ரிங்டோன்களாக இருந்த தனி ஒருவன் வசனங்கள்!

Thani Oruvan dialogue

* “உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்”

* ” டேய் செங்கலு… உன் பொண்டாட்டிக்கு பிரசவ வலி வந்துடுச்சி ஆஸ்பத்திரிக்கு போவனும் இறங்கி வாடா… “

” ஆஸ்பத்திரிக்கு போனா கொடிய யார் கட்டுவா… “

” உன் தலைவன வந்து கட்ட சொல்லுடா… “

” ஏய்… என் தலைவன பத்தி பேசுற தகுதி உனக்கு கிடையாது… “

* ” இந்த தொகுதில யாருய்யா அதிகம் இறங்கி வேல செய்றது… “

” ந்தா ஓடிவரானே செங்கல்வராயன் அவன்தான் தலைவரே… “

” என்னய்யா இது செங்கல்லு சிமெண்ட்ன்னு… “

* ” நீ சாதாரண தொண்டன் இல்லையா… ஒன்ன மாதிரி ஒவ்வொரு செங்கலா பொறுக்கித் தான் கட்சிங்கற இந்தப் பலமான கோட்டைய கட்டிருக்கேன்… “

* ” சொன்னா கேக்குறானா… கட்சி கட்சினு எங்கள ஏன்டா சாகடிக்குற… ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னே பனிக்குடம் ஒடைஞ்சு ரோட்லயே பொறந்துரும் போலருக்குடா பாவி மவனே… “

” என் தொண்டனோட பொண்டாட்டிக்கு நடுரோட்ல குழந்த பொறக்குறதா… எனக்கு என் கட்சிய விட என் தொண்டன் குடும்ப நலன்தான்யா முக்கியம்… “

* ” டேய் செங்கல்வராயா பார்றா… உன் பையன்ன பொறக்கும்போதே சைரன் வச்ச கார்ல பொறந்திருக்கான்… பெரிய யோக காரன் தான் உன் பையன்… “

* ” கொலப் பழிய ஒத்துக்கப் போறியாப்பா… “

” நான் ஒத்துக்குறேன்… சிறுவர் ஜெயில்ல சில வருசம் தான் தண்டனை… அந்த எம்எல்ஏ போஸ்ட்ட நீ கேளு… எம்எல்ஏ ஆயி என்னை சீக்கிரமா வெளிய எடுப்பா… நான் ஏழையா பொறந்தது உன் தப்பு… நான் ஏழையாவே செத்தன்னா அது என் தப்பு… அந்த தப்ப மட்டும் நான் செஞ்சுற மாட்டேன்பா… என்ன ஒத்துக்குறியா… வெளில போய் சொல்லு எங்கப்பாவுக்குத் தான் சீட்டுன்னு…”

* ” அம்மா அம்மா இந்த சித்தி சூப்பரும்மா… “

* ” இத்தன நாளா நம்ம தூக்கம் பாக்காம பண்ணுன ஒவ்வொரு விஷியத்துக்கும் பலன பாக்கும்போது இன்னும் ஆயிரம் விஷீயம் இப்படி பண்ணனும்னு தோனுதுடா… “

* “போலீஸ் ஆகறதுக்கு பதவியோ பிரமாணமோ தேவயில்ல… என்னிக்கு நாம போலீஸ் ஆகணும்னு நெனச்சமோ அன்னிலருந்தே போலீஸ் தான்… “

