சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் எவ்வளவு முக்கியமானவர்?

முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிப் பார்க்கலாம்.  தன்னுடைய சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் சரியான வெற்றிப்படங்கள் அமையாமல் தடுமாறினாலும் பிற்காலத்தில்  ரம்யா கிருஷ்ணன அடிச்சுக்க ஆளே கிடையாது என்கிற நிலைமைக்கு வந்தார் ரம்யா கிருஷ்ணன். அதிலும் குறிப்பாக  ரம்யாகிருஷ்ணன் அளவுக்கு நகைச்சுவை உணர்வு மிக்க ஒரு நடிகை தமிழ் சினிமாவில் பெரிதாக யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று விட்டால் ரம்யா கிருஷ்ணன் மாதிரி கலகலப்பாக இருக்கும் ஒரு நடிகையை எங்கும் பார்க்க முடியாது என்று பல சினிமா கலைஞர்கள் கூறியிருக்கிறார்கள். அவர் ஜாலியாக இருப்பதை பார்த்து சினிமா சூட்டிங் என்றால் அது ரொம்ப இறுக்கமான ஒரு செயல் என்று நம்புபவர்கள் கூட ஜாலியா செஞ்சா எந்த வேலையும் ஈசியாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள் என்று பலர் கூறியிருக்கிறார்கள். 

அதனால்தான் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதாக  பலர் கூறுகிறார்கள். ஏன் கமலே கூட அப்படி கூறியிருப்பதாக தகவல்கள் உள்ளன. அவர்கள் சொல்வதற்கு ஏற்பவே பஞ்சதந்திரம் படத்தில் செம லூட்டி செய்திருப்பார் ரம்யா. படம் முழுக்க நிறைய இடங்களில் சிரித்துக்கொண்டே இருப்பார், சிரிப்பை அடக்க முடியாமல் அந்த படத்தில் நடித்துக் கொடுத்தது போல் நிறைய காட்சிகள் இருக்கும். அப்படிப்பட்ட ரம்யாகிருஷ்ணன் விக்னேஷ் சிவன் இயக்கும் காமெடி படத்தில் நடிக்கிறார் என்றால் எப்படி இருக்கும்.  சீரியஸான படங்கள் என்றாலே ஷூட்டிங் தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலும் எதையாவது பேசி கலகலவென்று சிரித்துக் கொண்டிருக்கும் இரம்யாகிருஷ்ணன் இந்த படத்தில் சும்மாவா இருந்திருப்பார்.  சூட்டிங் முடிந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது ரம்யா கிருஷ்ணனும் இதர நடிகைகளும் ஒன்று சேர்ந்து நிறைய ஜாலியான விஷயங்கள் பேசி சிரித்துக் கொண்டே இருந்தார்களாம். அதிலும் குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் ரொம்ப சத்தம் போட்டு தொடர்ந்து அடிக்கடி சிரித்து கொண்டே இருந்தாராம். அவர் சிரிப்பு சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த சில மனிதர்கள் அவருடைய அறைக்கு தேடி வந்து மேடம் கொஞ்சம் மெதுவா சிரிங்க எங்களால தாங்க முடியலை ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்டு அங்கிருந்து நகர்ந்து இருக்கின்றனர்.  ஆனால் ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு முயன்றாலும் அந்த இரவில் சிரிப்பை அடக்க முடியவில்லையாம், தொடர்ந்து தன் தோழிகளுடன் பேசிக்கொண்டே சத்தம் போட்டு தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தாராம்.  இதனால் தூக்கம் இழந்த பக்கத்து அறை மனிதர்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு அறையையே காலி செய்து விட்டார்களாம்.

அதிலும் அந்தப் படத்தில் படையப்பா  பட செந்தில் இணைந்திருக்கிறார்  என்றால் ஷூட்டிங் ஸ்பாட் எவ்வளவு கலகலப்பாக இருந்திருக்கும்.  இப்படிப்பட்ட ரம்யா கிருஷ்ணன் ஜாலிக்கும் கேலிக்கும் பெயர்போன சத்யராஜுடன் இணைந்தால் அந்த இடம் எப்படி இருந்திருக்கும்? பாகுபலி பட ஷூட்டிங்கின்போது ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நிறைய விஷயங்கள் பேசி தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார்களாம். அவர்கள் இருவரும் சிரிப்பதை பார்த்து மற்றவர்களும் வயிறு குலுங்க சிரித்து அந்த இடமே செம ஜாலியான இடமாக மாறிவிடுமாம்.  இயக்குனர் ராஜமவுலி சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு ரம்யா கிருஷ்ணனை சூட்டிங்கிற்கு தயார் செய்தாராம். இவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்க ரம்யா கிருஷ்ணன் நகைச்சுவை மட்டுமன்றி எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கனகச்சிதமாக நடிக்கக் கூடியவர், அந்த அளவுக்கு அவருக்கு கலைஞானம் இருக்கிறது. 

