ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்! – ஏ ஆர் முருகதாசின் புதுமை௧ள்!

One India equals three America! - AR Murugadoss!

ஒரு திரைப்படம் பார்த்தால் அதில் நாம் கற்றுக்கொண்ட விசியங்கள் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய படங்களின் மூலமாக புதிய தகவல்களை பார்வையாளர்களுக்கு கடத்தனும் என்ற நோக்கத்தோடு படம் எடுக்கும் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய படங்களில் சொன்ன புதிய தகவல்களை தான் இங்கு பார்க்கப் போகிறோம். 

1.ஸ்பைடர் – எஸ்பிடி – சேடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்

மத்தவங்க அழுவறத பாத்து ரொம்ப சந்தோச படுவாங்க… அதுக்காக என்ன வேணா பண்ணுவாங்க… மென்டல் இல்னஸ் ரிசர்ச் படி இது எல்லா மனுசங்களுக்குமே இருக்கு… For example நாம பஸ்ல போகும்போது ரோட்ல எதாவது ஆக்சிடன்ட் ஆகிருந்தா நாமலாம் எட்டி பார்ப்போம்… ஒருவேள அந்த ஆக்சிடன்ட்ல யாருக்கும் எதுவும் ஆகலன்னா நம்ம ஆழ் மனசு ரொம்ப டிஸ்அப்பாயின்ட் ஆகும்.., அதே அந்த ஆக்சிடன்ல யாராவது செத்திருக்கனும்… அத பாத்து நம்ம சுச்சுன்னு வருத்தப்படனும்… அத தான் நம்ம மைன்ட் விரும்பும்… சாதாரணமா நம்ம மாதிரி ஆளுங்களுக்கு 4% இந்த மாதிரி சாடிஸ்டிக் டிஸ்ஆர்டர்  இருக்கும்… லாஸ்ட் இயர் கலிபோர்னியால நடந்த ரிசர்ச்ல இந்த 4% 6% ஆக மாறி இருக்குனு கண்டுபிடிச்சிருக்காங்க… மக்களுக்குள்ள மனிதாபிமானம் குறையும்போது இவன மாதிரி ஆளு உருவாவாங்க… 

2.துப்பாக்கி – ஸ்லீப்பர் செல்ஸ்

தீவிரவாதம் எங்கெங்கலாம் சவாலா இருக்கோ அங்கெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் நிறைய இருப்பாங்க… அவிங்க எங்க இருக்காங்கன்னு தெரியாது… சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் தான்… நாட்டு மேல அரசாங்கத்த மேல வெறுப்படைந்தவர்கள் பழிவாங்கனும்னு நோக்கத்தோட இருக்கறவிங்கள கல்டிவேட் பண்ணி அவிங்களுடைய கோபதாபங்களை பழிவாங்கும் உணர்வுகளை டெரரிஸ்ட்கள் உபயோகப்படுத்திக்கிறாங்க… அமெரிக்கால தான் ஸ்லீப்பர் செல் எங்கெல்லாம் இருந்ததோ அதெல்லாம் கலைக்கப்பட்டு வளரவிடாம தடுத்துருக்காங்க… 

3.7ம் அறிவு – போதி தர்மர்

மார்ஷியல் ஆர்ட்ஸின் முதன்மையான கலை குங்ஃபூ. அதை கற்றுக் கொடுப்பதில் சிறந்த நாடு சைனா. கற்றுக் கொடுக்கும் பள்ளிகளுக்கெல்லாம் தலைமையிடம் ஷாவ்லின் டெம்பிள். இது புத்த மதத்தின் கோவிலாகவும் தற்காப்புக் கலையை பயிற்றுவிக்கும் பள்ளியாகவும் விளங்குகிறது. இந்தக் கலையை முதன்முதலாக இவருக்கு கற்றுக் கொடுத்ததற்காகவும் இந்த ஷாவ்லின் டெம்பிள் நிறுவியதற்காகவும் இன்றும் இவர்கள் கடவுளாக வணங்கும் குரு பல்லவ மன்னனின் மூன்றாம் இளவரசன் போதிதர்மன். போதி தர்மன் ஒரு தமிழர். 

