பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத்திரம் – ரௌத்திரம் பட வசனங்கள்!

Rowthiram movie dialogues

 

  1. “என்னைய்யா பயந்துட்டிங்களா…”

தப்பு பண்ணவனே பயப்படுல… எதுத்து கேக்கறவன் எதுக்குப் பயப்படனும்… “

 

  1. ” ஒரு தடவ தான் சாவு… தினமும் செத்தா அதுக்குப் பேரு வேற… “

 

  1. ” அவன் கண்ண பாத்திங்களா… ஒரு நிம்மதி தெரியுது… நாம அந்த தப்ப தடுக்கலனா காலத்துக்கும் இந்த நிம்மதி நம்ம கண்ணுக்குத் தெரியாது… “

 

  1. ” ஒரு தடவ தான் சாவு… தைரியசாலிங்க தான் தினந்தினம் வாழுவான்… நீங்களும் அப்படித்தான் வாழனும்… “

 

  1. ” லா காலேஜ் ஸ்டூடன்ட்டா… இப்ப கை வைடா… “

 

” எது லா காலேஜ் ஸ்டூடன்டா… “

 

  1. ” இதான்டா பர்ஸ்ட் டைம்மு போலீஸ் ஸ்டேசன்ல இருந்து உன்ன காசு கொடுக்காம கூட்டி வர்றது… “

 

  1. ” தேங்க்ஸ் மட்டுந்தானா… “

 

” பர்ஸ்ச வீட்ல வச்சிட்டேனு சொல்லு… “

 

  1. எல்லாத்தயும் அனுசரிச்சுப் போறதுதான் மனுசத் தனம்… தப்பு நடந்தா தட்டிகேட்க போலீஸ் இருக்கு… தண்டிக்க கோர்ட் இருக்கு… கேட்குறது நடுவுல நாம என்ன சாமியா…”

 

“(நந்தா பட சீன்) அக்கிரமத்த பாத்து கொதிச்சு எழுவுற அத்தன போரும் சாமிதாண்டா… இதுக்காக தனியா வருமா… “

 

  1. ” ஒழுங்கா இருக்கறதுனா இருங்க… இல்ல எல்லோரும் வீட்ட விட்டு வெளிய போங்க… ” ( திட்டிவிட்டு அவர் வீட்டிலிருந்து வெளியே போகிறார் )

 

” என்னடா நம்மள சொல்லிட்டு அவரு வெளில போறாரு… “

 

  1. ” நடுவுல யாரு நந்தி மாதிரி… கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுதோ… “

 

” கொஞ்சம் இல்ல… நிறையவே டிஸ்டர்ப் பண்ணுது.., “

 

  1. ” என்ன எப்படியா மறந்த…  “

 

” நான் எப்பங்க உங்கள நினைச்சேன்… “

 

  1. ” அவிங்கள பாத்துருக்கேங்க.., அவிங்க கண்ணு இருக்குல்ல… ரோஜாபூவ ப்ளாக் & ஒயிட்ல பாத்த மாதிரி இருக்கும்… அவிங்க கை அசைச்சு பேசும்போது செங்காந்தள் பூ காத்துல அசையற மாதிரி இருக்கும்… அவிங்க ஹீரோயின் மாதிரி இருப்பாங்க… நீங்க ஹீரோயின் ப்ரெண்டு மாதிரி இருக்கிங்க… “

 

  1. ” பெருசா வரமாட்டேனு சொன்ன… மூனே முக்காலுக்கே வந்துட்ட… “

 

” வரமாட்டேன்னு சொல்றதுக்குத் தான் வந்தேன்… நல்லா படிக்கனும்…”

 

  1. ” நம்ம தியேட்டர்ல உன் படம் ஓடிச்சி… ஸ்க்ரீன் கிழிஞ்சிடும்…”

 

” எப்டி எப்டி… உங்க தியேட்டர்ல நம்ம படம் ஓடுனா…”

 

” நூறு நாள் ஓடும் சார்… அஞ்சு ஷோ ஓட்டலாம் சார்… நானே போஸ்டர் ஒட்றேன் சார்… “

 

  1. ” என்ன சேட்டு… பையன் யாரு… உனக்குப் பொறந்தவனா… பேச்சு உன்ன மாதிரி இல்லயே… ஷார்ப்பா பேசுறாப்ல… “

” சலோ… “

 

” என்ன சலோ… ஹலோ… “

 

  1. ” குட் நேம்… யாரு வச்சா… “

 

” ம்ம்… அப்ப நான் குழந்தையா இருந்தேன்… அதுனால தெரியாது… “

 

  1. ” என் ஆம்ஸ தொடுங்க… “

 

” எங்கிங்க இருக்கு… “

 

” அதான் அந்த ஷோல்டர் கீழ தொள தொளன்னு இருக்கே அதான் ஆம்ஸாம்… “

 

  1. ” நம்ம யாருன்னு நம்ம அடியே சொல்லனும்… “

 

  1. ” ஒரு ஸ்டெப் சொல்லிக் கொடுத்தா நாலு ஸ்டெப் போகனும்… இப்படி நாக்அவுட் ஆகக் கூடாது… “

 

  1. ” இதுக்கு முன்னாடி உன்ன பாத்தது இல்ல… இனிமேலும் உன்ன பாக்கறதா இல்ல… “

 

  1. ” எதிரிய போட்டதவிட போட்டவன எதிரியாதாண்டா பாப்போம்… “

 