அப்படிப்பட்ட ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவியின் ஜோடி நம்பர் சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன்.  சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சிக்கு முன்னர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் செய்திருந்தாலும் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு பெரிய வெளிச்சம் கொடுத்தது இந்த ஜோடி சீசன் 5 தான். காரணம், ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனிடம் இருந்து பலவிதமான திறமைகளை வெளி கொண்டு வந்த விதம் அப்படி. தான் ஒரு பெரிய நடிகை என்கிற தலைக்கனம் ஈகோ எதுவுமே இல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் மிக ஜாலியாக பேசினார்.  நிகழ்ச்சிக்குள் நுழைந்ததும் முதலில் சிவகார்த்திகேயனிடம் ஏதாவது வம்பு இழுக்காமல் இருக்கமாட்டார் ரம்யா கிருஷ்ணன். அவர் வம்பிழுக்க அதற்கு சிவகார்த்திகேயன் ஏதாவது காமெடியாக சொல்ல ரம்யா கிருஷ்ணன் அந்த காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிப்பார். அப்படி தமிழ் சினிமாவின் மிக உயரிய நடிகையான ரம்யா கிருஷ்ணன் தன்னிடம் ஜாலியாக பேசும் போதும், தன்னுடைய நகைச்சுவை கமெண்ட்களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கும் போதும் சிவகார்த்திகேயனுக்குள் இருக்கும்  என்டர்டெயினர் மென்மேலும் மெருகேறிக் கொண்டே போனார். சிவகார்த்திகேயனை, சிவா நீ அவர கலாய், நீ அந்த நடிகர் மாதிரி பேசு, நீ இந்த மாதிரி ஆடு, இவர் மாதிரி பேசி பிரேக் விடு  என்று பலவிதமாக பர்பார்ம் பண்ண சொல்லி வாய் நிறைய சிரித்து கைதட்டி “ஊ” என்று கத்தி பாராட்டியும் ஊக்குவிப்பும் கொடுத்தவர் ரம்யா கிருஷ்ணன். 

அதேசமயம் ரம்யாகிருஷ்ணன் அடிக்கடி சிவாவை கலாய்க்க,  சிவா ரம்யா கிருஷ்ணனை கலாய்க்க, சிவாவும் ரம்யா கிருஷ்ணனும் இணைந்து வேறு யாரையாவது கலாய்க்க என்று அந்த நிகழ்ச்சி முழுக்க சிவகார்த்திகேயனும் ரம்யா கிருஷ்ணனும் ஒன்றிணைந்து கலகலப்பாக  கொண்டு சென்றனர். ஒருவேளை ரம்யா கிருஷ்ணனும் சிவகார்த்திகேயனும் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சி அவ்வளவு தூரம் வெற்றி அடைந்து இருக்காது. அதே சமயம் சிவகார்த்திகேயனும் இவ்வளவு தூரம் வெளியே வந்திருக்க மாட்டார்.  அந்த நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனை பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தை ஆசம் சிவா, வெல்டன் சிவா, கமான் சிவா போன்ற வார்த்தைகள் தான். ஒரு சில தருணங்களில் “நான் சொல்வதை சிவகார்த்திகேயன் செய்யாவிட்டால் நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து போய்விடுவேன்” என்று சொல்லும் அளவுக்கு சிவகார்த்திகேயனை அவ்வளவு  ரசித்து ஊக்குவித்தார் ரம்யாகிருஷ்ணன். அப்படி சிவகார்த்திகேயனை கலாய்த்து பாராட்டி ஊக்குவித்த  ரம்யா கிருஷ்ணன் அதே நிகழ்ச்சி முடிவதற்குள், “சிவா நீ வேணா பாரு… நீ வெள்ளித்திரையில் பெரிய ஆளா வருவ…” என்று அடித்துச் சொன்னார். உனக்கு வெள்ளித்திரையில் விரைவில் வாய்ப்பு காத்திருக்கிறது அப்படி உனக்கு வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நான் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்று ரம்யாக கிருஷ்ணன் உறுதியாக சொன்னார். ரம்யா கிருஷ்ணன் அப்படி சொன்ன ஐந்தாவது நாளில் சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் ஹீரோவாக கமிட்டானார். 

 சிவகார்த்திகேயனிடம் இருக்கும் ஒரு தனித்தன்மை என்னவென்றால் அவர் யாரை  கலாய்த்தாலும் கலாய்க்கப்படுபவர் ஒரு போதும் மனம் வருந்த மாட்டார். சிவகார்த்திகேயன் கலாய்ப்பதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார்களே தவிர அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று ரம்யா கிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனின் தனித்தன்மையை பாராட்டியிருந்தார். 