* ” இது என்ன தெரியுமா நம்ம நாட்டுக்கு ஜெனரிக் மெடிசன் கொண்டு வர்றதுக்கான ஜிஓ. நம்ம கவுர்மெண்ட்டும் வெளிநாட்டுக் கம்பெனியும் இதுல ரொம்ப  அக்கறையா இருக்காங்க… இது மட்டும் இம்ப்ளிமெண்ட் ஆயிடுச்சுனு வெச்சுக்குங்க… பார்மா இன்டஸ்ட்ரிலயே ஒரு பெரிய ரெவல்யூசன் நடக்கும்… 1000 ரூபாய் மெடிசன் வெறும் பத்து ரூபாய்க்கு கிடைக்கும்… ஒவ்வொரு ஏழை வயித்துலயும் பால வார்த்த மாதிரி இருக்கும்… என்னடா இது சந்தோசமான விஷியம் மாதிரி சொல்றாரு இவருன்னு நினைக்கிறிங்களா… இங்க எறியுதுய்யா… இம்மியடிட்டா இத தடுக்கலனா என்ன நடக்கும்னு நான் சொல்ல தேவையில்ல… உங்களுக்கே புரிஞ்சிருக்கும்… நிறைய பேரு வாயடைக்க வேண்டி இருக்கும்… மெடிக்கல் காலேஜ்ல டொனேசன் வாங்கனது, கிட்னி திருடி வித்ததுனு சேத்து வச்சதயெல்லாம் கொண்டுவந்து கொட்டுங்க… இல்லன்னா இதுவரைக்கும் சம்பாதிச்சதும் போய்டும் இனிமே சம்பாதிக்கறதும் போய்டும்… “

* ” 10 வருசம் முன்னாடி நான் ஒரு us சிட்டிசன மீட் பண்ணேன்… அவர்கிட்ட பேசிட்டு இருக்கும்போது நான் சொன்னேன்… எங்களுக்கு எதாவது உடம்புக்கு முடியலன்னா நாங்க பெரிய பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு போவோம்ன்னு… அதக் கேட்ட உடனே அவர் முகத்துல அப்படியொரு அதிர்ச்சி… அது எப்டி ஒரு பிரைவேட்ஆர்கனைசைசேன்னால கவுர்மெண்ட் கொடுக்கிற பெசிலிட்டஸ்சயும் இன்ப்ராஸ்ட்ரச்சரையும் கொடுக்க முடியும்னு கேட்டாரு… கன்னத்துல அறையுற மாதிரி இருந்துச்சு… இந்த ஒரு முமொண்ட் என் லைப்ல பெரிய ஒரு இம்பேக்ட்ட ஏற்படுத்துச்சு… “

* ” மும்பை தாஜ் ஹோட்டல் கேசுல சிக்குனவனுக்கு வயசு 18, டெல்லி ரேப் கேசில் இன்வால்வ் ஆன பையனோட வயசு 17, மும்பை சிட்டியில் கூலிப்படை கொள்ளை அடிக்கறவன் வயசு 16, 17. கெட்டவன் தப்ப கத்துக்குறதுக்கோ தப்பு செய்றதுக்கோ நேரம் சமயம் எதுவுமே பாக்க மாட்டான்… நல்லவன் நல்லது பண்ணனும்னு நினைக்கறவன் மட்டும் நேரம் சமயம் சூழல் எல்லாத்துக்காகவும் காத்துட்டு இருப்பான்… “

* ” டேய் வெளிய 40 பேரு வந்தாலும் 4 நிமிசத்துல அடிச்சுத் தூக்கிப் போட்டுட்டு போய்டுவேன்… ஆனா ஒரு ஆபிசர் கேள்விக்கு பதில் சொல்னனும்னு நினைச்சாலே டென்சனா இருக்குடா… “

* ” ஒரு விஷியத்த ஆரம்பிச்சா அத முழுசா முடிக்கணும்டா… “

* ” நீங்க இஷ்டப்படி கூத்தடிக்க பப்ளிக்குங்கறது வளந்து கெட்டவங்க மட்டும் இல்ல… இனி வளந்து சாதிக்கப் போறவங்களயும் சேத்து தான்… அவங்க மனசுல நல்லத மட்டும்தான் விதைக்கனும்… “

* ” போலீஸ்னா நாட்டக் காப்பாத்துவாங்க… தப்பு நடக்காம தடுப்பாங்க… அப்றம் ஒருத்தருக்கொருத்தர் சண்ட வராம பாத்துப்பாங்க… “

