தடைகளை தாண்டி சாதனை படைத்த இளம் இயக்குனர்கள்! – இளம் இயக்குனர்கள் கடந்து வந்த பாதை!

Young Directors who overcome the obstacles

இயக்குநர் ராம்குமார் (முண்டாசுப் பட்டி, ராட்சசன்)

சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை. அப்பா தேவராஜ், டிரைவர். சமீபத்தில் தவறிவிட்டார். அம்மா, மல்லிகா. அண்ணன் குமார், திருப்பூரில் பிரஸ் நடத்துறார். சின்ன வயசில் ராம் குமார் தன் வீடு முழுக்கக் கிறுக்கி விளையாடாத இடம் இல்லையாம். அப்படி ரொம்பச் சின்ன வயசுல இருந்தே வரைய ஆரம்பித்த்தாலும். வீட்டில் நிறைய பத்திரிகைகள் வாங்கிப் படிக்கிற பழக்கம் இருந்த்தாலும் அவருக்கு படிக்கிற ஆர்வமும் இயல்பிலேயே வந்துவிட்டது. வரைவது, படிப்பதுன்னு மூளைக்கு நிறைய வேலை கொடுத்த்தால், எதிர்காலத்துல கற்பனை சார்ந்த துறையிலதான் வேலை பார்க்கணும் என்று முடிவெடுத்தார்.

கார்ட்டூனிஸ்ட் ஆகணும், பாடலாசிரியர் ஆகணும், ஸ்டன்ட் மாஸ்டர் ஆகணும் என்று இவர் பல்வேறு நிலைகளில் பலவிதமாக ஆசைப்பட்டதுண்டு. பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆனந்த விகடனில் வந்த சினிமா இயக்குநர்களின் பேட்டிகளைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான், எல்லாக் கலைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு வேலை இயக்கம் என்று அவருக்குத் தெரிய வந்தது. அதற்க்குப் பிறகுதான் ‘இயக்குநர் ஆகணும்’ என்று முடிவெடுத்தார்.

அவர் திருப்பூரில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது நடந்த மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில்‘2020-ல் இந்தியா’ங்கிற தலைப்புக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்குப் பத்துக் கை கொடுத்து, பத்துக் கைக்கும் ஒரு பிரச்னையை வரைந்து ‘அந்தப் பிரச்னைகள் இல்லாத இந்தியாதான் 2020-ன் கனவு’ங்கிற  என்ற அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு வென்றார். ப்ளஸ் டூ முடித்துவிட்டு, பிலிம் இன்ஸ்டிட்யூட் அல்லது ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்று முயற்சிகள் செய்தார் ஆனால் எதுவும் அமையவில்லை. உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி, சென்னைக்கு வந்து பலனின்றி திருப்பூ ருக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில்தான்,  ரயிலில் சந்தித்த ‘விருமாண்டி’ படத்தில் ‘போட்டோ ஃபிளட்’ டிபார்ட்மென்ட்டில் வேலை பார்க்கும் சதீஷ் குமார் என்பவரிடம் தன் இயக்குநர் கனவை சொல்லி அவர் உதவியால் சென்னை சென்று தன் நண்பன் கருப்புசாமியுடன் சேர்ந்து,‘விருமாண்டி’ ஷூட்டிங் ஸ்பாட்டைப் பார்த்தார் தீவிர கமல் ரசிகரான ராம் குமார் தன்னுடைய ஸ்க்ரிப்டையும், கார்ட்டூன்களையும் கையோடு எடுத்துப் போய் நாசர், சந்தானபாரதி இருவரிடமும் தன் சினிமா ஆசையைச் சொல்ல ‘தொடர்ந்து முயற்சி பண்ணு, நிச்சயம் சினிமாவுக்கு வந்திடுவ’ என்று இருவரும் ராம் குமாரை பாராட்டினார்கள்.

பிறகு மீண்டும் சென்னை சென்று கார்டூனிஸ்ட் மதனை சந்தித்து தன்னுடைய கார்ட்டூன்களை காட்டி பாராட்டுக்களைப் பெற்றார். அவர்தான் ‘நிறைய குறும்படம் எடுத்துப் பழகு’ என்று சொல்லி குறும்படம் என்கிற விஷயத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து. அவர் மூலமாக விகடன் ஆசிரியர் ரா.கண்ணன்னை சந்திக்க அவருக்கும் ராம்குமாரின் கார்ட்டூன்ஸ் பிடித்திருந்தது. அதைத் தொடரந்து அவருடைய கார்ட்டூன் அடுத்தவார ஆனந்த விகடனில் ஒரு பக்கத்துக்கு வந்தது. பிறகு, தொடர்ந்து நிறைய வரைய ஆரம்பித்தார். ஆனந்த விகடனில் இருந்து கார்டூனுக்கு கிடைத்த சன்மானம்தான் கலைத்துறையில அவருக்குக் கிடைத்த முதல் சம்பளம்.

