பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங்க காப்பாத்த தேவையில்லை!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒரு பாழடைந்த பங்களா அந்த பங்களாவிற்கு 4 பேர் நகரவாசிகள் குடி பெயர்கிறார்கள் அப்படி செல்லும் அந்த நான்கு பேர் பேயிடம் சிக்கி என்ன பாடுபடுகிறார்கள் என்பது தான் கதை. இந்தக் கதைக்குள் ஒரு அட்டகாசமான கருத்தை சொல்லி இருக்கிறார்கள். இதுவரை வந்த தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கருத்து அது. 

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மனநிலை மருத்துவர்.  அவருடைய கணவர் கன்ஸ்டிரக்ஷன் கன்றாக்டர் அந்த கன்ஸ்டிரக்ஷன் கன்றாக்டர் அரசியல்வாதி ஒருவரின்   பழமை வாய்ந்த பங்களாவை தன் பொறுப்பில் வேலைக்காக எடுக்கிறார்.  அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறார் தன் மனைவி மகன் இருவரையும் அழைத்துக்கொண்டு அதேபோல தொழில் சம்பந்தமான தோழிகளையும் அழைத்து கொண்டு அந்த பங்களாவிற்கு செல்கிறார் கதையின் நாயகன் கவுதம். கவுதம் மற்றும் சக்யுக்தா (ஐஸ்வர்யா ராஜேஷ்) மகன் கொஞ்சம் உடல்நலக் கோளாறு உள்ள சிறுவன். மற்றவர்களை போல யதார்த்தமானவன் இல்லை. 

அந்த பகுதியில் காட்டப்படும் ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் இருக்கும் ஒரு பாழடைந்த பங்களா வாய் பேச முடியாத சிறுவன் இவற்றையெல்லாம் பார்த்ததும் இது ஒரு பேய் படம் தான் என்பதை முன்பே கணிக்க முடிந்ததை படத்தின் மிகப்பெரிய மைனஸ் எனலாம்.  படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் அடுத்த காட்சியில் கரண்ட் கட் ஆகும் பார் என்று நினைத்தால் கரண்டு கட்டு ஆகிறது அதேபோல அடுத்த காட்சியில் கார் ஸ்டார்ட் ஸ்டார்ட் ஆகாமல் பிரச்சினை கொடுக்கும் என்று சொன்னால் அதேபோல் கார் ஸ்டார்ட் ஆகாமல் பிரச்சனையாக இருக்கிறது. இதுபோன்ற முன்பே கணிக்க கூடிய காட்சிகள் எல்லாம் படத்தின் மிகப்பெரிய மைனஸ். இந்த படத்தில் வரும் அதித்தியின் கதாபாத்திரம் எதற்கு என்று தெரியவில்லை செம எரிச்சலான கதாபாத்திரம் என்றால் இந்த படத்தின் அதிதி கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டலாம். லூசு மாதிரி நள்ளிரவில் அந்த பங்களாவை விட்டு வெளியேறி நாய்களிடம் டிவாங்கி அடிவாங்கி நம்மை படாத பாடு படுத்துகிறார். 

அப்படி எரிச்சலூட்டும் அந்த அதிதி எருமைக்கடா ஆலபோல் வளர்ந்தது மட்டும் இல்லாமல் ஏதோ தன்னை சின்ன குழந்தை போல் நினைத்துக் கொண்டு வலிக்குது வலிக்குது என்று அலறும் காட்சி எல்லாம் அவ்வளவு கடுப்பாக இருந்தது. அதில் வரும் காட்சிகளை அப்படியே கொத்தாக வெட்டி எடுத்தாலும் அந்த படத்தில் எந்த குறையும் இருக்காது. காமெடியன் இல்லை என்ற குறை காதல் காமெடி கதாபாத்திரத்திற்கு இந்த அதிதி பெண்ணை பயன்படுத்தலாம் என்று படக்குழு நினைத்திருப்பார்கள் போல.  இதுதான்  அந்தப் பள்ளிக்கூடம் என்று அவர்கள் தங்கியிருக்கும் அந்த பங்களாவை பற்றி அதித்தி கேட்கும் இடம் எல்லாம் அவ்வளவு கடுப்பாக இருந்தது. 