1600 வருடங்களுக்கு முன்பு… காஞ்சி மாநகர், பல்லவ நாடு… 

மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது நாம்… கலைகள் பலவற்றுள் மருத்துவமும் சிறப்பு பாடமாக இருந்தது… கொடிய பல நோய்களையும் குணப்படுத்த கூடிய இந்த அற்புதமான மருத்துவ முறை சரகசம்ருதி… இந்தக் கலைகள் அனைத்திலும்  தேர்ச்சி பெற்றவர் போதி தர்மன்… 

தற்காப்புக் கலைகள் மட்டுமின்றி அட்டமாசித்திகளுள் ஒன்றான பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தும் வசித்துவ கலையையும் பயின்றவர்… தன் குருமாதாவின் உத்தரவின்படி போதிதர்மன் அன்று சீனதேசம் புறப்படும் நாள்… புத்த மதத்திற்கு மாறி சீனாவிற்கு பயணம் கொள்கிறார்… சீன தேசத்து மக்களுக்கு மருத்துவத்தையும் நோக்கு வர்மத்தையும் குங்ஃபூ கலையையும் கற்றுத் தருகிறார் போதி தர்மர். 

4.கத்தி – விவசாயம்

கெழடுங்க கூட்டத்த வச்சிக்கிட்டு எவ்ழவு பெரிய தப்பு பண்ணிருக்கிங்க தெரியுமா… கிழடுங்களா… இந்தக் கெழடுங்க மணிபிளான்ட் நட்டவங்க இல்ல… 70 வருசம் நாத்தூ நட்டுவங்க… ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பெனி 200 விவசாய கிராமங்கள அழிச்சிருக்கு… அத எதுத்து நின்ன ஒரே கிராமம் தன்னூத்து… அதுக்காக அவிங்க கொடுத்த விலை 9 விவசாயிங்க உயிர்… 

3 வேளை பசியெடுக்கும் போது சாப்பாடு நியாபகம் வந்த நமக்கு அத விவசாயம் பண்ணாவங்க நியாபகம் என்னைக்காவது வந்திருக்கா… கடந்த 30 வருசத்துல 12456 ஏரிகள் மூடப்பட்டிருக்கு… 27000க்கும் மேல குளங்கள் மூடப்பட்டிருக்கு… ஏழு ஆறுகள் மூடப்பட்டிருக்கு… 167512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு… தாமிரபரணி ஆறுல இருந்து ஒரு கோலா கம்பெனி ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குறாங்க… இதுல விவசாயத்தூக்கு தண்ணி எங்க இருக்கும்… விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணூவான்… அவிங்க பசிக்கு பிச்சை கேட்கல… விவசாயத்துக்கு தண்ணி கேட்குறாங்க… தன்னூத்து கிராமம் மட்டும் அல்ல… சொந்த ஊரவிட்டு ஒடிப்போன அத்தனு விவசாயிங்களும் தான்… 20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவன் இன்னிக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்சை எடுக்குறான்… பாலத்துக்கு கீழ துணி துவைக்குகிறான் சாக்கடை அள்ளுறான்… உங்கள்ல நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷியத்த சொல்றேன்… இந்தியா முழுக்க ஒவ்வொரு முப்பது நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்குறான்… அவங்க குடும்பமே தெருவுக்கு வருது… இது கடந்த 10 வருசமா நடந்துட்டு வருது… அவிங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போட்றதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வருது… 2002 ல இருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்சம் விவசாயிகள் இந்த தொழிலையே விட்டுட்டு வேற வேலைக்குப் போயிட்டாங்க… இப்ப மீத்தேன் வாயு… அத எடுக்கறதுக்காக தஞ்சாவூர் நாகப்பட்டினம் ரெண்டு டிஸ்ட்ரிக்கலயும் ஒரு லட்சத்து 819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேசனல் கம்பெனி அழிக்கப் போவுது… அந்த விவசாய குடும்பம்லாம் பசில சாகப் போகுது… 5000ம் கோடி கடன் வாங்குன ஒரு பியர் பேக்ட்ரி ஓனர் என்னால அந்தக் கடன கட்ட முடிலன்னு கை தூக்குறான்… ஆனா தற்கொல பண்ணிக்கல… அவனுக்கு லோன் கொடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல… ஆனா 5000ம் ரூபா கடன் வாங்குன ஒரு விவசாயி அத கட்ட முடியாம வட்டி மேல வட்டி ஏறி பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்குறான்… இதயெல்லாம் கவனிக்க சிட்டில இருக்கற உங்களுக்கு நேரம் இல்ல… இத சொல்லத்தான் டிவி சேனல்ட்ட கேட்டோம்… ஆனா டிவில லேகியம் விக்கவும் சமையல் செய்யவும் டான்சுக்கு மார்க் போடவும் டைம் இருக்கு… ஒரு கிராமம் அழிய போறத சொல்ல 2 நிமிசம் இல்ல… இந்தியாவுக்கு பேக்ட்ரியே வேணாம்னு நாங்க சொல்ல வர்ல.., குடிக்கற பால்ல இருந்து தயார் பன்ற சோப்பு வேணாம்… முட்டை மீனு கேரட்ல இருந்து எடுக்குற பேர்னஸ் கிரீம் வேணாம்… தக்காளி ஆரஞ்சு பாதாம்ல தயாரிக்குற அழகு சாதன பேக்டரி வேணாம்… இந்தியாவுல விட்டமின் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000ம் குழந்தைங்க இறந்து போறாங்கய்யா… பணக்காரன் யூஸ் பன்ற ஒரு காண்டம்ல ஸ்ட்ராபெரி ப்ளேவர் வேணும்னா ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைல ஷ்ட்ராபெரிய நினைச்சு பாக்க முடியுமா… 