திருப்பூர் அரிமா சங்கம் சார்பாக நடந்த ஓவியக் கண்காட்சியில் தன் கார்ட்டூன்களையெல்லாம் கண்காட்சியா வைத்திருந்தார். அப்போதுதான், ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் அவருக்குப் பழக்கமானார். இருவரும் இணைந்து குறும்படங்கள் எடுத்து கொஞ்சம் சினிமா கற்றுக்கொண்டார். பிறகு இயக்குனர் சிம்புதேவனிடம் உதவி இயக்குநரா சேர முயற்சி செய்து வாய்ப்பு கிடைத்தும் அவரிடம் பணியாற்ற முடியாமல் போனது. பிறகு, ‘நாளைய இயக்குநர் சீஸன் 2’ல் கலந்துகொண்டார். ‘ஆயுதம்’னு வேறொரு குறும்படம் எடுத்து அனுப்பி நிகழ்ச்சிக்கு தேர்வானார். ஒட்டுமொத்த சீஸனுக்குமான சிறந்த குறும்படமாக ‘முண்டாசுப்பட்டி’ தேர்வானது. 

அதையடுத்து ‘முண்டாசுப்பட்டி’யைப் பெரிய படத்துக்கான திரைக்கதையாக எழுதினார். தயாரிப்பாளர் சி.வி.குமார் சார்கிட்ட கதையைச் சொன்னார் முதலில் அவருக்குப் பிடிக்கவில்லை பிறகு கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து மறுபடியும் சி.வி.குமாரிடமே சென்று கதையை சொல்லி படத்துக்கு ஓகே வாங்கி ‘முண்டாசுப்பட்டி’ மூலம் இயக்குனர் ஆனார். ஹாலிவுட் இயக்குநர்கள் ‘கோயன் பிரதர்ஸ்’ படங்கள் என்றால் ராம் குமாருக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப சீரியஸா ஒரு படம் எடுத்தா, அடுத்ததா ஒரு எவர்கிரீன் காமெடிப் படத்தை எடுப்பார்கள். அப்படிபட்ட ஒரு இயக்குநராகத் தான் வளரணும் என்று ராம் குமாருக்கு ஆசை.

இயக்குனர் பிரேம் குமார் (96)

அம்மா ஜீவசந்திராவுக்கும் அப்பா சந்திரனுக்கும் மகனாக திருச்சியில் பிறந்தார். அம்மா அப்பா வேலைக்காக தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்துவிட பிரேம் படித்து வளர்ந்ததெல்லாம் தஞ்சாவூரில்தான். அங்கு உள்ள ஆக்ஸீலியம் ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பு வரை, கமலா சுப்பிரமணியம் ஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பிரேமின் அண்ணன் சாலை வேதன், தஞ்சாவூர் டான் போஸ்கோ ஸ்கூலில் படித்தார். அந்த ஸ்கூல் ஸ்டூடென்ட்னு சொன்னாலே மரியாதை கிடைக்கும். என்பதால், ப்ளஸ் டூவுக்கு அவரும் அங்கே கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தார். பள்ளிக் காலங்களில் கராத்தே, கிரிக்கெட், நீச்சல் இவற்றில் ஆர்வம்.

அவருக்கு படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லாமல் போயி போட்டோகிராபியில் ஆர்வம் வந்தது. நேஷனல் ஜியோகிராபியில் வேலை பார்க்கணும் என்று ஆசைப் பட்டார். போட்டோகிராபராக அவருடைய நண்பர்கள் ராஜேஷ், வினோத், செந்தில், கதிரவன் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். கதிரவன் என்ற நண்பரின் மூலமாகத் தான் அவருக்கு பக்ஸ் அறிமுகம் ஆனார். நண்பர் வினோத்தான், பிரேமின் அப்பாவிடம் அவருக்கிருக்கிற போட்டோகிராபி ஆர்வத்தைச் சொல்லி, விஸ்காம் படிக்கக் காரணமாக இருந்தார். மகனுக்காக பிரேமின் அப்பா நிலத்தை வித்து, கோயம்புத்தூரில் விஸ்காம் படிக்க சேர்த்துவிட்டார். படிப்பு முடிந்ததும் அண்ணனுக்கு சென்னையில நல்ல வேலை கிடைத்ததால், குடும்பத்தோடு சென்னையில் குடியேறினார் பிரேம். சென்னையில் அடையாறு பிலிம் இன்ஸ்டிட்யூட்ல டி.எஃப்.டெக் படித்தார். அங்குதான் அவருக்கு பாலாஜி தரணீதரன், ‘அசுரவதம்’ மருதுபாண்டியன் ஆகியோர் நண்பரானார்கள். வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆகணும் என்று ஆசைப்பட்ட பிரேம் தன்னுடைய புரொஃபஸர் மூலமாக ‘எமி விருது’ வாங்கிய வைல்டு லைஃப் போட்டோகிராபர் அல்போன்ஸ் ராய் அவர்களிடம் மாணவராக சேரந்து நிறைய ஆவணப்படங்களில் பணியாற்றினார். தன்னுடைய குருவான அதே அல்போன்ஸ் ராய்க்கு பின்னாளில் மருமகன் ஆனார்.

பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நல்ல பர்ஃபாமன்ஸ் செய்து கோல்டு மெடல் வாங்கினார். அவர் ஒளிப்பதிவு செய்த ‘பரமபதம்’ குறும்படத்துக்கு மாநில விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் ரத்னவேலிடம் உதவி ஒளிப்பதிவாளரா சேரணும் என்று ஆசைப்பட்டார். ஆனால் ஆசை நிறைவேறவில்லை. பிறகு ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனிடம் உதவி ஒளிப்பதிவாளராகச் சேர்ந்து ‘பாய்ஸ்.’ படத்தில் முதன்முறையாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பிறகு முதுகுத்தண்டில் விபத்து ஏற்பட பல மாதங்கள் ஓய்வில் இருந்தார். குணமானதும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலிடம் வாய்ப்பு கிடைத்தது. ‘பேரழகன்’ தொடங்கி, ‘வாரணம் ஆயிரம்’ வரை ஆறேழு படங்களில் பணியாற்றினார். `வர்ணம்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான்  விஜய் சேதுபதி அவருக்கு அறிமுகம். ஒளிப்பதிவாளராக ‘பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’, ‘எய்தவன்’னு நிறைய படங்களில் பணியாற்றினார்.