படத்தில் உள்ள ஒரு குறை என்றால் இந்த அதிதி கதாபாத்திரம் மட்டும் தான் மற்றும்படி மிகப் பெரிய குறைகள் எதுவும் இல்லை.  படம் ஒரு முறை பார்க்கும் அளவிற்கு நன்கு சுவாரஸ்யமாகவும் அழுத்தமான சமூகப் பொறுப்புணர்வு உள்ள ஒரு கருத்தையும் வெளிப்படுத்தியது.  படத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர் என்றால் இரண்டு பேரை சுட்டிக்காட்டலாம் ஒருவர் பாவல் நவகீதன் இன்னொருவர் பிரசன்னா பாலச்சந்திரன்.  இந்த படத்தில் பிரசன்னா பாலச்சந்திரன் நூலகராக நடித்துள்ளார்.  ஒரு ஆட்டிஸம் பாதித்த ஒரு பெண்ணுக்கு அப்பாவாக அவர் நடித்துள்ளார். உண்மையிலேயே மிகச் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பேரன்பு ராம் பேரன்பு படத்தில் மூளை பாதிப்பு அடைந்ஒரு பெண்ணின் தகப்பனாநடித்து நம் மனதை கவர்ந்தவர். அவருக்குப்பின் பாலச்சந்திரன் தான் இந்த கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து நன்கு நடித்துள்ளார். அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியவர் நடிகர் மற்றும் இயக்குனர் பாவல் நவகீதன். இந்த படத்தில் அந்த பங்களாவில் உள்ள எடுபிடியாக நடித்துள்ளார் பாவல் நவகீதன். அவருடைய வசன உச்சரிப்பு அவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு அருமையாக அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாவல் நவகீதன்.  குறிப்பாக அவர் பூமிகா பற்றிய செய்தியைக் கேட்டு அறிந்த பிறகு அந்த மரத்தின் வேர்கள் குறித்து பேசும் காட்சியிலும் தன்னுடைய இயற்கை சார்ந்த வாழ்க்கையை பற்றி விவரிப்பது குறித்த காட்சியிலும் அற்புதமாக நடித்துள்ளார்.  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த படத்தின் முதல் ஹீரோ பாவல் நவகீதன் தான். அவர் உங்களை எல்லாம் கொஞ்ச நாளு அடுக்கி வைத்து இந்த பூமி சொல்றத கேளுங்க என்று சொல்லும் காட்சிக்கு தியேட்டரில் படம் பார்த்து இருந்தால் கைதட்டல் பந்து இருக்கும். 

பேய் என்றால் அது  முகத்தில் கரியைப் பூசிக்கொண்ட அல்லது முகத்தில் சுண்ணாம்பை பூசி கொண்டோ அல்லது முகத்தில் ரத்தத்தை பூசிக்கொண்டு அந்த பங்களாவிற்குள் ஒரு பெண்ணையோ அல்லது வயதான ஆண் ஏதோ ஒரு உலா வரும் என்று எதிர்பார்த்து பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது இந்த படம்.  ஒரு பதின்ம வயது  பெண் தான் இந்த படத்தில் பேயாக நடித்துள்ளார் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது பேய் என்று கூட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாமி என்று கூட சொல்லலாம் இது சாமி நடித்துள்ள ஒரு த்ரில்லர் படம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு தன்னுடைய படைப்பை தந்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.  அவருடைய சமூகப் பொறுப்புணர்வு மிக்க படைப்பு விருதுகள் பல வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக பூமிகா கதாபாத்திரத்துக்கு பூமிகாவாக நடித்த அந்தப் பெண் விருதுகள் வாங்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.  படத்தின் ஒளிப்பதிவாளர் பாராட்டுக்கு உரியவர் நீலகிரி மாவட்டத்தை அவர் அவ்வளவு அழகாக திரையில் காட்டி உள்ளார். இந்த ஒளிப்பதிவாளர் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். குறிப்பாக படம் முக்கால்வாசி இருட்டில் தான் நடக்கிறது. அந்த இருட்டிலும் காட்சிகள் அற்புதமாக இருக்க ஒளிப்பதிவாளரின் தனித்திறமையே காரணம். 