* ” நீங்க பண்ணதெல்லாம் பாக்கும்போது அறையனும் போல இருந்துச்சு… ஆனா அதுவும் தப்பான உதாரணம் ஆயிடும்னு தான் விட்டேன்… பெண் சுதந்திரங்கிறது ஆண்கள் பன்ற தப்ப மட்டுமே வரிசை கட்டி பன்றது இல்ல… அது வேற… “

* ” எப்பவுமே எல்லாரும் என்ன இம்ப்ரெஸ் பண்ணித்தான் பழக்கம்… நான் யாரையுமே இம்ப்ரெஸ் பண்ணி பழக்கம் கிடையாது… அது நம்ம ஏரியாவும் இல்ல… உனக்காக என்ன மாத்த ட்ரை பண்ணி அது ஏதோ தப்பாகி சொதப்பலாயி நான்லாம் மாற ஆளே கிடையாது… மாறனும்னு நினைக்கறதே பெரிய விஷியம்… எல்லாத்தயும் பளிச்சுனு புரிஞ்சுக்கிறவன் நீ… இத மட்டும் உன்னால புரிஞ்சுக்க முடிலயா… ஐ திங் ஐம் இன் லவ் வித் யூ… எனக்கு ப்ரோபஸ்ஸெல்லாம் பண்ணத் தெரியாது… எதுவும் முன்னபின்ன இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ… மனசுல இருந்தத அப்டியே சொல்லிட்டேன்… “

” ப்ரோபஸ் பண்ணத் தெரியாதுன்னு சொன்ன… இவ்ளோ அழகா லவ்வ ப்ரோபஸ் பண்ணதா நா கேள்வி பட்டதே இல்ல… லவ்வோட வேல்யூ என்னன்னு எனக்கு நல்லாத் தெரியும்… ஆனா அந்த வேல்யூக்கு ரெஸ்பெக்ட் கொடுக்க முடியாத இடத்துல நான் இருக்கேன்… “

* ” ஏன்டா லைப் புல்லா எங்கட்ட இருந்து ஓடிட்டே இருப்பியா… இதுக்கெல்லாம் ஒரு எண்டே கிடையாதா… “

” லைப் புல்லா என்ன விடாம தொரத்திட்டே இருப்பியா இதுக்கொரு என்ட் கிடையாதா… “

* ” ஒரு உயிருங்கறது உனக்கு அவ்வளவு சாதாரணமான விஷியமாடா… “

* ” கம்பீரமா அடிக்க வேண்டிய சல்யூட். அவனுக்குப் பயந்து மூஞ்ச மறைக்க பயன்பட்டுச்சத நினைச்சா … “

* ” ஒரு உண்மையான கேஸ் தீர்ப்பாயி வர்றதுக்கு 40 வருசம் ஆகுது… ஆனா ஒரு பொய்யான கேஸ்சுல நிராபராதின்னு

ஏமாத்தி ஒருத்தன் நாலே நாள்ல வெளிய வர்றான்… “

* ” இப்பக் கூட நீ பேசறதெல்லாம் என் காதுல விழாம உனக்குப் பின்னாடி நடக்கிற அநியாயம் கண்ணுக்குத் தெரிதுல்ல அந்த நோய் தான் எனக்கு… “

* ” உன் நண்பன் யாருன்னு தெரிஞ்சா உன் கேரக்டர பத்தி தெரிஞ்சிக்கலாம்… உன் எதிரி யாருன்னு தெரிஞ்சா உன் கெப்பாசிட்டியப் பத்தி தெரிஞ்சிக்கலாம்… “

* ” எல்லா பெரிய விஷியத்துக்கு முன்னாடியும் நம்ம சாதாரணமா நினைக்குற சின்ன விஷியங்கள் இருக்கு.,, “

* ” அரசியல்வாதிங்கள ஆட்டிப்படைக்கிறதே வியாபாரிங்க தான்… “

* ” எவன் ஒருத்தன அழிச்சா நூறு கெட்டவன் அழியுறானோ அவன அழிக்கனும்… “

* ” தப்ப சரியா செஞ்சா தப்பிச்சுக்கலாம்னு கெட்ட எண்ணத்த விதச்சிருக்கானுங்க… “

* ” வாழ்க்கைல ஒரேஒரே ஐடியாவ வச்சுக்குங்க… அந்த ஐடியாவையே வாழ்க்கை ஆக்கிக்குங்க… “