இயக்குநர் ஆகணும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததே கிடையாது. தனியா உட்கார்ந்து நிறைய கதை கவிதைகள் எழுதியிருக்கிறார். தன் கவிதைகளை ஒரு தொகுப்பாவே வைத்திருக்கிறார். அதை எழுத்தாளர் பிரபஞ்சனிடம் காட்டி பாராட்டும் பெற்றார். நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவல் எழுதி அதுக்கு, ‘கபி கரே கம்’னு என் பெயர் வைத்திருக்கிறார். 2014-ல் தொடங்கி இன்னும் எழுதி முடிக்கப்படாத அந்த நாவலின் ஒரு பகுதிதான், ‘96’ படம். விஜய் சேதுபதிகிட்ட இந்தக் கதையைச் சொல்ல நீங்க இயக்கினா, நான் நடிக்கிறேன்’ என்று விஜய் சேதுபதி சொல்ல இயக்குனர் ஆகிவிட்டார் பிரேம்.

இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி)

ஜுன் 14, 1989. சேகுவேரா, டொனால்டு டிரம்ப் இருவரும் பிறந்த தேதியில் பிறந்தார் அருண்பிரபு புருஷோத்தமன் . மயிலாடுதுறையில ஈழத்துத் தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் முன்னிலையில, ஐயா கலிபூங்குன்றன் அவருக்கு ‘தம்பி பிரபாகரன்’ என்று பெயர் வைத்தார். வீட்டில் எல்லோரும் ‘தம்பி’ என்று கூப்பிட்டார்கள். தம்பி பிரபாகரன், தம்பி, பிரபு, அருண் பிரபு, அருண் நோபல் என்று பெயர் மாறியிருக்கிறது. ஏழரை, வைரஸ், வரும்/வராது, ஊடகம் என்று இவருக்கு சில பட்டப்பெயர்களும் உண்டு.

அவருடைய அப்பா புருஷோத்தமனுக்கு வேதாரண்யம் சொந்த ஊர். சுயமரியாதைக்காரர். ‘திலீபன் புத்தக நிலையம்’ என்ற பெயர்ல வீட்டிலேயே ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவில் வாழ்றார். திராவிடர் கழகத்துல இருந்தார். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தாலே ’தோழர்களே… சாகத் துணிவு கொள்ளுங்கள்!’ என்ற வாசகத்தோடு ஒரு பெரிய பெரியார் ஓவியம் உங்களை வரவேற்கும். அவருடைய அம்மா, லலிதா, திருவீழிமிழலையைச் சேரந்த பெரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இரண்டு அக்காக்கள் உள்ளனர். பெரிய அக்கா உண்மை (எ) அபர்ணா. சின்ன அக்கா விடுதலை (எ) விசயலட்சுமி.

அவருடைய தாய் மாமா தான் சிவகார்த்திகேயனின் அப்பாவான தாஸ். சிகாவின் அப்பா அதாவது அருணின் மாமா சிறைக் கண்காணிப்பாளரா இருந்ததனால், அவருடைய விடுமுறை நாள்களெல்லாம் ஜெயில் வளாகத்தில்தான் கழியும். சிறுவயது முதலே தன் அப்பாவோட அரசியல் கூட்டங்கள், இலக்கிய விழாக்கள், நூலகம், திரையரங்குகள் என காலம் கழித்ததால் இவருக்கு நண்பர்கள் குறைவு. தன்னுடைய அக்கா விடுதலை மூலமாக அவருக்கு யோகாவில் ஆர்வம் பிறந்தது. உலகளவிலான யோகா, கராத்தே போட்டிகளில் கலந்துகொண்டு, ஜெயிக்கவும் செய்திருக்கிறார். சிறுவயதில் கொஞ்சம் திக்கிப் பேசுற பையனாகவும் இருந்துள்ளார். அருண் அப்படி திக்கிப் பேசுறதை நிறுத்தவும், தமிழ் உச்சரிப்பு சரியா வரணும் என்றும் அவருடைய அப்பா அவருக்கு சில பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். சித்தர் பாடல்கள், திருமந்திரம், பாவேந்தர் மற்றும் காசி ஆனந்தன் பாடல்கள், கலைஞரின் வசனங்கள்… எல்லாத்தையும் கொடுத்து மனப்பாடம் பண்ணச் சொன்ன அவருடைய அப்பா, காலையில் 5 மணிக்கே அருணை எழுப்பிவிட்டு அதை ஒப்பிக்கவும் சொல்வார். வீட்டுக்கு வரும்  சொந்தக்காரர்களிடம் அப்பப்போ அருண் பல குரலில் பேசிக் காட்டுவார். அப்படி அவர் பல குரல்களில் பேசுவதைப் பார்த்து, ‘அபஸ்வரம்’ ராம்ஜி தன்னுடைய ‘இன்னிசை மழலைகள் இசைக் குழு’வில் அறுணை சேர்த்துக் கொண்டார். நான்காம் வகுப்பு முதல் ஏழாம்வகுப்பு வரை பல கோயில், கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மிமிக்ரி பண்ணியிருக்கிறார் அருண். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அருணின் திறமைகளை பார்த்த ஒரு உதவி இயக்குநர், கே.பாக்யராஜின் ‘ஒருகதையின் கதை’ நாடகத்தில் நடிக்க அருணை கூட்டிக்கிட்டுப் போனார், அப்படி தொடர்ந்த பயணம் தான் பாலசந்தர், சமுத்திரக்கனி, சி.ஜே.பாஸ்கர், சுந்தர்.கே.விஜயன், பத்ரி… இப்படிப் பல இயக்குநர்களோட சீரியல்களில் அவரை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தது. ‘ஒருகதையின் கதை’, ‘அண்ணாமலை’, ‘அண்ணி’, ‘மாங்கல்யம்’ என்று 60-க்கும் அதிகமான சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடிசத்துள்ளார் அருண். வொர்க் பண்ணியிருக்கேன். அதேசமயம், பல படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வேலை பார்த்திருக்கிறார்.

