டேட்டில் இல்லாதவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்பது கேள்விக்குறியே!

Related Articles

சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...
மனநலம் பாதிக்கப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ரச... மெண்டலுங்கப்பா... எல்லாருமே மெண்டலுங்கப்பா... என்ற மொட்டை ராஜேந்திரனின் வசனத்தைப் போல தமிழகத்தில் நாளுக்கு நாள் மெண்டல்கள் அதிகரித்து வருகிறார்கள். பண...
கவுண்டமணியின் 49-O திரைப்பட வசனங்கள்!... " பிரச்சினை இல்லாத விவசாயி எவன் இருக்குறான்... " " எவன தலைவராக்குறதுனு உங்களுக்கும் தெரியல... தலைவன்னா எப்டி நடந்துக்கனும்னு அவனுக்...
வழக்கு விவரங்களை பொது மக்களுக்குத் தெரிவ... தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கோடி கணக்கில் உள்ளது. அவற்றையெல்லாம் தீர்த்து வைக்கத் ...

Be the first to comment on "எல்கேஜி பையங்கூட சிஎம் ஆகிடலாம் தமிழகத்தில்! – எல்கேஜி விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*