* ” 5% ஏழை நோயாளிங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கவே ஹாஸ்பிட்டல்ல இடமில்ல… மீதி 95% க்கு வெயிட்டிங் ஸ்டேஜ்லயே கேன்சர் சிவியர் ஆயிடுது… சிவியர் ஆன ஸ்டேஜ்க்கு இந்தியால மருந்து கிடையாது… எல்லாம் பாரின் ட்ரக்ஸ் தான்… இந்த ஒரு விசயத்த வச்சுக்கிட்டு தான் எல்லா பாரின் கம்பெனிசும் இந்தியன் கம்பெனிசோட டையப் பண்ணிக்கிட்டு ஆட்டம் போட்றாங்க… “

* ” உனக்காக உயிரை கொடுப்பேன்னு சொன்னா உயிரை மட்டுமே கேப்பியாடா… “

* ” லவ் லவ்வுனு தொந்தரவு பண்றாளே எங்க ஒரேயடியா பேக்கப் பண்ணி அனுப்ப முடிவு பன்னிட்டியோன்னு நினைச்சேன்… பரவால சாருக்கு என் மேல கொஞ்சம் அக்கறை இருக்கு…

* ” சாவுன்னா என்னான்னு தெரியாதப்பவே நான் அதப் பாத்து பயந்தது இல்ல… இப்ப அது கிட்ட வரைக்கும் என்ன கூட்டிப்போய் காமிச்சிட்டான்… இனிமே நான் எதுக்குடா பயப்படனும்… “

* “கேட்டு செய்ங்கன்னு சொன்னதுக்காக கேட்டு கேட்டு கேட்டு செய்யனுமா… “

* ” உன்ன கேட்காம நானா சுயமா முடிவெடுத்து தப்பு பண்றதவிட உன்னக்கேட்டு தப்பு பண்ணா அதுல ஒரு ஆனந்தம்… அப்பாவ நீ அப்டித்தான வளத்து வச்சிருக்க.., நீ சின்னப் பிள்ளையா இருக்கறபோது அப்பாவுக்கு 3 மந்திரங்கள் சொல்லிக் கொடுத்த… ஒன்னு, நீ எங்க போனாலும் ரெண்டு இஞ்ச் தலைய தூக்கிட்டு நெஞ்ச வெடாச்சிக்கிட்டு போ… ரெண்டு, சிரிக்கறதுக்கு அவசியம் இருந்தாக் கூட எந்த இடத்துலயும் பல்ல காமிச்சராத… மூனு, நானா சொல்ற வரைக்கும் நீயா சுயமா முடிவெடுத்து ஒரு வார்த்தை பேசிடாத… அப்பத்தான் இந்த உலகம் உன்ன மேதாவின்னு கொண்டாடும்… தமிழ்நாட்ல இருக்குற முக்கால்வாசி அறிவாளிங்க அந்த ரூட்ல தான் வண்டி ஓட்டிட்டு இருக்காங்கன்னு சொல்லிக் கொடுத்த… அதத்தான அப்பா இன்னிக்கு வரைக்கும் பாலோவ் பண்ணிட்டு இருக்கேன்… சடார்னு மாத்திக்க சொன்னா எப்டி மாத்திக்க முடியும்…

“அப்ப உனக்கு சுயஅறிவுங்கறதே கிடையாதா…”

” நா எப்பப்பா இருக்குதுன்னு உங்கட்ட சொன்னேன்… “

* ” மொத தடவையா எவனோ ஒருத்தன் என் அடிப்படையவே ஆட்ட ஆரம்பிச்சிருக்கான்… இது என்ன கள்ளக்காதலா… அருவா வச்சி தீர்க்க…