கல்லூரி காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து ‘ஆடடா களத்தே!’ என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடிச்சிருந்தார் அருண். அந்தக் குறும்படத்தை இங்கே இருக்கிற எல்லா நல்ல இயக்குநர்களுக்கும் போட்டுக் காட்டி, அவர்கள் கருத்தைக் கேட்கலாம் என்று அவருடைய அப்பாவும் அருணும் நினைத்து பல இயக்குநர்களின் அலுவலங்கங்களுக்குச் சென்று குறும்பட சிடியைக் கொடுத்து பதிலுக்காகக் காத்திருந்தார்கள். யார்கிட்ட இருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லை. அடுத்த சிலநாள்களில் பாலுமகேந்திரா அருணை அழைத்து உங்க குறும்படத்தைப் பார்த்தேன்… என்னால தூங்க முடியல. உங்களை நேர்ல சந்திக்கமுடியுமா என்று கேட்டார். அவருடனான உரையாடலுக்குப் பிறகு அருணுக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்ந்து படித்தார். அங்கே முனைவர் ச.ராஜநாயகம் தான் அவருக்கு ஆசான். பாக்யராஜ் கோதை, யெஷ்வந்த் இன்மொழி, எட்மண்ட் ரான்சன், சஞ்சீவன், பிரகாஷ் போன்ற நண்பர்கள் அவருக்கு கல்லூரியில் கிடைத்தார்கள்.

பிறகு இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கமல் நடித்த ‘மன்மதன் அம்பு’, ரஜினி நடித்து டிராப் ஆன ‘ராணா’ படம், ‘கோச்சடையான்’, பாலிவுட்ல சஞ்சய் தத் நடிச்ச ‘போலீஸ் கிரி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றனார் அருண். அந்தச் சமயத்திலேயே நான்கு திரைக்கதைகள் எழுதித் தயாராக வைத்திருந்த அருண் அதில் இருந்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து 2011-ல் தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தார். ஒன்றரை வருடங்கள். அறுபது, எழுபது தயாரிப்பாளர்கள், ஆறேழு ஹீரோக்களுக்குக் கதை சொன்னார். எதுவும் அமையவில்லை. ஒரே லொக்கேஷன்; லட்சங்களில் பட்ஜெட்; 30 நாள்ல ஷூட்டிங். அதுதான் இப்போ டிரெண்டு! ‘பீட்சா’ படம் பார்க்கலையா நீ?என்று ஒருவர் அருணிடம் சொல்ல அடுத்த இரண்டு வாரத்தில் எழுதின திரைக்கதைதான், ‘அருவி.’ அடுத்த மூன்று வாரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை சந்தித்து ‘அருவி’யைத் தயாரிக்க ஓகே சொன்னார். அடுத்தநொடியிலிருந்து அருண் இயக்குனரானார்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் (ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர்)

ஒருநாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் சென்னை புதுப்பேட்டையில் பிறந்து வளர்ந்தார். சித்ரா, காஸினோ, அண்ணா, சாந்தி, தேவி, பிளாஸா, ஆல்பர்ட், அலங்கார்… என்று அவர் வசித்த ஏரியாவைச் சுற்றி எக்கச்சக்கமான தியேட்டர்கள் இருந்ததால், படம் பார்க்கிற பழக்கம் இயல்பாகவே அவருக்கு இருந்தது. தவிர, நான்காம் வகுப்பு வரை அவர் படித்த கிரைஸ்ட் சர்ச் பள்ளியின் காம்பவுண்டு சுவரும், தேவி தியேட்டரின் காம்பவுண்டு சுவரும் ஒட்டியே இருந்தததால் போஸ்டர்களை ஒட்டும்போது வேடிக்கை பார்ப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்று. அவருடைய அப்பா வெங்கடேசன். பாக்கெட் நாவல்களின் பப்ளிஷரா இருந்தவர். கிரைஸ்ட் ஸ்கூலில் அவர் படித்துக்கொண்டு இருக்கும்போதே அவருடைய அப்பா இறந்துவிட்டார். அம்மா பெயர் செலின். தங்கச்சி நான்சி.

