இயக்குனர் பாலாவிடம் ஓர் வேண்டுகோள்!

A request to Director Bala!

இயக்குனர் பாலாவை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் பாலாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்போம். இருந்தாலும் இன்னும் கூடுதலான சில விஷயுங்களை தெரிந்துகொள்வோம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தவர். கல்லூரி படிப்பை ஒழுங்காக முடிக்காமல் சென்னைக்கு வந்துவிட்டார். சென்னை வந்ததும் பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் நட்பு கிடைத்தது. அவருடைய நட்பின் மூலம் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர முயன்றார். ஆனால் பாலுமகேந்திரா அவரை சேர்த்துக் கொள்ள வில்லை. இருந்தாலும் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் பல வேலைகளை இழுத்துபோட்டு செய்தார். அதை பார்த்த பாலுமகேந்திரா அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். 

அப்படியும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து வாழ பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான வீடு படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.  அதன்பிறகு பாலுமகேந்திராவிடம் இருந்து விடைபெற்று படம் இயக்குவதற்கான முயற்சியில் இறங்கினார். ஆனால் அவருக்கு கதை கிடைக்கவே இல்லை. அப்போதுதான் எழுத்தாளர் அறிவுமதி அவர்களின் கவிதை புத்தகம் ஒன்றைப் பார்க்கும் போது அதிலிருந்த சில வரிகள் அவருக்கு சேது படத்தை உருவாக்க தோன்றியது அந்த வரிகள் மூலகாரணமாக இருந்தது. அறிவுமதி அவர்களின் கவிதைத் தொகுப்பை படிப்பதற்கு முன்பு குணசீலம் உட்பட பல மனநோயாளிகள், நோயாளிகள் வாழும் இடத்திற்கும் பயணித்து வந்தார் பாலா.  அந்த அனுபவத்தையும் சேர்த்துக் கொண்டால் செய்து படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். முதலில் அந்த படத்தில் விக்ரமிற்கு பதிலாக வேறொருவர் நடிப்பதாக இருந்தது. பிறகு விக்ரமின் கடின உழைப்பை பார்த்து பாலா சேது படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். 

சேது படத்திற்காக விக்ரம் தன்னை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டார். அந்த படத்திற்காக உடலை மிக கடுமையாக வருத்திக் கொண்டார். அப்படி ஒரு முறை சோறு சாப்பிடாமல் வெயிலில் படுத்து கிடந்த போது மயக்க நிலையில் சென்று விக்ரம் படுத்து இருந்தார். அப்போது பாலா அருகே சென்று எழுப்பிய போதும் அவர் எழுந்திருக்கவில்லை. காதருகே கை தட்டி எழுப்ப முயன்ற போது அவர் லேசான அசைவுகளை மட்டுமே தந்தார். இப்படிப்பட்ட கடின உழைப்பாளியை தமிழ் சினிமா பெரிதாக கண்டு கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்ட பாலா விக்ரமுக்காக அந்த சேது படத்தினை மேலும் மெருகூட்டினார். 

அப்படி விக்ரமின் கடின உழைப்பால் உருவான சேது படம் அவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் ஆகவில்லை. கிட்டதட்ட 100 நாட்களுக்கும் மேலாக அந்த படம் திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. தியேட்டர்களில் ரிலீசாவதற்கு கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. இந்த படம் ஓடாது என்று நிறைய பேர் பாலாவிடம் நெகட்டிவாக பேசியிருக்கிறார்கள்.  அப்படி இருந்தும் பாலா மனம் தளராமல் அந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வர கடுமையாக முயற்சித்தார். ஒருவழியாக அந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. 

அப்படி ரிலீசான படம் தியேட்டர்களில் பெரிதாக ஓடவில்லை. ரசிகர்கள் முதலில் இது என்னடா படம் இப்படி இருக்குது என்று வேறு மாதிரி நினைத்தார்கள். அதன் பிறகுதான் ஆனந்த விகடன் அந்தப் படத்தைப் பாராட்டி தன்னுடைய இதழில் 50 மார்க் என்று போட்டிருந்தது. அந்த மார்க்கை பார்த்த பிறகு பல ரசிகர்கள் படம் நன்றாக இருக்கும் போல என்று தியேட்டரில் போய் பார்க்க ஆரம்பித்தார்கள். நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு பாலாவை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ரஜினிகாந்த் சொன்ன பிறகுதான் பாலாவிற்கு ஆனந்த விகடனில் சேது படத்தின் விமர்சனம் வந்ததே தெரிய வந்து இருக்கிறது. அதற்காக பல மேடைகளிலும் ஆனந்த விகடனுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் பாலா. அப்படிப்பட்ட பாதைகளை கடந்து வந்த சேது படம் தேசிய விருது வாங்கியது. தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய பாலா மீது இந்த தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய அக்கறை பார்வை எழுந்து இந்த இயக்குனர் இன்னும் நிறைய சாதிப்பார் என்று நினைத்தார்கள். 

