திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றிய சில தகவல்கள்!

Some information about Thiruchengode Arthanareeswarar!

திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் :

  1. தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குவது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தலம் ஆகும்.
  2. திருக் கொடி மாடச் செங்குன்றூர், செங்கோடு, நாகாசலம், உரசுசிரி என்ற எல்லாம் புகழப்படும் கொங்குநாட்டுத் தலம் ஆகும். பனிமலை, கோதை மலை, அரவ கிரி, வாயு மலை, வந்தி மலை, சித்தர் மலை, சோனகிரி, பிரம்ம கிரி, தந்தகிரி என்ற பல்வேறு பெயர்களையும் உடையதாக திருச்செங்கோடு அறியப் படுகிறது.
  3. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு பகுதியில் இந்த தலம் உள்ளது. வடக்கில் சங்ககிரியையும், மேற்கில் ஈரோட்டையும், தெற்கில் பரமத்தி வேலூரையும், கிழக்கில் நாமக்கல்லையும் கொண்டுள்ளது இந்த தலம்.
  4. இங்கு உள்ள அர்த்தநாரீஸ்வரர் உமையொரு பாகனாக காட்சி தருகிறார். ஒரு உருவில் இடப்பாகம் பெண்ணாகவும் வலப்பக்கம் ஆணாகவும் மங்கை பங்காளனாய் காட்சி தருகிறார். 2000ம் ஆண்டுகளுக்கு முன்பே ஆணுக்கு பெண் சமம் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தி உள்ளார் அர்த்தநாரீஸ்வரர்.
  5. நாக தோசம், ராகு கேது தோசம், செவ்வாய் தோசம், காள சர்ப்ப தோசம், களத்திர தோசம் முதலியவற்றை போக்கி குழந்தை பாக்கியம் அருளும் முக்கிய தலமாக விளங்குகிறது.
  6. சிலப்பதிகாரம் போன்ற பண்டைய தமிழ் நூல்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.
  7. மலையில் உள்ள 60 சத்திய படிகள் மற்றும் பிரம்மாண்டமான நாகர் சிலை புகைப்படங்கள் லண்டனில் உள்ள மியூசித்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
  8. அருணகிரி நாதர் இந்த மலையில் தங்கி இருந்து அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு பற்றிய ஏராளமான பாடல்களை இயற்றி உள்ளார்.
  9. சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. ஆனால் இங்கு மலையே லிங்கமாக இருப்பதால் மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது.
  10. உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களாக காட்சி தருகிறார். அவற்றில் 22வது வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் ஆகும்.

திருச்செங்கோடு பெயர் வர காரணம் :

ஆரம்ப காலத்தில் திருச்செங்கோடு அமைந்துள்ள  பகுதி பூந்துறை நாடாகும். இப்பகுதி கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கி வந்தது. பூந்துறையை இரு பகுதிகளாக பிரித்து இருந்தனர். மேல்கரை பூந்துறை நாடு மற்றும் கீழ்க்கரை பூந்துறை நாடு என்றும் பெயர் வைத்திருந்தனர். இதில் கீழ்க்கரை பூந்துறை நாட்டின் நாயகமாக விளங்கியதே திருச்செங்கோடு தான்.

இப்பகுதி ஆரம்பத்தில் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்று அழைக்கப் பட்டது. ஏனெனில் நகரம் முழுவதும் உள்ள மாடங்களில் கொடிகள் படர்ந்து வளர்ந்து காணப்பட்டன. அதனாலயே இது கொடி மாடச் செங்குன்றூர் என்று அழைக்கப் பட்டது. முனிவர்களும் ஞானிகளும் புலவர்களும் அதிகமாக இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்ததால் திரு என்ற அடைமொழியை சேர்த்துக் கொண்டனர். திருக் கொடி மாடச் செங்குன்றூர் என்ற பெயர் நாளடைவில் மருவி திருச்செங்கோடு என்றானது.

தமிழகத்திலயே மிகப்பெரிய இரண்டாவது தேர் திருச்செங்கோட்டு தேர் ஆகும். கோயில் சென்று வாருங்கள்… நல்ல பலன்களை பெறுங்கள்.

 

Related Articles

பாகுபலி நாயகனின் “சாஹோ” படம்... படம் ரிலீசான அடுத்த நொடிகளில் இருந்து இந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டு இருந்தாலும்  பாகுபலி நாயகனின் படம் என்பதால் இந்தப் படம் நல்...
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
ஒரே ஒரு தமிழ்படம் (2) தான், ஒட்டுமொத்த த... தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சில படங்களையும் தமிழக அரசியலின் சில தவிர்க்க முடியாத சம்பவங்களையும் கலந்து கட்டி கலாய்த்து தள்ளி இருக்கும் தமிழ்ப்படம...
நீங்கள் எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர... சாகற நாள் தெரிஞ்சிடுச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும். சிவாஜி படத்தில் ரஜினி பேசிய வசனம் இது. வசனமாக இதை ரசித்தாலும், நம்முடைய ஆயுட்காலம் பற்றி தெரிந்துகொ...

Be the first to comment on "திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றிய சில தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*