பள்ளியில் இவர் நன்றாகப் படிக்கும் மாணவன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் கலந்துகொண்டு ஜெயித்துள்ளார். வறுமையில் இருந்தாலும் படிப்பிலும், கலைகளிலும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறாரென்று அவருடைய ஆசிரியர்களே அவருக்கு ஃபீஸ் கட்டி படிக்க வைத்தார்கள். குறிப்பாக அந்தப் பள்ளியில் உள்ள லலிதா என்ற டீச்சர் அவருக்குப் பல வகையில் உதவியாக இருந்துள்ளார். 92% மதிப்பெண்களோடு, ப்ளஸ் டூ முடித்தார். நெல்சனின் இப்போதைய படங்களுக்கு அவர்கூட சேர்ந்து கதை, வசனத்தில்  பங்கெடுத்துக்கும் சங்கர் தாஸ் என்பவர் அவர் படித்த ஸ்கூலில் தமிழாசிரியராக இருந்தவர். பள்ளிக்காலத்தில் அவருக்கு லெனின் என்ற நெருங்கிய நண்பர் இருந்துள்ளார்.

அவருடைய அம்மா ஊர் ஊரா போய், கண்காட்சிகளில் ஃபேன்ஸி ஸ்டோர் வைக்கும்போதெல்லாம் அம்மாவுக்கு உதவியாக அவரும் கூட போவார். பேன்சி பொருட்களை கூவி கூவி விற்பார். அம்மாவின் கஷ்டத்தைப் ப்போக்கவே அவர் சீக்கிரம் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்தார்.  குடும்பத்தின் வறுமையைப் போக்க ப்ளஸ் ஒன் படிக்கும்போதே, குழந்தைங்களுக்கு டியூசன் எடுத்தார். தன் நண்பனிடம் சைக்கிளைக் கடன் வாங்கிக்கொண்டு, ‘ஃபாஸ்ட் டெலிவரி கூரியர்’ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த வேலைதான், சென்னையின் சந்து பொந்துகளையெல்லாம் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததது. ஒரு கூரியருக்கு 2 ரூபாய் கிடைக்கும். அப்படி தன் அம்மாவின் கஷ்டத்தைப் போக்கியவர் கல்லூரிக்குக் காலடி எடுத்துவைத்த பிறகும், ‘பார்ட் டைம் ஜாப்’ முடிவில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்.

இன்ஜினியரிங் படித்தால் பகுதிநேர வேலைக்குச் செல்வது கடினம் என்பதால் லயோலா கல்லூரியில் சேரந்து கெமிஸ்ட்ரி படிக்க ஆரம்பித்தார். சிறுவயது முதல் சேர்த்து வைத்த காசில் பைக் வாங்கி, முதல்நாள் வகுப்புக்கே பைக்கில் தான் போனார். 8 – 2 மணி வரைக்கும் காலேஜ். பிறகு, டியூசன், வேலை. இப்படி கழிந்தது அவருடைய கல்லூரி காலம். அவர் லயோலாவில் படிக்கும்போது, ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் பகுதிநேர வேலைக்கு ஆடிஷன் வந்திருக்க நெல்சனின் பர்ஃபாமென்ஸ் நல்லா இருந்தது என்று அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரேடியா உலகைப் பொறுத்தவரை ‘ஆல் இந்தியா ரேடியோ’ ரமேஷ் தான் அவருடைய குரு. அதே சமயம் நண்பன் லெனின்கூட சேர்ந்து ஒரு கால் சென்டரிலும் வேலை பார்த்துள்ளார். பணம் சம்பாதிப்பதற்காகத் தான் அவர் குறும்பட இயக்குனர் ஆகியுள்ளார்.

அவர் காலேஜ் படிக்கும்போது, அண்ணா யுனிவர்சிட்டியில ஒரு குறும்படப் போட்டி. முதல் பரிசு 10,000 ரூபாய் என்று அறிவித்திருந்தார்கள். நெட்சனும், சங்கர் தாஸ் சாரும் மெரினாவில் சுண்டல் விற்கிற ஒரு பையனோட கதையைத் திரைக்கதையாக்கி, ‘மெரினா’ங்கிற குறும்படம் எடுத்துள்ளாரகள். இதுதான் அவருக்குள் சினிமா விதையை விதைத்துள்ளது. இப்படி அவர் ஓடி ஓடி உழைக்க காலேஜ் வருகைப் பதிவேட்டில் அவருக்குப் பிரச்னை ஏற்பட்டது. அதனால், இன்னொரு முறை செமஸ்டர் எழுதணும் என்று கல்லூரி நிர்வாகம் சொல்ல. ‘டிசி-யைக் கொடுங்க என்று டிசியை வாங்கிக்கொண்டு, ‘இதே காலேஜ்ல ஒருநாள் நான் சிறப்பு அழைப்பாளரா வருவேன்’னு லயோலா காலேஜ் கேட்டைப் பார்த்து சபதம் எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