5.ரமணா – இளைஞர்களுக்கு அரசியல் தெளிவு – லஞ்சம் கூடாது… 

சாதி மதம் இனம் மொழி இது எல்லோர்த்துக்கும் அப்பாற்பட்ட ஒரே இனம் ஸ்டூடன்ட்ஸ். மாணவர்கள் தான்… மாணாவ சக்திய வச்சு எந்த நாட்டோட தலையெழூத்தையும் மாத்திடலாம்கறதுக்கு உதாரணம் தான் நீங்க… ஒவ்வொரு மாணவனும் நெருப்பு மாதிரி… நெருப்புக்கு மட்டும்தான் கூட சேர்ற எல்லாத்தையும் நெருப்பா மாத்துற சக்தி இருக்கு… அந்த நெருப்பெல்லாம் ஒன்னு சேந்தா இந்தியாவே தீப்பிழம்பா மாறும்… என்ன இல்ல இந்தியாவுல… எல்லாமே இருக்கு… ஒரு இந்தியா 72 சிங்கப்பூருக்கு சமம்.., ஒரு இந்தியா 15 இங்கிலாந்துக்கு சமம்… ஒரு இந்தியா 4 பாகிஸ்தானுக்கு சமம்… ஒரு இந்தியா மனித சக்தில 3 அமெரிக்காவுக்கு சமம்… அமெரிக்க ஜனத்தொகை 28 கோடி… 28 கோடில ஒரு எடிசன், ஒரு லிங்கன், ஒரு பில்கேட்ஸ் இருக்கும்போது இந்தியால ஒருத்தர் கூட இல்லையே… செருப்பு தச்ச ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியா வந்தாரு… இங்க எத்தன ஆப்ரகாம் லிங்கன் இன்னும் செருப்ப மட்டுமே தச்சுட்டு இருக்காங்களோ தெரியல… அத ஏன் நம்மளால சாதிக்க முடியல.,. பணம் எல்லாத்துக்குமே பணம்… கேவலம் விளையாட்டுல கூட லஞ்சம்…ஒவ்வொரு நாட்டுக்காரனும் ஒலிம்பிக்ல எத்தன தங்கப் பதாக்கும் எத்தன வெள்ளிப் பதக்கம்னு கணக்குப் போட்டுட்டு இருப்பான்… ஆனா இந்தியாவுல மட்டும் தான் பதக்கப்பட்டியல்ல இந்தியா பேராவது வராதான்னு பாத்துட்டு இருக்குமே ஏன்… இங்க திறமசாலிகள் இல்லையா… பல மடங்கு அதிகம்… அவிங்க ஆதிவாசில இருந்தப்பவே இங்க அரசாங்கம் நடத்திருக்கோம்… அங்க மொழியே இல்லாதப்ப  இங்க புலவர்கள் இருந்திருக்காங்க… அந்த வளர்ச்சி இப்ப ஏன் இல்ல… பணம் லஞ்சம்… எவனுக்கு கொடுக்கறதுக்கோ இன்னொருத்தன் வாங்குறான்… இதயெல்லாம் தடுத்து நிறுத்துற சக்தி மாணவர்களுக்கு மட்டும் தான் இருக்கு… 