 அதேபோல படத்தின் இசையமைப்பாளரும் மிகச் சிறப்பாக தன்னுடைய பணியை செய்திருந்தார். குறிப்பாக பூமிகா வருவதற்கு முன்பும் பேய் படத்திற்கான பின்னணி கோப்புகளை பயன்படுத்தியிருந்தார் அதேபோல பூமிகா பற்றிய விவரிப்பு காட்சிகளில் அற்புதமான இசையை அவர் வெளிப்படுத்தியிருந்தார். பூமிகா வாக நடித் அந்த இளம் பெண் யார் என்று தெரியவில்லை அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் உண்மையிலேயே அவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவரை என்பதே தெரியவில்லை அந்த அளவுக்கு நம்பும்படி நம்மை காட்சி கொடுத்து இருந்தார். அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திற்கு அவரை முதன்மையாக பயன்படுத்தி விளம்பரம் செய்து வந்தார்கள்.  அவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் ஆனால் என்ன விளம்பரம் செய்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய கதாபத்திரம் அல்ல.  இந்த படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன குறிப்பாக முதல் 20 நிமிடங்களில் நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளன ஆனால் அவையெல்லாம் பூமிகா பற்றிய கதை விவரிப்புகளில் மறந்து அடிக்கப்படுகின்றன.  பூமிகா பற்றிய கதை விவரிப்புகளில் வரையப்படும் ஓவியங்கள் அத்தனையும் ரசிக்கும்படி இருந்தன ஒரு சில படங்களில் இப்படிப்பட்ட விவரிப்புகள் இருவரும் ஓவியங்கள் இசைக்குறிப்புகள் காமெடி காட்சிகள் போன்றவை ரசிக்கும்படி இருக்காது ஆனால் இந்தப் படத்தில் காட்டப்படும் ஓவியக் குறிப்புகள் எல்லாமே மிகவும் மனம் கவர்ந்தவையாக இருக்கின்றன.  அதேபோல இந்த ஓவியக் காட்சிகள் உயிர்பெற்று நகர்பவைகைகளாகவும் எனவே இடம்பெயர் பவைகைகள் ஆகவும் மாறும் காட்சிகள் அற்புதமாக இருந்தன. குறிப்பாக அந்த பூமியை சுற்றி வரும் காட்சிகள் பறவைகள் பறக்கும் காட்சிகள் போன்றவை ரசிக்கும்படி இருந்தன.  மெர்குரி படத்தின் கதை விவாதத்தின்போது இந்த கதை இந்த இயக்குனரின் மனதில் தோன்றி இருக்க வேண்டும்.  அதனால்தான் இயற்கைக்கு மாறாக மனிதர்கள் செய்யக்கூடிய சில சம்பவங்கள் செய்த மனிதர்ளுக்கு விழிப்புணர்வு உண்டாகும் வகையில் இந்தப் படத்தை எடுத்துள்ளார்.  அவருடைய உழைப்பு வீண்போகவில்லை படம் நன்றாகவே வந்துள்ளது. ஆனால் என்ன இந்த படம் மட்டும் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் பலருடைய கவனத்தை பெற்றிருக்கும் பெரிய அளவில் பாராட்டை பெற்று இருக்கும். 

படம் வெளியான சமயத்தில் நிறைய மீம் கிரியேட்டர்கள் இந்தப் படத்தை பாராட்டி இருந்தனர். குறிப்பாக பேயாக நடித்த பூமிகாவாக நடித்த அந்த இளம்பெண்ணை நிறைய மீம் கிரியேட்டர்கள் பாராட்டி இருந்தனர். படம் நன்றாக இருந்தால் அதை தட்டிக்கொடுக்க மென்மெலும் பலரிடம் கொண்டு செல்ல நாம் தனியாக உழைக்க வேண்டியதில்லை. அந்த படைப்பே தன்னை தானே சிறப்பித்துக் கொள்ளும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் “பூமிகா“. கண்டிப்பாக இந்தப் படத்தை ஒரு முறையாவது பாருங்கள். அதன் பிறகு நீங்களும் இந்தப் படத்தை பற்றி பிறரிடம் பேசுவீர்கள்… இந்த படத்தை பாராட்டி எழுதுவீர்கள். அதேபோல இந்த படம் பார்த்து முடிந்ததும் குறைந்தாபட்சம் ஒரு செடியையாவது நட்டு வளர்ப்பீர்கள். அதன்பிறகு எப்போது செடி ஊன்றி வளர்த்தாலும் உங்களுக்கு பூமிகா படம் தான் நினைவுக்கு வரும். 

உங்கள் குழந்தை பேய்க்கு எல்லாம் பயப்படும் ஆள் இல்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் இந்தப் படத்தை குடும்பத்தோடு பாருங்கள். முடிந்தவரை நீலகிரி மாவட்டம் மாதிரியான அடர்வனம் கொண்ட ஊருக்கு பயணம் செய்யுங்கள். 

Related Articles

“யாருங்க அந்த அட்மின்? எனக்கே பாக்... திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அங்கு இருந்த லெனின் சிலையை அகற்றினார்கள் அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள். உடனே சூட்டோடு சூடாக நாளை தமிழகத்திலும் ...
கவிப்பேரரசு வைரமுத்து பற்றிய சுவாரஸ்யமான... கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 13-7-1953 ல் பிறந்தார். தந்தை இராமசாமி தேவர், தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைப் பள்ளிக்...
சென்சாரில் இருபதுக்கும் மேல் கட் வாங்கிய... பல எதிர்ப்புகளை சந்தித்து 2013ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம் முதல் பாகம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அப்...
நடிகை ஷாலினி பாண்டே மற்றும் நடிகை இந்துஜ... நடிகை ஷாலினி பாண்டே :பிறப்பு செப்டம்பர் 23, 1993 மத்திய பிரதேசை சேர்ந்த ஜெபல்பூர் தான் ஷாலினிக்கு சொந்த ஊர். தெலுங்கில் வெளியாகி தென்னிந்த...

Be the first to comment on "பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங்க காப்பாத்த தேவையில்லை!"

Leave a comment

Your email address will not be published.


*