‘டைரக்டர் ஆகணும்னு ஆசைப்படுற. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்துடு. டைரக்‌ஷன் படிக்கத்தான் டிகிரி தேவை. சினிமாட்டோ கிராபிக்குத் தேவையில்லை என்று சங்கர் தாஸ் சார் சொல்ல அடையாறு பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேரந்து படித்தார்.‘பத்து எண்றதுக்குள்ள’ கேமராமேன் பாஸ்கர், ‘மான்ஸ்டர்’ல உதவி இயக்குநரா வேலை பார்த்த மர்ஃபி, கிருஷ்ணா இவர்களெல்லாம் நெல்சனின் பிலிம் இன்ஸ்டிட்யூட் நண்பர்கள். இந்தக் கல்லூரி வாழ்க்கையும் பிடிக்காத நெல்சன் ‘ரேடியோ சிட்டி எஃப்.எம்’ சென்னையில் நடத்திய ஆடிஷனில் கலந்துகொண்டார். நண்டு ஜெகன், சுரேஷ், சுலபா, அர்ச்சனா… இவர்களுடைய நட்பு நெல்சனுக்கு கிடைத்தது. அதே சமயத்தில் நண்டு ஜெகன் மூலம் அறிமுகமான உஷா மூலமா க‘பிக் எஃப்.எம் ஆடிசனில் கலந்துகொண்டு தேர்வானார். ஒஃபிலியா, தீனா, நான் எல்லோரும் சென்னை ‘பிக் எஃப்.எம்’ல் கிடைத்த நண்பர்கள். பிறகு, ‘சூரியன் எஃப்.எம்’ல புரொகிராமிங் ஹெட் ஆனார். கிட்டத்தட்ட ஏழு ஸ்டேஷனுக்கு  புரொகிராமிங் ஹெட்டாக இருந்துள்ளார். இவருக்கு 22 வயதில் காதல் கல்யாணம் நடந்தது. 2010-ல் ரேடியோத் துறை போதும் என்று முடிவெடுத்து வெளியேறினார். பிறகு நண்பர்களோடு சேரந்து தனியாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதையும் நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு தயாரிப்பாளர் செல்வக்குமாரை சந்தித்துக் கதை சொன்னார். அப்போ, அவர் சொன்ன ஒரு கதை அவருக்குப் பிடிக்கவில்லை. பிறகு ஒருநாள் வேறொரு படத்தைப் பார்த்து, ‘நீங்க சொன்ன கதையில ஒரு போர்ஷன் இந்தப் படத்திலும் இருக்கு’ என்று அந்த தயாரிப்பாளர் நெல்சனிடம் கூறியுள்ளார். ‘நான்தான் அப்போவே பண்ணலாம்னு சொன்னேனே சார்’ என்று நெல்சன் கூற ‘சரி, நாம படம் பண்ணலாம்; கதை சொல்லுங்க’ என்று தயாரிப்பாளர் அழைத்துள்ளார். அப்படி நெல்சன் சொன்ன மூன்று கதைகளில், தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்த கதைதான், ‘ஒருநாள் கூத்து.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் (எட்டு தோட்டாக்கள்)

கும்பகோணம் அருகே உள்ள திருவைகாவூரில் பிறந்தார். அப்பா சங்கரனும்  அம்மா அலமேலுவும் சென்னையில் இருக்க நான்காம் வகுப்பு வரை கும்பகோணத்தில் தாத்தா-பாட்டி அரவணைப்பில் வளர்ந்தார். பிறகு, அவரும் சென்னைக்கு வந்துவிட்டார். குரோம்பேட்டை செயிண்ட் பால் ஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். விசேஷங்களுக்கு சமைத்துக் கொடுக்கிறது, சின்னச் சின்ன வேலைகள் என்று அவருடைய அம்மா தான் அவருக்கும் அவருடைய தம்பி சிவக்குமாருக்கும் சோறுபோட்டு வளர்த்து ஆளாக்கினார். ஏதோ ஒரு வகையில் அம்மாவுக்கு உதவியாக இருக்கணும் என்று ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அம்மா தயாரிக்கிற முறுக்கு, சீடை, மெழுகுவர்த்திப் பாக்கெட்டுகளை தன் குட்டி சைக்கிளில் வைத்துக்கொண்டு கடை கடையா போட்டுட்டு வருவார். அவ்வப்போது கேட்டரிங் சர்வீஸுக்கும் போவார்.

வறுமை அவருக்குள்ளே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி வைத்திருந்தது. படிப்பில் கவனம் இல்லை. கூடப் படிக்கிற பசங்கெல்லாம் பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிட்டுப் பரிசு வாங்கும்போது, நமக்கு ரெண்டுமே வரலையேனு அவர் வருத்தப்பட்டதுண்டு. ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு நூலகத்தில் எந்நேரமும் இருப்பார். அவருக்குப் பாடப் புத்தகங்கள் தந்த பயம், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் மேல் இல்லை. ஆனாலும், போட்டிகள்ல பசங்க வாங்கும் பரிசுகளைப் பார்த்து, நமக்கும் ஏதாவது பண்ணனும்னு யோசனையாவே அவருக்கு இருக்கும். திடீரென ஒருநாள் வீட்டுக்கு ஓடிவந்து, தொளதொளஎன இருக்கிற சட்டையை மாட்டிக்கிட்டு, பள்ளியில நடந்த மாறுவேடப் போட்டியில கலந்துக்கிட்டு, ஏதேதோ பேசினார். ஸ்கூலே விழுந்து சிரிக்க, பரிசும், கைத்தட்டலும் கிடைத்தது. அவர் வாழ்வின் முக்கியமான தருணம் அது. அதுக்குப் பிறகு ஆறாவது, ஏழாவது படிக்கும்போது நிறைய நாடகங்கள் போட ஆரம்பித்தார். வில்லுப்பாட்டு பாடினார். சிவானந்தினு ஒரு டீச்சர், ‘நீ நல்லா நடிக்கிற, நாடகம் எழுதுற.. எதிர்காலத்துல சினிமாவுக்குப் போ’னு சொன்னது தான் ஸ்ரீ கணேஷ் இயக்குநர் ஆனதற்கான முதல் விதை!

