முதலையை பிடித்த பிரதமர்! – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Modi on Man Vs Wild Best memes by Netizens

மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பாரத பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்ட் 13) அந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப பட்டது. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சிறு வயதில் முதலை குட்டியை பிடித்து வந்த கதையை சொன்னார் மோடி. அதுகுறித்து வழக்கம்போல கேலி கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அவர்களுடைய கலாய்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம். 

நான் சிறுவனாக இருக்கும்போது ஆற்றில் குளித்து வீடு வரும் வழியில் ஒரு முதலையை பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன் …

என் அம்மா இது தவறு சாம்பாரில் விழுந்தால் நாம் காலி என்று என்று உணர்த்தி

நீ இதை செய்திருக்கக்கூடாது திரும்ப போய் ஆற்றில் போய் விட்டு வா என்று சொன்னார்கள்  

நானும் அதன் படியே செய்தேன்.வீட்டிலேயே வளர்ந்ததால் நீச்சல் கற்றுக் கொள்ளாத முதலை முடிவில் மூழ்கியே செத்து போய் விட்டது… 

இப்புடித்தான் நான் ஒருநாளு முதலைன்னு நெனச்சி டைனோசர் குட்டிய புடிச்சிட்டு வந்துட்டேன்…

அப்புறம் இருக்குற ட்ராபிக்ல இது வேற குறுக்க மறுக்க பூந்து டிஸ்டர்ப் பண்ணா நல்லாவா இருக்கும்ன்னு 

பாலும் பிஸ்ட்டும் குடுத்து காட்டுல உட்டு வந்துட்டேன்…

எங்க வீட்டு சுவற்றில் முதலை ஊர்ந்துகொண்டிருக்கும். அப்போது நான் ஒரே அடிதான் அதை அடிப்பேன். பட்டென்று தன் வாலை உடைத்துவிட்டு முதலை ஓடிவிடும். துடிக்கும் அந்த வாலை எடுத்து வீட்டில் காட்டுவேன், ‘இங்கே பாருங்க முதலை வால்’ என்று. உடனே வீட்டிலிருப்பவர்கள் ‘முட்டாப்பயலே இது முதலை வால் இல்லேடா… பல்லி வால்’ என்பார்கள். வீட்டிலிருக்கும் இன்னும் சிலர் ‘பாவம் சின்னப்பய… முதலைக்கும் பல்லிக்கும் வித்தியாசம் தெரியாமல் இதை முதலைன்னு நம்பறான். நீங்களும் முதலைன்னே சொல்லுங்க. பல்லின்னு சொல்லி அவன் மனசு வாடிடக்கூடாதில்லையா?’ என்பார்கள். உடனே அதை ஆமோதித்த எல்லோரும் ‘சூப்பர்டா… முதலையையே ஒரு அடியில் வீழ்த்திருக்கேன்னா நீ பெரிய ஆள்தான். பாவம் இனிமேல் அப்படி செய்யாதே… இந்த வாலை கொண்டுபோய் முதலை உடம்பில் ஒட்டிட்டு வா’ என்பார்கள். நானும் அந்த முதலையை பிடித்து அந்த வாலை சோத்து பசை வச்சு ஒட்டுட்டு வந்துடுவேன்.

ஆத்தா கோழி வளத்துச்சு….

ஆடு வளத்துச்சு….

நான் முதலை வளர்த்தேன்…

நான் வளர்த்த முதலை வளர்ந்துச்சு…

ஆனால்… நான் வளரவே இல்ல… 

நாங்களாம் ஆமையை கவிழ்த்துப்போட்டு படகு சவாரி போன அண்ணன்களையே கூட வச்சுருக்கோம். இவரு முதலையை பார்த்தாராம் வீட்டுக்கு இட்டாந்தாராம்… யாருக்கிட்ட…

இப்டித்தான் நான் குட்டி வயசுல ஒரு நாள், மூனு யானக்குட்டிகளையும், ரெண்டு டைனோசர் குட்டிகளையும்…

அப்றம், மோடிம்மா மாதிரியே எங்கம்மாவும் என்னைய வஞ்சுபுட, திரும்ப குட்டிகள தூக்கீட்டு காட்டுக்குப் போனா……

காட்டக் காணோம்…

 காடு இருந்த எடத்துல அதானி ஃபேக்டரி, அம்பானி மீத்தேன் ப்ராஜெக்ட், ஜக்கி சாமி ஆன்மீகப் பண்ணை…

வேற வழியில்லாம, வீட்டுக்கு கூட்டியாந்து பொங்கல் போட்டு வளக்குறேன்…

முதலைகளிடம் சென்று ஜெய் ஶ்ரீராம் என்றால் அவை நம்மைக் கடிக்காது.! சந்தேகம் இருப்பவர்கள் பரிசோதித்துப் பார்க்கலாம்!!

