மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம்

Social-Minded

ஸ்பைடர் படத்தின் தாக்கத்திலிருந்து…

அறிமுகமில்லாத மனிதனுக்கு எதிர்பார்ப்பில்லாமல் உதவி செய்வது தான் மனிதாபிமானம் என்ற கருத்தை சமீபத்தில் வெளியாகிய ஸ்பைடர் திரைப்படத்தின் கடைசி வரி இது. மக்கள்தொகை பெருகி, அன்றாட பிழைப்புக்காக பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் மக்களிடையே
மனிதாபிமானம் குறைந்துகொண்டே வருகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. புயல், வெள்ளம், சுனாமி போன்ற பெரிய பேரிடர்கள் வரும்போது மட்டுமே நம்முடையே மனிதாபிமானம் வெளியே வருகிறது. மீதி நாட்களில் இன்னொரு மனிதனின் முகத்தை பார்ப்பதற்குகூட நேரமில்லாத நாம் பார்ப்பதெல்லாம் செல்போன் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், டிவி ஸ்கிரீன் மட்டுமே.

அதனால் தான், விவசாயத்துக்காக சாலையில் இறங்கி சிலர் போராடிய போதிலும், அனிதாவின் தற்கொலைக்கு நீதி வேண்டி சிலர் போராடிய போதிலும் நம்முடைய மனிதாபிமானத்தை வெறும் லைக், ஷேரில் மட்டுமே காட்டினோம்.  இதற்கு பெயர் தான் எஸ்பிடி. அதாவது சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர். சகமனிதன் துன்பத்தில் மூழ்கி கஷ்டபட்டு கொண்டிருப்பதை, எவன் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன என்று சுயநலமாக ஒதுங்கி, அவனுடைய கஷ்டத்தை கண்டுங்காணாமல் போவதும், அவன் நிலைமையை ஏளனமாக பார்த்து சிரிப்பதும் தான் எஸ்பிடி. இது சாதாரண மனிதனுக்கு நான்கு சதவீதம் இருப்பதாகவும், கலிபோர்னியாவில் நடந்த ஆய்வொன்றில் இன்றைய சூழலுக்கு இந்த எஸ்பிடி நான்கிலிருந்து ஆறு சதவீதமாக உயர்ந்துவிட்டதாகவும்  படத்தில் பதிவு செய்திருக்கின்றனர். ஒருபுறம் மாணவர்கள் எங்களுக்கு சிறந்த , சமமான கல்வியை போதியுங்கள் என்று சாலையில் இறங்கி போராடிய பொழுது, ஆசிரிய சமுதாயம் அவர்களுக்கு துணைநிற்காமல் சம்பளத்துக்காக மன்றாடிக்கொண்டிருந்தது என்றால் பாருங்கள் மனிதாபிமானம் எந்தளவுக்கு இந்த சமுதாயத்தில் இருக்கிறது என்று.

பக்கத்தில் உள்ளவனை நேசி என்றார் டால்ஸ்டாய். ஆனால் நாம் அப்படியா வாழ்ந்து வருகிறோம்? அக்கம்பக்கத்தினருக்கு எதாவது துன்பம் நேர்ந்தால், உள்ளுக்குள் மகிழ்ந்து, வெளியே போலியான அக்கறையாக அடப்பாவத்த இப்படி ஆகிடுச்சே என்று வருந்துவதுபோல பாவனை செய்கிறோம். மக்கள்தொகை வதவதவென்று பெருகிவிட்டது. நாம் வாழ்வதற்காக ஆறு, மலை, காடு என மற்ற உயிரினங்களை பற்றிய கவலையின்றி அனைத்தையும் நாசம் செய்து வருகிறோம். அதனால் தான் ஓசுர், கிருஷ்ணகிரி, கோவைகளில் அடிக்கடி யானைகள், பேருந்தில்  அடிபட்டு, ரயிலில் அடிபட்டு, மின்வேலியில் சிக்கி உயிரிழந்துகொண்டிருக்கிறது. அந்த செய்திகளையெல்லாம் மனிதாபிமானத்துடன் நாம் கடந்து வருகிறோமா?

தொழுநோயாளிகளிடம் அன்னை தெரசா காட்டிய மனிதாபிமானம், பசிப்பிணியில் வாடியவருக்கு வடலூர் வள்ளலார் காட்டிய மனிதாபிமானமெல்லாம் நமக்கு எப்போதுதான் வருமோ?

அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்குக் கென்புதோல் போர்த்த உடம்பு என்றார் வள்ளுவர். ஆக, இனியாவது சகமனிதனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டுவோம்! அந்த அன்பு பரிசுத்தமானது!

 

Related Articles

அடுத்த பிரதமர் சீமான்! அடுத்த சிஎம் சிம்... சிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே... வாங்கண்ணே... என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து... இயக்கம் ஆரம்பிக்க வைத்து... அத...
அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சி... ஆனந்த விகடன் இதழில் 50க்கும் மேற்பட்ட குறுங்கதை தொடராக வந்த தொகுப்புதான் அஞ்சிறைத் தும்பி. இந்த குறுங்குகதை தொடரில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் புதுவித...
இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது̷... சூதுகவ்வும் திரைப்படம் வெளியாகி இன்றோடு (01-05-2013) ஆறு வருடங்கள் ஆகப்போகிறது. நலன் குமாரசாமி, ஸ்ரீனிவாஸ் கவிநயம் இருவரும் கதை எழுதி உள்ளனர். நயன்தார...
ஒரே ஒரு தமிழ்படம் (2) தான், ஒட்டுமொத்த த... தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சில படங்களையும் தமிழக அரசியலின் சில தவிர்க்க முடியாத சம்பவங்களையும் கலந்து கட்டி கலாய்த்து தள்ளி இருக்கும் தமிழ்ப்படம...

Be the first to comment on "மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம்"

Leave a comment

Your email address will not be published.


*