* ” நீ இந்தியாவுக்கு அடிமையா இருக்கணும்னு நினைக்குற… நான் அது இந்தியனுக்கு அடிமையா இருக்கணும்னு நினைக்குறேன்…

* ஆசைப்பட்டு பார் எதுவுமே தப்பா தெரியாது…

* அவன பத்தி தெரிஞ்சிக்கலாம்னு பக் வச்சா என்ன பத்தி தெரிஞ்சிக்குறேன்…

* அவன் எனக்கு எதிரி இல்ல… எனக்கு எதிரா என்னனென்ன நடக்குதுன்னு கண்டுபிடிச்சு சொல்ற சம்பளமே வாங்காத வேலைக்காரன்…

* ” 20 வருசமா தொழில்ல காட்டுன அக்கறைய விட தப்பு செஞ்சா மிச்சம் வைக்க கூடாதுங்கறதால அதிக கவனம் வச்சிருக்கேன்… நான் செஞ்சதில எந்த மிச்சம் டா மித்ரன்..,”

” மிச்சம் இல்லடா மித்ரன்… நீ செஞ்சதோட காரணங்கள் தான்டா மித்ரன்… “

* ” நிதானம் இருந்தா இழந்ததயே அடைஞ்சிடலாம்… ஆனா நிதானம் இழந்தா இருக்கறதும் போய்டும்டா… “

* ” உயிருக்கு மதிப்பு கொடுத்தா தான்டா வாழ்க்கைக்கு மதிப்பு கொடுக்க முடியும்… “

* ” செத்தாவது அவன சாகடிப்பேன்னு சொல்னது வீரம் இல்ல… நீ வாழ்ந்து அவான சாகடிக்கனும்… அதுதான் உண்மையான வீரம்… “

* ”  எம்மகன் எவ்ளவு பெரிய தீர்க்க தரிசி.,. அவனுக்கு நான் அப்பனா பொறந்ததுக்கு இறைவா நன்றிடா…”

* ” உன்ன பாக்கும்போது எனக்கொரு கதை ஞாபகம் வருதுப்பா… “

” என்ன கத தம்பி… “

” ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு.., அவரு கூட இருக்குற மனுசங்களலாம் நம்பாம, ஒரு மனுசக் குரங்குக்கு வாள்பயிற்சிலாம் கொடுத்து தன் பாதுகாப்புக்காக வைச்சிருந்தாரு… 24 மணிநேரமும் அந்தக் குரங்கு ராஜா கூடயே இருக்கும்… ஒரு நாள் அந்த ராஜா தூங்கும்போது கொசு வந்து தொல்லை பண்ணிட்டே இருந்துச்சு… குரங்கு என்னலாமோ பண்ணிப் பாத்துச்சு ஆனா அந்தக் கொசு போகல… கடைசில அந்த ராஜா கழுத்து மேலயே வந்து ஒக்காந்துச்சு… சோ அந்தக் குரங்கு ஒரு கூரான வாள் எடுத்து ராஜா கழுத்து மேல ஒக்காந்திருக்கிற அந்தக் கொசுவ ஒரே போடு போட்டுச்ச… “

” கொசு செத்துருக்கனுமே… வாள்வீசியுமா கொசு சாகல… “

* ” எங்கப்பாவ போட்று… “

” அப்பாவையா…”

” புதைக்குழில கால வுட்டுட்டாரு… விட்டா நம்மளயே இழுத்துட்டுப் போயிருவாரு… “

” போட்டுட்டு கால் பண்ணு… “

* ” இல்லாத ஒரு வாய்ப்ப உருவாக்கவும் எனக்குத் தெரியும்… அது நழுவிப் போனா இழுத்து தக்க வச்சுக்கவும் தெரியும்… “

* ” நல்லது பண்ணுவேனு நினைச்சு மக்கள் எனக்கு ஓட்டுப் போட்ருக்காங்க… அவிங்களுக்கு எப்படிடா நான் துரோகம் பண்ண முடியும்… “

” நல்லது மட்டுமே பண்ண கடவுளால காட முடியாது… நாம என்ன..,”