 சேது படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பாலா தன்னுடைய இரண்டாவது படத்தில் சிவாஜிகணேசனை நடிக்க வைக்க முயன்றார். அந்த படத்தில் சிவாஜிகணேசன் நடிக்கவில்லை என்று சொன்ன பிறகுதான் ராஜ்கிரண் சூர்யாவை வைத்து இரண்டாவது  படத்தை எடுத்தார்.  அந்தப் படம் பெரிய ஹிட் என்ற போதிலும் அந்த படம் தேசிய விருது எதுவும் வாங்கவில்லை.  அந்த படத்தில் இடம்பெற்றிருந்த முன்பனியா என்ற பாடலுக்கு யுவன் சங்கர் ராஜாவுக்கும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அந்தப் படைப்பாளிகளுக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது பெரும் சோகம். 

 அவருடைய இயக்கத்தில் உருவான அவருடைய இரண்டாம் படமான நந்தா படம் சூர்யாவுக்கும் அவருக்கும் பெரிய வெற்றியை தந்தது.  அவரை மாஸ் ஹீரோவாக உயர்த்திக் காட்டியது. அதற்கு பிறகு சூர்யா தொட்டதெல்லாம் வெற்றிதான். விக்ரம் தொட்டதெல்லாம் வெற்றிதான் விக்ரம் சூர்யா என்னும் மிகப் பெரிய நாயகர்களை உருவாக்கிய பெருமை இயக்குனர் பாலாவை சேரும். அவ்வாறு இயக்குனர் பாலா தன்னுடைய இரண்டு முக்கியமான நடிகர்களான விக்ரம் சூர்யா ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார். அப்படி எடுத்த படம்தான் பிதாமகன். 

சேது மற்றும் நந்தா படத்தை போல பிதாமகன் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த இளையராஜாவின் பாடல்கள் அவ்வளவு அருமையாக இருந்ததால் மிகப்பெரிய ஹிட் அடிக்க ஆனால் பிதாமகன் படத்தில் காமெடி காட்சிகளை தவிர மீதி காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படவில்லை. குறிப்பாக சுடுகாட்டில் வேலை செய்யும் வெட்டியானை இயக்குனர் பாலா தவறாக சித்தரித்து இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது. இருந்தபோதிலும் நடிகர் விக்ரமுக்கு அந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் இயக்குநர் பாலாவிற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் ஆனாலும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் விக்ரமுக்கு தேசிய விருது அதாவது 20 ஆண்டுகள் கடுமையாக போராடிய விக்ரமிற்கு அந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்ததை நினைத்து பெருமை அடைந்தார் இயக்குனர் பாலா. 

பிதாமகன் தோல்விக்கு பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பின்  ஜெயமோகன் எழுதிய நாவலான ஏழாம் உலகம் நாவலை மையமாக வைத்து நான் கடவுள் படத்தை எடுக்க முற்பட்டார் இயக்குனர் பாலா. அந்தப் படத்திற்காக நடிகர் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் அஜித்.  இயக்குனர் பாலா இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்து அதை பெரிய சண்டையாக முற்றிப் போனதால் அந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த படத்திற்காக நடிகர் அஜித் தன் உடலை வருத்திக்கொண்டு முடி எல்லாம் வளர்த்தி தயாராக இருந்தபோதிலும் பாலா அவரை நடிக்க வைக்க வில்லை. தமிழ் சமூகத்தில் பாலா மற்றும் அஜீத் விவகாரம் இன்று வரை கிசுகிசுப்பாக பேசிக் கொண்டுதான் இருக்கிறது. 

சேது நந்தா பிதாமகன் ஆகிய மூன்று படங்களிலும் தேசிய விருதை தவறவிட்ட இயக்குனர் பாலா நான் கடவுள் படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார். அப்போது நடிகர் விக்ரம் இந்த விருது இயக்குநர் பாலாவிற்கு மிக தாமதமாக கிடைக்கிறது. பாலாவிற்கு சேது படத்திலேயே தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று சொன்னார். 

அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போகிறார்கள்… அந்தப் படத்தை பாலா இயக்குகிறார் என்றதும் பக்கென இருந்தது. பாலா ஏன் இந்த வேலையை செய்ய ஒப்புக்கொண்டார் என்று கோபம் வந்தது. அடுத்த சில மாதங்களில் அந்தப் படத்திலிருந்து பாலா விலகி கொண்டார் என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டேன். காரணம் பாலா இயக்கும் அளவுக்கு அந்தப் படம் தரமான படம் அல்ல. தவறான விஷயத்தை (ஒரு பெண்ணை வலுக்கட்டாயபடுத்தி காதலிக்க வைப்பதை) ஹீரோயிசமாக காட்டிய படம் என்பதால் பாலா அதை இயக்க கூடாது, பாலாவின் பெயரில் வெளியாக கூடாது என்பது தான் நான் பெருமூச்சு விட காரணம். 

கல்லூரி காலத்தில் குட்டி நோக்கியா போன் தான் வைத்திருந்தேன். அதில் நியூஸ்ஹண்ட் ஆப் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அப்படி நியூஸ்ஹண்டில் பரதேசி படத்தின் விமர்சனத்தை பார்க்க முடிந்தது. அந்த விமர்சனத்தில் “இப்படிபட்ட படைப்பாளியை பெருமையாக தோளில் சுமந்து ஊர்சுற்றி வர ஆசை” என்று பத்திரிக்கையாளர் ஒருவர் எழுதி இருந்தார். 

அப்போது முதலே பரதேசி படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் முடியவில்லை. பிறகு கல்லூரி இறுதி ஆண்டில் நண்பனின் லேப்டாப்பில் அந்தப் படம் இருந்ததை யதர்ச்சையாக பார்க்க முடிந்தது. (பரதேசி படம் இப்போது அமேசான் பிரைமில் கிடைக்கிறது.)

எழுத்தாளர் ராம் தங்கம் நாஞ்சில் பண்பலையில் எழுத்தாளர் இரா. முருகவேள் அவர்களை பேட்டி எடுத்த போது எழுத்தாளர் பி.எச். டேனியல் பற்றி கேள்விகள் கேட்டார். அப்போதுதான் பி. எச். டேனியல் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிய வந்தது. அந்தப் படம் குறித்தும் பி. எச். டேனியலின் “எரியும் பனிக்காடு” குறித்தும் நண்பர் ஒருவரிடம் பேசும்போது கே. என். சிவராமன் எழுதிய உயிர்ப்பாதை புத்தகமும் எரியும் பனிக்காடு போலவே அப்பாவி தமிழர்களை பற்றி பேசிய நூல் என்று தெரிய வந்தது. அந்தப் புத்தகமும் எரியும் பனிக்காடு புத்தகத்தை போலவே மனதை உலுக்கியது. ஜப்பானில் நம் முன்னோர் தமிழர்கள் அடைந்த துயரத்தை மையப்படுத்தி எழுத்தாளர் கரன் கார்க்கி “மரப்பாலம்” என்று புத்தகம் எழுதியிருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளித்தது. அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு இயக்குனர் வெற்றிமாறன் வந்திருந்ததை பார்த்ததும் மரப்பாலம் புத்தகத்தை வெற்றிமாறன் படமாக எடுத்தால் அது பரதேசி படத்தை போல தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று தோன்றியது. 

அன்பிற்கினிய பாலா… இயக்குனராக ஒரு படத்தை ரீமேக் செய்து இயக்கினார். தயாரிப்பாளராக இப்போது ஒரு படத்தை ரீமேக் செய்துள்ளார். ஆனால் உண்மையான பாலா ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது, ரீமேக் படங்களை அல்ல. பரதேசி மாதிரியான படங்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பது இந்த எளியவனின் அன்பான வேண்டுகோள்.

Related Articles

மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகத... வள்ளியூர் அருகே விஜய நாராயணம் சிற்றாற்று பகுதியில் மணல் திருடப் படுவதாக தகவல் கிடைத்து சோதனைக்கு சென்ற காவலர் ஜெகதீசனை ஒரு கும்பல் இரும்புக் கம்பியால்...
படைப்பாளிகள் கலைஞர்கள் இவர்களெல்லாம் தங்... தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா அளவில் ஏன் உலக சினிமா அளவில் கூட மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அல்லது மக்களுக்கு மிகவும...
அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சி... ஆனந்த விகடன் இதழில் 50க்கும் மேற்பட்ட குறுங்கதை தொடராக வந்த தொகுப்புதான் அஞ்சிறைத் தும்பி. இந்த குறுங்குகதை தொடரில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் புதுவித...
பாகுபலி நாயகனின் “சாஹோ” படம்... படம் ரிலீசான அடுத்த நொடிகளில் இருந்து இந்தப் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டு இருந்தாலும்  பாகுபலி நாயகனின் படம் என்பதால் இந்தப் படம் நல்...

Be the first to comment on "இயக்குனர் பாலாவிடம் ஓர் வேண்டுகோள்!"

Leave a comment

Your email address will not be published.


*