க(அ)டிக்குறிப்பு : இச்சலுகை இந்திய முதலைகளிடம் மட்டுமே!!

தன் குட்டியை காப்பாற்றியதற்காக மோடி ஜிக்கு நன்றி சொன்ன அந்த தாய் முதலை, இனி நீ நடந்து சென்று, டீ விற்க வேண்டாம்.  என் மீது ஏறி உட்கார்ந்து கொள். நானே உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னது. 

அப்படி முதலை மீது பயணித்துத்தான் மோடி ஜி அவர்கள், ரயில்வே ஸ்டேசனில் டீ விற்றார்.   

குளத்துல  நீந்துன முதலைக்குட்டியை வீட்டுக்கு தூக்கிட்டு வந்த நீ எங்க?  கடல்ல நீந்துன ஆமையை தின்னுட்டு அதோட ஓடு மேலே ஏறி தப்பிச்சு வந்த எங்க அண்ணன் எங்க?

நான் இளவயதில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள அரசினர் தோட்டத்துக்கு அடிக்கடி விளையாடப்போவேன். அப்படி ஒரு நாள் விளையாடுகையில் அங்கே ஒரு பாம்பைப் பார்த்து அதனை பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன். அப்புறம் என் அம்மா அது நாகப்பாம்பு, திரும்பி கொண்டு விட்டு விடு என்று சொல்லி விட்டார்கள். நானும் திரும்ப விட்டு விட்டேன். ஆனால் பாருங்கள் நான் திரும்பி விட்ட இடம் வேறு. 

அந்த நாகப்பாம்புக்கு ஒரு பெண்பாம்பு ஜோடி இருந்திருக்கிறது. நான் அதன் துணையை கொன்று விட்டேன் என்று அது நினைத்து என்னைப் பழிவாங்க பெண் ரூபம் எடுத்து என்னிடம் வந்தது. நானும் அவளும் கேர்ள்பிரெண்டாக கொஞ்ச நாள் சுற்றினோம். அப்புறம் ஒரு நாள் அவள் என்னைக்கொல்ல முயல்கையில் நான் தப்பி விட அப்புறம் விபரம் தெரிந்து அந்தப் பெண் பாம்பை கூட்டிப் போய் அந்த ஆண் பாம்பை விட்ட இடத்திலேயே திரும்ப விட்டு விட்டேன். 

பாம்புகளுடன் விளையாடுவது பெருந்தவறு என்று நான் புரிந்து கொண்ட தினம் அன்று.

என் இளம் வயதில் எங்கள் தோட்டத்தில் ஒரு நாள் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது மலையிலிருந்து ஒரு டினோஸர் குட்டி தத்தி தத்தி இறங்கி என் அருகே வந்தது.’’  நீதான் தேவதச்சன் கவிதையில் வரும் ‘ கடைசி டினோஸரா ?’’ என்று கேட்டேன். ஆமாம் என்றது. வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டேன். எல்லோரும் மிகவும் பயந்துவிட்டார்கள். இளம் கன்று பயமறியாது என்பார்கள் அல்லவா, அதுதான் எனக்கும் பயமே வரவில்லை. இப்படித்தான் ‘’ மேன் அண்ட் வைல்ட்’ டாக என் வாழ்க்கை துவங்கியது.

Related Articles

Copycat Movies Tamil – காப்பி அடிக... கதை திருட்டு விவகாரத்தை சர்கார் படம் தொடங்கி வைக்க அதை தொடர்ந்து 96 படம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மன உளைச்சல் தாங்காமல் திரைப்பட எ...
வாழ்க்கையில் முன்னேறியவர்களிடம் இருந்து ... வாழ்க்கையில் முன்னேறி உயிர் மாண்ட பிறகும் பேசப்பட்டு வரும் சில நபர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்ததில் இருந்து தெரிந்து கொண்ட சில உண்மைகள்...
ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்... The platform Trapped Monos The shawshank redemption  Gantumoote (kannada) The occupant (spain movie) Ayyapanum koshiyum (...
மூடப்பட்டு வரும் சினிமா தியேட்டர்கள்? தி... துருப்பிடித்துப் போன இரும்புக் கேட்டுகள், வெள்ளை படிந்து போன ஜன்னல் கண்ணாடிகள்,  புழுதிகளும் பறவை எச்சங்களும் நிறைந்த, சாயம் இழந்துபோன தியேட்டர் சுற்ற...

Be the first to comment on "முதலையை பிடித்த பிரதமர்! – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*