  1. ” அவர கொண்டாடலானாலும் பரவால… திண்டாட வுட்றாதிங்க… பப்ளிக்குகாக சப்போர்ட் பண்றவன பப்ளிக்கே சப்போர்ட் பன்லினா பாரின்காரனா சப்போர்ட் பண்ணுவான்… “

 

  1. ” அழகான பொண்ணுங்க வண்டிய நாலு பேரு பாலோ பண்ணத்தான் செய்வாங்க… “

 

” அப்றம் எதுக்கு நம்ம வண்டிய பாலோ பண்ணாங்க… “

 

  1. ” கண்ணு முன்னாடி தப்பு பண்ணாங்க… கேட்டேன்… ம்ஹூம் நான் தப்பு பண்றேன்னு சொல்றாங்க… எனக்குப் புரியல… ஒருவேள நான்தான்… “

 

  1. ” நீ பண்ணது பெரிய விஷியம்யா… அன்னைக்குத் தெருவுல நூறு பேரு இருந்தாங்க… ஏன் அதே தெருவுல வேற எதாவது பொண்ணுக்குப் பிரச்சினை வந்திருந்தா நானும் அந்த நூறுபேர்ல ஒருத்தனா தான் இருந்திருப்பேன்… கோயில்ல இருக்கற சாமியெல்லாம் குறையெல்லாம் கேட்டுட்டு உள்ளயே உக்காந்திருந்தப்ப… நீதானயா சாமி மாதிரி வந்து நின்ன… இதுக்கு முன்னாடியெல்லாம் கடவுள் மேல பெருசா நம்பிக்கைலாம் இல்லையா… இதுக்கப்புறம் நம்புரையன்யா… கோயில்ல எந்தக் கற்பக் கிரகத்த பாத்தாலும் உன்ன பாக்குற மாதிரியே இருக்குயா… “

 

  1. ” கோயிலுக்கு வந்துட்டு சாமிய கூட கும்பிடாம உன்ற கும்புட்டு போறாரு… இதுக்கு மேல என்ன வேணும்… “

 

  1. ” நாங்களாம் பொத்திக்கிட்டு போகல… உனக்கு மட்டும் ஏன்டா பொத்துக்கிட்டு வருது… எவனுக்கோ ஓடுன… இன்னிக்கு உன் வீட்டுல என்னாச்சு… “

 

” என்ன கேட்ட… ஏன் பொத்துக்கிட்டு வருதுன்னா… பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத்திரம்… “

 

  1. ” ஆம்பளன்னா வீட்டுக்குப் பாதுகாப்பா இருக்கனும்… ஆபத்தா இருந்தா… “

 

  1. ” அவன மாதிரி ஆளெல்லாம் தூரத்திலிருந்து ரசிக்கலாம்… பக்கத்துல போனா பிரச்சினை… “

 

  1. ” அவன் மாறமாட்டான்…”

 

” அவ ஏன்பா மாறனும்… “

 

  1. ” கெட்டவனால வர பாதிப்பவிட நல்லவன சுத்தி இருக்குற ஆபத்துதான் அதிகம்… “

 

  1. ” உனக்கு அவன் முக்கியம்… எனக்கு நீ முக்கியம்… “

 

  1. ” எங்க இருந்து வந்துச்சு இந்த தைரியம்… அசிஸ்டன்ட் கமிஷ்னர் பொண்ணுங்கறனாலயா… “

 

” ம்ம்… சிவா வோட பொண்டாட்டிங்கிறனால… “

 

  1. ” வீசுனதும் மாட்றதுக்கு அவன் ஒன்னும் வாழ மீனு இல்ல… திமிங்கிலம்… “

 

  1. ” வெளிய தான் அவன நினைச்சு கோப பட்ருக்கனே தவிர உள்ளுக்குள்ள அவன நெனச்சு ரொம்ப பெருமை பட்ருக்கேன்… ஏனா என் பிள்ளையோட கோவத்துல ஒரு நியாயம் இருக்கும்… ஆனா அந்தக் கோபமும் நியாயமும் எங்க என் பையன காவு வாங்கிடுமோன்னு பயமா இருக்கு… “

Related Articles

அப்பான்னா இப்படி இருக்கணும்! – சாத... இந்தி டிவி சீரியல், இந்திப் படங்கள், மணிரத்னம் படங்கள், கமல், சீமானுடன் படங்கள் என்று படிப்படியாக உயர்ந்த நடிகர் மாதவன் இந்திய சினிமா உலகில் தவிர்க்க...
ஹர்பஜனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் சின்... கடந்த சில நாட்களாகவே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்து வருகிறார். அவருடைய தமிழ் ஆர்வத்தை வைத்தும் லொள்ளு நெட்டிசன்கள் மீம் போட ...
எதிர்பார்ப்பை கிளப்பிய வசந்த் ரவியின் ரா... இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வசந்த் ரவி. அவருடைய இரண்டாவது படத்தில் (ராக்கி) இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடு இணைந்த...
சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி̶... சற்றுப் பொறுமையாகப் படிக்கவும். எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வியின் கண்ணகி நாவல் கொண்டுள்ள கதையை முதலில் இங்கு சுருக்கமாக காண்போம்.லஞ்சங்களும் அதிகா...

Be the first to comment on "பொத்துக்கிட்டு வரதுக்குப் பேருதாண்டா ரௌத்திரம் – ரௌத்திரம் பட வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*