பத்தாம் வகுப்பு படிக்கிறப்போதான், அவருடைய அம்மா அவங்க சக்திக்கு மீறி ஸ்கூல் ஃபீஸ் கட்டுறார் என்பதை புரிந்துகொண்டார் ஸ்ரீகணேஷ். அதனால், குரோம்பேட்டை அரசுப் பள்ளியில சேர்ந்து, சுமையைக் குறைக்கலாம் என்று முடிவெடுத்தார். அங்கே ஓரளவுக்குப் படித்தார். அங்கே இருந்த வனஜா டீச்சர், எல்லாப் போட்டிகளுக்கும் அவரை அனுப்பி, கைத்தட்டல் வாங்க வைத்தார். ஸ்கூல் படிக்கும்  காலத்தில் இருந்து இப்போவரை கூடவே இருக்கிற தீபன்… தவிர, விக்னேஷ், முருகேசன், சீனி, பாலா, சாலை, அரவிந்தன், மதன், யுவராஜ் இப்படிப் பல நண்பர்கள் அவருக்கு கிடைத்தார்கள். அவருடைய சித்தி வித்யா, அவருடைய குடும்ப கஷ்டத்தை ஒரளவுக்குப் போக்கிவிட்டு தாமதமாக திருமணம் செய்துகொண்டார். அவருடைய மாமா சங்கர் கணேஷும் அக்கா செளமியாவும் காதல் ஜோடிகள். இப்போவரை மாமா சங்கர் கணேஷ்தான் ஸ்ரீகணேஷுக்கு அப்பா மாதிரி.

ஜெயின் காலேஜில் பி.காம் சேர்ந்தார். அங்கே அவர் படித்ததைவிட நாடகம் போட்டதுதான் அதிகம். நாடகங்கள் மூலமாக அவருக்கு கிஷோர் அறிமுகமானார். உலக சினிமாவை முதல் முதலா அறிமுகப்படுத்திய கிஷோர், கூடவே வீதி நாடகங்களுக்கும் ஸ்ரீ கணேஷைச் சேர்த்துக்கொண்டார். கல்லூரி வாழ்க்கையில் ஸ்ரீகாந்த், நாகப்பன், ரவிச்சந்திரன், கணேஷ் பாபு.. இன்னும் பலர்  நண்பரானார்கள். அவர்களுடன் சேர்ந்து நாட்டுப் பிரச்னைகளை வீதி நாடகங்கள் மூலமா அரங்கேற்றினார்.

காலேஜில் சேர்வதற்கு முன்பு ஒருமுறை, கும்பகோணத்தில் நடந்த கிரேஸி மோகனின் ஒரு நாடகத்துக்குப் பார்வையாளராகப் போனார் ஸ்ரீ கணேஷ். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மேடைக்கு முன்னால் உட்காராமல் பின்னாடி சென்று, ‘சார்.. என்னையும் உங்ககூட சேர்த்துக்கோங்க. என்ன வேலை கொடுத்தாலும் செய்றேன்’ என்று கிரேஸி மோகனிடம் சொல்ல அவரோ, ‘அடுத்த வாரம் சென்னையில நாடகம் இருக்கு, வா பார்த்துக்கலாம்’னு சொன்னார். அவர் சொன்ன இடத்தில் ஸ்ரீ கணேஷ் நின்னார். பிறகு, காலேஜ், வீதி நாடகங்களோடு, கிரேஸி மோகன் நாடகக் குழுவில் அப்ரண்டீஸ் வேலையும் செய்திருக்கிறார்.

ஆபீஸ் புராஜெக்ட்டுக்காக நண்பர் ஒருவருக்கு, ‘நான் உணர்ந்த தருணம்’ என்று ஒரு குறும்படத்தை முதல்முதலா எடுத்துக் கொடுத்தார் ஸ்ரீ கணேஷ். ஒருசில குறும்படங்களில் வேலை செய்த அனுபவம் இருந்ததனால், ‘நாம ஈஸியா குறும்படம் எடுத்துடலாம்’ என்று நினைத்து அந்தக் குறும்படத்தை எடுத்தார்.

ஆனால், ஸ்ரீ கணேஷின் மாமாவுக்கு ஸ்ரீ கணேஷ் செய்த முயற்சிகள் மீது வருத்தம். ‘அம்மாவோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கோடா’ என்று மாமா சொல்ல, அம்மாவோ, ‘உனக்குப் பிடிச்சதைப் பண்ணுப்பா’ என்று சொல்வார். அம்மாவுக்காக ஏதாச்சும் சம்பாதித்துக் கொடுக்க நினைத்தவர் அதுக்காகப் பல வினோதமான வேலைகளைப் பார்த்திருக்கிறார். ‘கிழிக்கிற’ வேலை அதில் முக்கியமானது. ஏஜென்ஸி மூலமா, அரசு அலுவலங்களில் இருக்கிற பழைய ஃபைல்களையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏத்திவிட்டு, அதையெல்லாம் கிழிச்சுப் போடணும். ஒரு பண்டலைக் கிழித்தால், 30 ரூபாய். ஒரு நாளைக்கு ஐந்து பண்டலைக் கிழிச்சுப்போட்டு, 150 ரூபாய் சம்பாதிப்பார்.

கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகியிருந்தார். ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ வங்கியில் அவருக்கு நைட் ஷிஃப்ட். இரவு 2 மணியில் இருந்து, காலையில் 11 மணி வரை வேலை. பிறகு, குட்டித் தூக்கம். அந்த வேலையில இருந்த காலத்தில் அவருக்குத் தூக்கமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். வேலைக்குப் பிறகு, தீவிரமான வாசிப்பு, சினிமா, நாடகம்.. இப்படியேதான் பொழுதுகள் கழியும். அப்போது, ‘தமிழ் ஸ்டுடியோ’ அமைப்பு நடத்திய ‘படிமை’ என்கிற உதவி இயக்குநர்களுக்கான பயிற்சியைத் துவக்கியிருந்தார்கள். ஸ்ரீ கணேஷும், ‘படிமை’ மாணவன் ஆனார். ஆறுமாத காலம் தீவிர இலக்கியம் என்பதுதான், அங்கே முதல் பயிற்சி. அதுவரை கிடைக்கிறதையெல்லாம் வாசிச்சுக்கிட்டிருந்த அவருக்கு, அங்கே கிடைத்த படிப்பினை அதிகம். கூடவே, ‘தமிழ் ஸ்டுடியோ’ இணையதளத்திற்கு குறும்பட விமர்சனமும் எழுதினார். அழகிய பெரியவன், பவா செல்லத்துரை, பிரபஞ்சன்.. இப்படிப் பல ஆளுமைகளைப் பேட்டி எடுத்துள்ளார். அம்மாவுக்காகக் கொஞ்சம் பணத்தைச் சேர்த்துக் கொடுத்துவிட்டு, வங்கி வேலையை விட்டுவிட்டார்.

அப்போதுதான், ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’ தொடங்கியிருந்தது. அவர் இயக்கிய ‘நிழல்’ குறும்படத்தைப் போட்டிக்கு அனுப்பி வைத்தார். அது தேர்வானது. ‘படிமை’யில் படித்துக்கொண்டே ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எஸ்.ரா-வின் ‘இரு குமிழ்கள்’ சிறுகதையை ‘ஒரு கோப்பைத் தேநீர்’ குறும்படமாக எடுத்தேன். அசோகமித்ரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ சிறுகதையை ‘டைம் அவுட்’ குறும்படம் ஆக்கினார். அந்த சீஸனில் ஸ்ரீ கணேஷின் குறும்படம் சில விருதுகளை வாங்கியது. ‘குரங்கு பொம்மை’ நித்திலன், ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன், அந்த நிகழ்ச்சியிலிருந்து என்கூடவே இருக்கிற கார்த்தி எனப் பலரும் நண்பர்கள் அவருக்கு ஆனார்கள்.

இயக்குனர் மிஷ்கினிடம் இரண்டு வருடம் உதவியாளராக இருந்தார். ‘ஓநாயும் ஆட்டிக்குட்டியும்’ படத்தை மிஷ்கினே தயாரித்து, நடிக்க முடிவெடுத்தார். தான் வியந்து பார்த்த ஒரு இயக்குநரின் படத்தில் ஸ்ரீ கணேஷும் வேலை பார்த்தார். கிளாப் போர்டு அடிப்பது, ஓடிப்போய் கிரவுடைக் கிளியர் பண்ணுவது, மானிட்டர் பார்ப்பது என எல்லா வேலைகளையும் ஆர்வமாகச் செய்தார். அந்த ஒரு படத்தில் அவர் கற்றுக்கொண்டது ஏராளம். சினிமா குறித்தும், ஃபிலிம் மேக்கிங் குறித்தும் மிஷ்கின் வாங்கி வைத்திருந்த பல அதிக விலையுள்ள புத்தகங்களை ஸ்ரீ கணேஷுக்கு கொடுத்து, படிக்கச் சொன்னார். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்குப் பிறகு  ‘நீ தனியா ஒரு கதை எழுது’னு மிஷ்கின் அவரை வாழ்த்தி வெளியே அனுப்பினார். 2013-ல் வெளியே வந்தவர் மூன்று கதைகளை எழுதி வைத்தருந்தார். ஆனால், சினிமாவோட சூழல் அவருக்குப் பல தயாரிப்பாளர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிந்தது.

தயாரிப்பாளர்களைத் திருப்திப்படுத்துகிற கதைகள் இருந்தால்தான் படம் பண்ண முடியும் என்பதை தெரிந்துகொண்டவர், எழுதி வைத்திருந்த தன் திரைக்கதைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கி காணாமபோனா என்னாகும்’ என்கிற புது திரைக்கதையை எழுதினார். மூன்று வருடப் போராட்டத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர் கிடைத்தார்.

Related Articles

அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அச...
சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்... சுஜாதா எழுதிய புத்தகங்களில் ரொம்ப பிராடு தனம் நிறைந்த புத்தகம் என்றால் அது கண்டிப்பாக அவர் எழுதிய "சிறுகதை எழுதுவது எப்படி?" என்ற புத்தகம் தான். அந்த ...
தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கு... ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.  இந...
நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்தது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ள...

Be the first to comment on "தடைகளை தாண்டி சாதனை படைத்த இளம் இயக்குனர்கள்! – இளம் இயக்குனர்கள் கடந்து வந்த பாதை!"

Leave a comment

Your email address will not be published.


*