இதே ரம்யா கிருஷ்ணன், சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் ஒளிர தொடங்கியபோது எந்த ஈகோவும் இல்லாமல் சிவகார்த்திகேயனை தன் சக நடிகராக மதித்து நட்புடன் அப்சரா என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இருவரும் பல வருடங்களுக்கு பிறகு இணைந்த நிகழ்ச்சி என்றால் அந்த நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சி கிட்ட தட்ட அரைமணி நேரம். ஆனால் அவ்வளவு நேரம் போனதே தெரியாத அளவுக்கு சிவகார்த்திகேயனும் ரம்யா கிருஷ்ணனும் சேர்ந்து செம லூட்டி அடித்திருப்பார்கள். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் என்ன ஜோக் சொன்னாலும் கலாய் கொடுத்தாலும் அதற்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தார் ரம்யா கிருஷ்ணன். அதேபோல சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் வியக்கும்படி ஏதாவது பர்பார்ம் பண்ணிக் காட்டினால் அத்தனை பர்பார்ம்களுக்கும் கைதட்டிக் கொண்டே இருந்தார் ரம்யா கிருஷ்ணன். அதே நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனும் சிவகார்த்திகேயனும்  பள்ளி நண்பர்கள் போல ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்து கொண்டனர்.  இதே வேறு சில நடிகைகளாக இருந்திருந்தால் இப்பதான் நீ சினிமாவுக்கே வந்து இருக்க, அதுக்குள்ள என்னை கலாய்க்கற அளவுக்கு வந்துட்டியா என்று முகத்தை கடுமையாக காட்டியிருப்பார்கள். ஆனால் ரம்யா கிருஷ்ணன் அப்படி ஒருபோதும் செய்ததில்லை. அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் தனித் திறன் வாய்ந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ரம்யா கிருஷ்ணன், தன்னுடைய பாராட்டால் ஒத்துழைப்பால் நல்ல நிலைமைக்கு வந்திருக்கும் சிவகார்த்திகேயனை எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்து பேசியதாக செய்திகள் வந்ததில்லை. 

அவர்கள் இருவரும் கலந்து கொண்ட நட்புடன் அப்சரா நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனை பார்த்து  வெட்கப்பட்டு தலைகுனிய சிவகார்த்திகேயன் ரம்யா கிருஷ்ணனை பார்த்து ரொமான்டிக்காக சிரிப்பது போல  ஒரு தருணம் வரும். நிச்சயம் நீங்க அந்த வீடியோவை பார்த்தால் அந்த இடத்தில் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். பிறகு அந்த நிகழ்ச்சியின் முடிவில் ரம்யா கிருஷ்ணனும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து ஜாலியாக நடனமாடி விட்டு விடை பெறுவார்கள்.  இந்த மாதிரியான ஜாலியான அதே சமயம் திறமையான கலைஞர்கள் சினிமா துறையில் இருப்பதால் தான், பல இளம் கலைஞர்கள் நம்பிக்கையுடன் சினிமா துறையை நோக்கி அடி எடுத்து வைக்கின்றனர். 

படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் போகவே இல்லை என்று சொல்வார். அதே வசனம் ரம்யா கிருஷ்ணனுக்கும் பொருந்தும். பல நிகழ்ச்சிகளில் ரம்யா கிருஷ்ணனை பார்த்து அந்த வசனத்தை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ரம்யா கிருஷ்ணன் எல்லா இடங்களிலும் படையப்பா படத்தில் ரஜினி பேசிய “கூடவே பொறந்தது என்னைக்கும் போகாது” என்ற வசனத்தையே பதிலாக கொடுப்பார். அது ஒருவகையில் உண்மைதான். எத்தனை வயதானாலும் இன்னமும் அழகு குறையாமல் திறமையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம் பல இளம் கலைஞர்களை தொடர்ந்து ரசிப்பதும் பாராட்டி ஊக்குவிப்பதும் தான். எப்பவுமே நம்மைவிட வயதில் இளையவர்கள் நல்ல திறமைசாலியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களை நாம் மனதார பாராட்டும் போது நாமலும் மனதளவில் இளமையாக மாறுகிறோம் என்பதற்கு ரம்யாகிருஷ்ணன் நல்ல உதாரணம். தேசிய விருது பெற்ற இயக்குனர் பாண்டிராஜின் மெரினா படத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷின் 3 படத்தில், எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு… சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த ஜோடி சீசன் நிகழ்ச்சியில் நடுவராக ரம்யா கிருஷ்ணன் வந்ததும் ஒரு வகையில் காரணம். 

Related Articles

மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்காக மலையை... எது அடிப்படை தேவையோ அதை மட்டும் செய்து தராது இந்திய அரசு. தேவையில்லாத விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தி கால விரயமும் பணவிரயமும் செய்து பழக்கப்பட்டதாலோ...
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத... 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின...
காதும்மாவை விரும்பியவர்களுக்கு கோலமாவு க... இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அனிருத்தின் இசையில் வெளியாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுக்கு தோழியாக...
“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனு... இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள " காதல் ஒன்று கண்டேன் " என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நா...

Be the first to comment on "சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் எவ்வளவு முக்கியமானவர்?"

Leave a comment

Your email address will not be published.


*