கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இப்படிபட்ட படத்தின் வசனங்களை பலர் வாட்சப் ஸ்டேட்டசாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒன்னு லஞ்சம் கொடுங்க… இல்ல மரியாதை கொடுங்க… ஏன்யா ரெண்டையும் சேர்த்துக் கொடுத்து பழக்கப்படுத்துறிங்க…
* பயிரெல்லாம் கருகறத பாக்கும்போது பெத்த பிள்ளய பலிகொடுத்த மாதிரி இருக்குது…
* கௌரவமான மனுசங்க எல்லாம் கௌரவமா வாழனும்…
* ” ஊருக்கே சோறு போட்ற விவசாயி சார் நான்… “
” விவசாயின்னா கதிர் அறுங்க… இப்படி எங்க கழுத்த அறுக்காதிங்க… ”
* இந்தப் பாசு பெயிலுங்கறதெல்லாம் சம்பாதிக்கனும்னு நினைக்கறவனுக்குத் தான்… சாதிக்கனும்னு நினைக்கறவனுக்கு இல்ல…
* ஆண்களின் வக்கிரப் புத்திக்கு வக்காலத்து வாங்காதீங்க… எளவட்டப் பசங்க தான் ஆபாசமா பேசுன இளவட்டப் பசங்கள அடிச்சு நொறுக்குனது… ஆபாசங்கறது உடைல இல்ல… பிறப்புலயும் வளர்ப்புலயும் இருக்கு…
* ஆசைப்பட்டா மட்டும் போதாது! அடம் பிடிக்கத் தெரியணும்! நம்ம பிடிக்குற அடத்துல தான் நமக்கு அது எவ்வளவு பிடிச்சிருக்குனு தெரியும்!
* கைதட்டல்னா சும்மாவா… கைதட்டுற மாதிரி எதாவது செய்யுங்க… நாங்களே தட்டுவோம்…
* பெண் சாதிக்கறது முக்கியம்… பேங்க் பாதிக்கறது முக்கியமல்ல…
* வாழ்றதுக்கு தைரியமில்லாம தற்கொலை பண்ணிட்டு சாவுறவன்லா வீரன்னா அப்ப போராடி வாழ்றவன்லா கோழையா…
* இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்.
Be the first to comment on "இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும் – கனா வசனங்கள்!"