ஸ்கெட்ச் – சினிமா விமர்சனம்

தயாரிப்பு: வி கிரியேசன்ஸ், மூவிங் பிரேம்ஸ்
எழுத்து இயக்கம்: விஜய் சந்தர்
இசை: தமன்
ஒளிப்பதிவு: எம். சுகுமார்
நடிகர்கள்: விக்ரம், தமன்னா,…

தமிழகத்தில் இந்தப்படம் நானாறு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படம் எப்படி? கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு! கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு! இது தான் படத்தின் கரு. இதற்குமுன் இந்த கருவை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளது. குறிப்பாக பீமா, காதலும் கடந்து போகும்[ஒருசில காட்சிகள்] விக்ரம்வேதா படங்களை சொல்லலாம். ஸ்கெட்ச் படம் இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட கான்செப்ட். ஆனாலும் ஒருசில காட்சிகள் பார்க்கும் போது பீமா படம் நினைவுக்கு வந்து செல்கிறது.

படத்தின் முதல்பாதியில் தொடக்க காட்சியில் இருந்து இடைவேளைக்கு பத்து நிமிடங்கள் முந்தைய காட்சிகள் வரை படம் தலைவலியை உண்டாக்கிவிட்டது. காரணம், ஒரு தீம் மியூசிக், அடிக்கடி ஹீரோயிச ஸ்லோ மோசன், வில்லன் எண்ட்ரி, வில்லனுக்கு ஒரு மிரட்டலான பிஜிஎம் என்று இந்தக்காட்சிகளே சுழன்று வந்ததுதான். 2016ல் வந்த இருமுகனுக்கு பிறகு இப்போதுதான் ஸ்கெட்ச் வந்திருக்கிறது. ஆகையால் இந்த காட்சிகள் விக்ரம் ரசிகர்களுக்கு ஓகே என்றாலும் மற்றவர்களுக்கு!?

வடசென்னையில் நடக்கும் கேங்க் கதை. அதில் ஒரு கேங்கில் வண்டிக்கு ஒழுங்காக டியூ கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்களின் வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதுதான் விக்ரமின் வேலை. பீமா, பத்து எண்றதுக்குள்ள படத்தை போல தனக்கு வரும் வேலையை அசால்ட்டாக செய்து முடிக்கிறார் ஸ்கெட்ச் போட்டு. அப்படி ஒரு வண்டியை தூக்கும் போது தமன்னாவுக்கும் விக்ரமுக்கும் மோதல் வருகிறது. மோதலையடுத்து விக்ரமுக்கு தமன்னா மீது காதல் வருகிறது. உடன் இருக்கும் நான்கு நண்பர்களிடம் “இன்னுங்கொஞ்ச நாள்ல அவள எப்படி உசார் பண்றேன் பாரு” என்று சவால் விடுகிறார். தமன்னா பின்னாடி சுற்றுகிறார். ரவுடியாகவும் திருடனாகவும் தெரிவதால் விக்ரமை தமன்னா வெறுக்கிறார். ஏரியாவில் கெத்து, ரவுடியாக இருந்தாலும் அந்த ஏரியா பசங்க படிப்புக்கு விக்ரம் உதவுகிறார் என்று தெரிந்ததும் விக்ரம் மீது தமன்னாவுக்கும் காதல் வருகிறது. இது மாதிரியான “புது” காட்சிகள் வதைக்க, அதற்கடுத்த சீன்களில் புகையாக ஊதித்தள்ளுகிறார் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிக்கிறார் அல்லது எவனாவது கிடைத்தால் அவனை அடித்து வானத்தில் பறக்கவிடுகிறார். என்னடா படம் இப்படி இழுவையா இருக்குது என்று எண்ணம் வரும்போது படம் மெதுவாக வேகமெடுக்கிறது. தன்னுடைய முதலாளி கார் ஒன்றை ஸ்கெட்ச் போட்டு தூக்கச் சொல்கிறார். விக்ரமும் ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார். அந்தப் புள்ளியிலிருந்து சுவாரஸ்யம் தொடங்குகிறது. அந்த விறுவிறுப்பு சரியாக இடைவேளைக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு இருந்து துவங்குகிறது. விக்ரம் காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார். அந்தக்காரை தூக்கிய பிறகு விக்ரம் உடன் இருக்கும் காரை தூக்க உதவிய மூன்று நண்பர்களும் வரிசையாக யாரோ ஒருவரால் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நண்பர்களை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்யும் அந்த யாரோ யார், காருக்கு சொந்தக்காரனா அல்லது எதிர் கேங்கா அல்லது வேலை வாங்கும் முதலாளியா என்று இடைவேளைக்கு பிறகு படம் சுவாரஸ்மாக சென்று கிளைமேக்ஸ்ஸில் யாரும் எதிர்பார்த்திட ஒரு டுவிஸ்ட்டை வைத்து அருமையான மெசேஜ் சொல்லி படத்தை நச்சென்று முடித்திருக்கிறார்கள்.

