காதல் காவியம் இல்லை என்றாலும் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்! – ஓ மை கடவுளே விமர்சனம்!

Oh My Kadavule movie review

இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் முதல் படம் இது. மேக்கிங் மிகச் சிறப்பு. கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் பழமை வாசம் அடித்தாலும் நிறைய இடங்களில் வியக்க வைக்கிறது இயக்குனரின் எழுத்து. வசனங்களை இன்னும் நன்றாக எழுதி உள்ளார். முதல் படம் என்பதால் சில விஷயங்களுக்காக பணிந்து சில காட்சிகளை எடுத்துள்ளார் என்பது தெரிய வருகிறது, அடுத்தடுத்த படங்களில் இறங்கி அடிப்பார் என எதிர்பார்க்கலாம். 

ஒளிப்பதிவு உட்பட அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் நன்றாக இருந்தன. பின்னணி இசையில் இருந்த கவனம் பாடல்களிலும் இருந்திருக்கலாம். 

நூடுல்ஸ் மண்டையாக ரித்திகா சிங். வெட்கப்படும் இடங்களில் செம அழகாக இருக்கிறார். மிகையில்லாத நடிப்பு அவருடைய பலம். குட்டி குட்டி ரியாக்சன்களால் மனதை கொள்ளை கொள்ளும் ரித்திகா இன்னும் பெரிய அளவில் வலம் வருவார். 

வாணி போஜன் மீது நாயகனுக்கு மட்டுமல்ல… நமக்குமே காதல் வருகிறது. அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டு உள்ளது. குறிப்பாக தன் லட்சியத்தை… தன் வாய்ப்பு பறிபோனதை… நண்பனுடன் பகிர்ந்துகொள்ளும் இடம் சிறப்பு. 

அர்ஜூன் மாரிமுத்து கதாபாத்திரத்தில் அசோக் செல்வன். மீசை தாடி இல்லாமல் லைட் டிரம்மில் ஆள் சாக்லேட்பாய் மாதிரி இருக்கார். அவருடைய நடிப்பில் செம துள்ளல். நட்பை கொண்டாடுதல், திருமண வாழ்வை பற்றி கோபப்பட்டு புலம்புதல், சண்டையிடுதல் போன்ற காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். நடிப்பின் மீது தனக்கு ஆர்வம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் கௌதம் மேனன் நடத்தும் ஆடிசனில் கலந்துகொள்ளும் காட்சியில் அசோக் செல்வன் மிரட்டுகிறார்.

 நகைச்சுவை நடிகர் ஷா ரா ஓரிரு இடங்களில் சிரிக்க வைக்கிறார். காதல் திருமணம் செய்துகொண்ட ஷா ரா தன் மனைவியை பேபி பேபி என அழைப்பது, பிள்ளை பெற்றுக் கொள்வதற்காக மனைவியுடன் சண்டை போடுவது, நண்பர்களுக்கு டைவர்ஸ் கிடைக்க கூடாது என வேண்டிக் கொள்வது போன்ற காட்சிகளில் ஷா ரா மனம் கவர்கிறார். 

நாயகனின் புலம்பலை கேட்கும் கடவுளாக விஜய் சேதுபதி. நாயகனின் புலம்பலை சிரித்துக்கொண்டே கேட்கிறார். கன்னக்குழி அழகன் விசேவுடன் பெரிய காக்கா முட்டை ரமேஷ் திலக் வருகிறார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருக்கிறார்கள். இவர்களை போன்ற கடவுள்கள் நண்பர்களாக கிடைத்தால் நாம் எல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலி!

ரன் லோலா ரன், ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும் படத்தைப் போலவே ‘செகண்ட் சான்ஸ்’ காட்சிகளை நம்பிய திரைப்படம். அந்தப் படங்களைப் போலவே ஒரே காட்சியை திரும்ப திரும்ப வைக்காமல் ஒருமுறை மட்டுமே திருப்பிக் காட்டுதல் என்ற முறைப்படி காட்சி அமைத்திருக்கிறார்கள். அது படத்தின் பலம். 

வாணி போஜன் நடுவிரலை தூக்கி காட்டும் காட்சியில் விரலை ப்ளர் செய்தது ஏன்? சென்சார் போர்டு அவ்வளவு கண்டிப்புடன் செயல்படுகிறது என நினைக்கும்போது எரிச்சலாக இருக்கிறது. 

