37 எம்பியும் வேஸ்ட், தமிழகத்துக்கு வளர்ச்சித் திட்டங்கள் வராது என்று சங்கிகள் ரொம்பத்தான் கவலைப் பட்டுத் திட்டுகிறார்கள். திட்டிக் கொண்டே கவலைப் படுகிறார்கள்.
அண்ணன்களே இந்த வளர்ச்சித் திட்டக் கருமத்துக்காக நாங்க இவங்களைத் தேர்ந்தெடுக்கவே இல்லை. இவங்களுக்கு வேற வேலை இருக்கு.
மத்தில நீங்க. மாநிலத்துலயும் உங்க ஆளுக. அதிகாரிகள். எம்பி, எம் எல் ஏ, எல்லோரும் உங்கள் ஆளுகளா இருந்த போது நீங்க சென்னை போய் டெல்லி போய் பாரீஸ் போய் திடீர்னு திரும்பி வந்து இனிமேல் வெள்ளக்காரந்தான் உங்களுக்கு தண்ணி தருவான்னீங்களே அதைக் கேட்க எங்களுக்கு ஒரு ஆள் வேண்டாமா?
கோயமுத்தூர் காரர்கள் கரடியாக் கத்திட்டிருக்கும் போது கூலா ஈரோட்டுத் தண்ணீரையும் தனியாருக்கு விடறீங்களே இதைக் கேட்கத்தான் ஒரு ஆள் எங்களுக்கு வேண்டியிருக்கு. நீங்க கேப்பீங்களா?
ஒரு நூறு பேர் நகரங்களையே பணயக் கைதிகளாப் பிடிச்சு வெச்சிருக்கீங்களே இதை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்த வேண்டாமா? எத்தனை கலவரம். ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒவ்வொரு பெயர். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே . . . .இருக்க முடியும்?
நகரத்தில் மிக முக்கியமான கான்வெண்ட். மாணவிகளின் சீருடையை மாற்றுன்னும் ஒரு சின்னஞ்சிறிய பேனரை அதைவிடச் சிறிய ஒரு இந்துத்துவக் கட்சி வைக்கிறது. சீருடையை உடனே மாற்றுகிறார்கள்.
ஸ்கர்ட்டைக் கவனித்தீர்கள் இல்லையா எப்பொழுதாவது ஸ்கூல் கட்டணத்தைப் பற்றியும், உயர்தரப் பள்ளீகளில் இடஒதுக்கீட்டைப் பற்றியும், பேசியிருக்கிறீர்களா? சரி சீருடைக்கே வருவோம். இந்த கொளுத்தும் வெயிலில் பினோபார்ம், டை, ஷூ என்ற மாணவர்கள் உடையணிகிறார்களே இது ஆரோக்கியமா என்று என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா?
சரி நீங்க என்ன பண்ணினீங்க? தென்னை வியாபாரிகள் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். சி பி ராதாகிருஷ்ணந்தான் காயிர் போர்டு சேர்மன். என்ன செய்தார்? ஒரு ஊழல் நடந்த பின்புதான் இப்படி ஒரு போர்டு இருப்பதே தெரிந்தது.
வளர்ச்சி என்கிற பெயரில் அன்னிய மூலதனம் செய்த சீரழிவிலிருந்து வெளிவர இன்னும் 50 ஆண்டு வேண்டும். GST யால் மூடப்பட்ட கம்பெனிகளைத் திறக்க இன்னும் 5 ஆண்டு வேண்டும்.
அதுவரை பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் பிடிக்காமல் நிம்மதியாகத் தூங்கி எழ வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் ஓட்டுப் போட்டோம்.
ஸோ இந்த விஷயங்களை எல்லாம் 2024 க்கு அப்புறம் பேசிக்கலாம்.
ஆமாம் கேண்டீன் கழுவுவது அத்தனை மோசமா? நீங்கதானே ஸ்வச் பாரத் என்று துடப்பத்தோடு திரிந்தது.
Be the first to comment on "பாஜக ஆதரவாளர்களுக்கு எழுத்தாளர் இரா. முருகவேள் எழுதிய கடிதம்!"