தனுஷ் நடிப்பில் தமிழில் மறு ஆக்கம் காண்கிறது பேட்மேன்

dhanush as padman

குறைந்த விலை சானிட்டரி நாப்கின் தயாரித்து புரட்சி செய்த அருணாசலம் முருகானந்தம் அவர்களின் கதையை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம் பேட்மேன். அருணாசலம் முருகானந்தம் கோயம்புத்தூரை சேர்ந்தவர். அவரது கண்டுபிடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் சானிட்டரி நாப்கின்களின் விலையையும் கணிசமாக குறைத்தது. அவரது கதையை கையிலெடுத்த பாலிவுட் அதில் நாயகனாக அக்சய்குமாரையும், நாயகியாக ராதிகா ஆப்தேவையும் நடிக்க வைத்தது. பேட்மேன் திரைப்படம் வெளியாகி நிறைய நேர்மறையான விமர்சனங்களையும், பாராட்டுகளையும் குவித்த வண்ணம் இருக்கிறது. வசூல் ரீதியாகவும் பேட்மேன் திரைப்படம் சாதனைச் செய்துள்ளது.

தமிழர் ஒருவரின் கதையை முதன்முதலில் நாம் எடுக்காமல் பாலிவுட் முந்திக்கொண்டதே என்ற வருத்தத்தில் இருப்பவர்களுக்காக ஒரு நல்ல செய்தி. இந்தியில் பேட்மேன் திரைப்படத்தை தயாரித்த கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம், தமிழில் இத்திரைப்படத்தை மறு ஆக்கம் செய்ய பெரிதும் விருப்பம் கொண்டுள்ளது. கதையின் நாயகனாகத் தமிழில் தனுஷ் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே தனுஷ் மாரி 2 , என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் ஹாலிவுட்டில் அவர் நடித்து வரும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ போன்ற திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இப்படங்களில் நடித்து முடித்த கையோடு பேட்மேன் திரைப்படத்தின் தமிழ் ஆக்கம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழ் மண்ணின் நிஜ நாயகன் ஒருவரின் கதையை திரையில் தமிழில் காணத் தமிழ் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Related Articles

ZEE5 தளத்தில் வெளியான சிகை, களவு திரைப்ப... சிகை:  மதயானைக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற கோன கொ...
ப்ளாக் பஸ்டர் படங்கள் இயக்குவது எப்படி?... முதலில் வில்லனுக்கான அறிமுக காட்சி இருக்க வேண்டும். காரணம் வில்லன் தான் படத்தின் நாயகனே என்பதற்காக.வில்லனின் எண்ட்ரி செம மாஸாக இருக்க வேண்டும். அ...
கிண்டிலில் புத்தகங்கள் படிப்பது நன்மை தர... புத்தக வாசிப்பு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மிக அரிதாக இருக்கும் போது இந்த நிலையில் கிண்டிலில் புத்தகங்கள் வாசிப்பது சரியா? தவறா? நன்மையா? தீமையா? எ...
உத்தர பிரதேசத்தில் எண்பது ஆண்டுகளுக்குப்... உத்திரபிரதேசத்தில் நடந்து வரும் சாதி ஆதிக்கம் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. சக மனிதனை ஜாதியின் பெயரில் பொதுவெளியில் நிர்வாணமாக்கி அ...

Be the first to comment on "தனுஷ் நடிப்பில் தமிழில் மறு ஆக்கம் காண்கிறது பேட்மேன்"

Leave a comment

Your email address will not be published.


*