* ” எல்லா பெரும்புள்ளிக்கும் ஒரு முற்றுப்புள்ளி இருக்கும்… “

* ” சைரன் வச்ச வண்டில உன் வாழ்க்கை ஆரம்பிச்சது… இப்ப சைரன் வச்ச வாழ்க்கைல முடியப் போகுது… “

* ” உலகத்துக்குலயே அதிக சர்க்கரை நோயாளிங்க இந்தியால தான் இருக்காங்க… கடல்நொச்சிங்குற தாவரத்துல இருந்து மருந்து கிடைச்சும் அத சித்தார்த் காசாக்கப் பாக்குறான்… “

* ” ஆர்கனைஸ் கிரைம்… எமோசனல் கிரைம்… னு தப்பான தப்பு… நீ செஞ்ச தப்புக்கு தண்டிக்க செய்யாத தப்பு தான் உதவுச்சு… “

* ” இப்படி ஒவ்வொருத்தரையா கொன்னுட்டு தனிமரமா நின்னு என்ன சாதிக்கப் போற… மனுசனோட மனுசன் சேர்ந்து வாழ்றதுதான்யா வாழ்க்கை… அது தெரியாத அறிவு என்ன அறிவு… “

* ” காதலி சுட்டா எதிரி மடில படுக்கனும்னு சொல்வாங்கள… எதுக்கு நீ கவலப் படுற… நான் சாகலன்னு கவலப் படுறியா இல்ல நீ கேட்ட எவிடென்ஸ் கிடைக்கலன்னு வருத்தப் படுறியா… “

” நீ கொடுத்த வாழ்க்கைய நா ஏத்துக்கல… நீ கேட்ட வாழ்க்கைய நான் கொடுத்துட்டேன்… நாட்டுக்காக லாம் இல்ல… நீ கேட்ட அதுக்காக… “

* ” அவன் நியூச உருவாக்க ஆரம்பிச்ச நேரத்திலிருந்து நான் நியூசால உருவாக ஆரம்பிச்சேன்… “

* ” வெளிச்சத்துல இருக்குறவன் தான்டா இருட்டப் பாத்து பயப்படுவான்… ஐம் நாட் பேட்… ஜஸ்ட் ஈவில்…”

* ” என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெயிக்கறது பேராசை தான்…”

* ” உண்மை ஜெயிக்கறதுக்குத் தான்டா ஆதாரம் தேவை… பொய் ஜெயிக்கறதுக்கு குழப்பமே போதுமானது… “

* ” இருட்ட விரட்ட சூரியன் தேவை இல்லை… ஒரேயொரு தீக்குச்சி போதும்… “

* ” நல்லவனுக்கு நல்லது செய்றதல வெறும் ஆச மட்டும் தான் இருக்கும்… கெட்டவனுக்கு கெட்ட செய்றதுல பேராசை இருக்கும்… “

* ” நான் கழுகுடா… ஆகாயத்துக்கும் மேல பறக்கறவன்…

Related Articles

சிம்டாங்காரன் பாடல் வரிகளின் அர்த்தம் இத... கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வரும் வார்த்தை சிம்டாங்காரன். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையில் பம்பா பாக்கியா, விபின...
01-04-2020 முதல் பிஎஸ்6 வகை வாகனங்கள் மட... தற்போது பயன்பாட்டில் இருக்கும் பி. எஸ். 4 வகை வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் காலக்கெடு விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த சில மாதங்களுக்கு ...
ஜூலை18 – 5 years of வேலையில்லா பட்... * முதல் நாள் காலேஜ் வாசல்ல நின்னு அய்யா நாம இன்ஜினியர் ஆகப்போறங்கறது நினைச்சது என்னால மறக்கவே முடியாது... தம் அடிச்சேன் தண்ணி அடிச்சேன் கட் அடிச்சேன் ...
ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கட... வருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்க...

Be the first to comment on "ரிங்டோன்களாக இருந்த தனி ஒருவன் வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*