6.சர்கார் – 49 P

சட்டம் திருடர்களை தண்டிப்பது மட்டுமல்ல… திருடப்பட்ட பொருளை திருப்பிக் கொடுப்பதும் தான்… ஜனநாயகத்தின் மிகப்பெரிய சொத்து ஓட்டுரிமைன்னா அந்த உரிமை திருடப்பட்ட போது திருப்பிக் கொடுக்கறது தான முறை… 

ஒவ்வொரு ஓட்டுமே முக்கியந்தான் சார்… அமெரிக்காவில் தாய்மொழி இங்கிலீசா ஜெர்மனான்ற ஓட்டெடுப்பு நடத்துனப்ப ஒரேயொரு ஓட்டுல தான் சார் இங்கிலீஷ்னு முடிவாச்சு… ப்ரான்ஸ்ல ராணுவ ஆட்சியா மக்களாட்சியான்ற ஓட்டெடுப்புல ஒரேயொரு ஓட்டுல தான் மக்களாட்சினு முடிவானது… ஹிட்லர் நாஜிப்படையோட தலைவர் ஆனது ஒரு ஓட்டுல… வாஷிங்டன் அமெரிக்காவோட இணைஞ்சது ஒரு ஓட்டுல… 

செக்சன் 49 பி படி ஒருத்தருடைய ஓட்டு கள்ள ஓட்டா போடப்பட்டிருந்தா அவருக்கு பேலட் ஓட்டுனு ஒன்னு கொடுத்து அவருடைய ஓட்டப் போட அனுமதிச்சிருக்கனும்… 

இவ்வாறு தன்னுடைய படங்களின் மூலமாக எதாவதொரு புதிய செய்தி சொல்லும் ஏ ஆர் முருகதாஸ் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளார்… தர்பார் படத்தில் சொல்லப் போகும் புதிய செய்திக்காக காத்திருப்போம்.

Related Articles

1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை... 1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் மீட...
பந்தி பரிமாறுவார்கள் எவ்வளவு முக்கியமானவ... ஆரம்ப காலங்களில் விசேஷ வீடுகளில் பந்தி என்பது தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல் இருக்கும். அப்போதெல்லாம் மண்தரையில் சாணி மொளங்கில் அமர்ந்து சாப்பிடுவத...
தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கு தகுந்த பட...  தயாரிப்பு: பென் ஸ்டுடியோஸ் & ஸ்டோன் பெஞ்ச்இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்இசை: சந்தோஷ் நாராயணன்ஒளிப்பதிவு: திருஎடிட்டிங்: ...
இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் சேவைக் கட்ட... ஜனவரி 1 2018 முதல் டெபிட் கார்ட் பயன்படுத்தி 2000ரூபாய் வரைக்கும் மேற்கொள்ளப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு கட்டணமில்லா சேவையை வழங்க மத்திய அரசு முன...

Be the first to comment on "ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்! – ஏ ஆர் முருகதாசின் புதுமை௧ள்!"

Leave a comment

Your email address will not be published.


*