எம். எஸ். பாஸ்கர் சொல்லும் கக்கூஸ் பிளாஸ்பேக் காட்சி வரும் இடம் செம. தமிழ் சினிமாவில் வந்த பெஸ்ட் மோடிவேசன் சீன்களில் இந்தக் காட்சியும் ஒன்று. முதல் பாதியில் வாணி போஜன் மீது நமக்கு காதல் வருகிறது, இரண்டாம் பாதியில் ரித்திகா சிங் மீது காதல் வருகிறது… கதாபாத்திர வடிவமைப்பு தான் இந்தப் படத்தின் பலமே. கதைப்போமா பாடலின்போது வருகிற காட்சிகள் ரொம்ப ரசிக்கும்படி இருந்தன.  அழகான காதல் படமான இந்தப் படத்தை மிஸ் பண்ணாம உங்கள் மனம் கவர்ந்தவருடன் தியேட்டரில் கண்டுகளியுங்கள். 

படத்தில் உள்ள சிறப்பான வசனங்கள்: 

  1. கல்யாணத்துக்கு அப்புறம் பிரெண்ட்ஸ கரெக்ட்டான டைம்க்கு மீட் பண்றது எவ்வளவு கஷ்டம்னு கல்யாணம் ஆனவங்களுக்குத் தான் தெரியும்…

  2. நாளஞ்சு வருசம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனத்துக்கு அப்புறம் பர்ஸ் நைட்க்கு ஒத்துக்கற லவ் மேரேஜ் எங்க…

    யாருனே தெரியாம ஒரே நாள்ல கல்யாணம் பண்ணி அந்த நாளே பர்ஸ்ட் நைட்க்கு ஒத்துக்குற அரேன்ஜ் மேரேஜ் எங்க…
    அரேன்ஜ் மேரேஜ் தான் கெத்து!

  3. நம்மள விட ரெண்டு வயசு பெரிய பொண்ணு குறிப்பா அழகா இருக்கற பொண்ணு நமக்கு அக்காவ தான் இருக்கனும்னு அவசியம் இல்ல…

  4. லவ்ல லாஜிக்லாம் இல்ல அது ஒரு மேஜிக்…

  5. அவசரப்பட்டு டைவர்ஸ் வாங்குறவங்க தான் நிறைய அதிகம்… அவசரப்பட்டு கல்யாணம் பண்ணதால நிறைய பேரு டைவர்ஸே வாங்குறாங்க…

  6. நம்ம ஆளுங்க பிரச்சினையா இதுதான்… யெஸ் சொல்ல வேண்டியதுக்கு நோ சொல்வாங்க… நோ சொல்ல வேண்டியதுக்கு யெஸ் சொல்லி அப்புறம் வாழ்க்க பூரா கஷ்டப்படுவாங்க…

  7. மனுசன் நிம்மதியா உட்கார்ற ஒரே இடம் கக்கூஸ் தான்!

  8. எந்த வேலையா இருந்தாலும் புதுசா சேர்ந்த எல்லாருக்கும் அது போரா தான் இருக்கும்… அதுக்கப்புறம் போக போக பழகிடும்…

  9. எவனுக்குமே நிரந்தரமான சேர்ன்னு (பதவி) ஒன்னு கிடையவே கிடையாது…

  10. குழந்தை பெத்துக்கறதுதான் வாழ்க்கையோட அடுத்த கட்டமே. பெத்துக்குறதுல தான் பெருமையே…

  11. புடிச்ச விஷயம் கிடைக்குதோ இல்லயோ ட்ரை பண்ணனும்… புடிச்ச விஷயத்துக்காக அட்லீஸ்ட் ட்ரை பண்ணோமேங்கற நிம்மதியாவது கிடைக்கும்.

  12. காதலிக்கு நாம கொடுக்கற கிஃப்ட்ட விட அந்த கிஃப்ட்க்காக நாம எடுத்த efforts தான் காதலிய ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணும்…

  13. ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கும்போது அவளோட அருமை தெரியாது…

  14. தன்னோட பிரச்சினைய தானே பேஸ் பண்றவன் தான் ஹீரோ

  15. லைஃப்ல எல்லாமே லேட்டா தான் புரியுது…

Related Articles

சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர... இயக்குனர் சமுத்திரக்கனியின் கிட்ணா படம் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை கதை என்று அங்கும் இங்குமாக அரசல்...
காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகள எதி... கர்நாடாகாவில் காலாவுக்குத் தடை விதிக்கப் பட்டு உள்ளது. (இன்னும் சில வெளிநாடுகளில் காலாவுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் சமூக பரப்பப்படுகி...
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர்கள்... ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தர் கருத்து. அந்தக் கருத்திற்கு ஏற்றார்போல தமிழ் சினிமாவில் தங்களுக்குப் பிடித்த துறையில் கொடிகட்டி பறந்தவர்கள் ...
யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு ஜூலை 15 ... யுவன் சங்கர் ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசை இயக்குனர். இருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்க...

Be the first to comment on "காதல் காவியம் இல்லை என்றாலும் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்! – ஓ மை கடவுளே விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*