படத்தின் மொத்த சுமையையும் விக்ரம் ஒருவராக தாங்கிப்பிடித்திருக்கிறார். தமன்னாவின் நடிப்பு நன்றாக இருந்த போதிலும் அவர் வரும் காட்சிகளெல்லாம் செயற்கையாக இருப்பதுபோல் தோன்றுவதால் சலிப்பைத் தருகிறது. தமன்னாவின் தோழியாக நடித்தவர் அழகு! விக்ரமின் நண்பர்களாக நடித்தவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ரவியாக ஆர்கே சுரேஷ்,  ராயபுரம் குமாராக மற்றும் போலீசாக நடித்தவர்கள் எல்லாம் தேவையான நடிப்பை தந்திருக்கிறார்கள். சூரி ஐந்து காட்சிகளுக்கும் குறைவாக வருகிறார். முதல்பாதியில் சூரிக்கு ஒரெயொரு காட்சி. அதிலும் வழக்கம்போல சம்சாரம், மின்சாரம் என்று கலக்கப்போவது யாரு காமெடி செய்கிறார். இரண்டாம் பாதியின் சில காட்சிகளில் முக்கியமான கேரக்டராக மாறுகிறார். தமன்னின் தீம் மியூசிக் இப்போதே பலருடைய செல்போன்களில் ஒலிக்கிறது. பிண்ணனி இசை ஓகே. பாடல்கள் ஒன்றும் தேரவில்லை.

படத்தில் சூரி காமெடியை தவிர மற்ற காமெடிகளை வலிய திணிக்காதது சிறப்பு.

* ” ஏண்டா இன்னிக்கு ஸ்கூலுக்கு போகல…? “

* ” இன்னிக்கு ஸ்கூல்ல எக்சாம் அதான்…” என்றும் “

* ” என்னையவா சார்ன்னு சொன்னிங்க…அப்ப நாராயணன் சார் பொண்ணா நீங்க…”,

* ” என்ன மச்சான் இவ்வளவு பெரிய காபி ஷாப்ல கரண்ட் இல்ல கருகும்முனு இருட்டா இருக்குது “

” டேய் அது கடைக்கு கூலிங்கிளாஸ் போட்ருக்காங்க… அதான் இருட்டா இருக்குது… ” என்று போகிறபோக்கில் மெல்லியதாக சிரிப்பை வரவழைக்கிறார்கள்.

இரண்டாம்பாதி சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்க இடைஇடையே காதல் போர்சனை வைத்து அடிக்கடி பாடல்களை திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் காதல் காட்சிகளை வலிய புகுத்தியிருக்கிறார்கள். தமன்னா போர்சனை அப்படியே அலாக்காக தூக்கிவிட்டு ஒன்றரை மணிநேர படமாக
வலுவான திரைக்கதை அமைத்து உருவாக்கியிருந்தால் ஓகே ரகம் என்று கூறப்படும் இந்தப்படம் சிறந்த படம் என்ற பாராட்டைப் பெற்றிருக்கும். இரண்டாம் பாதி தான் படமே என்பதால் முதல் பாதியை சலிப்புடன் பார்க்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் கிளைமேக்ஸ் டுவிஸ்டுக்காகவும் படத்தில் கூறப்பட்டிருக்கும் அருமையான மெசேஜ்க்காகவும் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். ஆக மொத்ததில் தில்,தூள், சாமி, பீமா வரிசையில் வந்திருக்க வேண்டிய படம் ஸ்கெட்ச்! ஜஸ்ட் மிஸ்!

குறிப்பாக, உதவி இயக்குனர்கள் என்று போடுவதற்கு பதில் நாளைய இயக்குனர்கள் என்று டைட்டில் கார்டில் போடச்செய்து உதவியாளர்களுக்கு ஊக்கமளித்த இயக்குனர் விஜய்சந்தர்க்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்

Related Articles

ஹாட்டின்களை அள்ளும் ஹலிதா சமீம்! –... தமிழ் சினிமாவில் ஒரு அழகான படம் வந்து... ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை அள்ளிக் கொடுக்கிற மாதிரி ஒரு படம் வந்து... ரொம்ப நாளாச்சுப்பா என்ற ஒரு பேச்சு ரசிகர்க...
சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் எ... சுதந்திர தின உரையின்போது, நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல; தலைமை காவல்காரன் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.அதை அடுத்த கட்டத்திற்க...
காதலை தாண்டி “காதலும் கடந்து போகும... சூதுகவ்வும் என்ற தனது முதல் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி.  அவர் சில வருடங்கள் கழித்து ...
“நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க... " நாளைக்கு எனக்கு முத நா காலேஜ் இருக்கு... "" லா காலேஜ் படிச்சு என்னத்த கிழிக்கப் போற... உன்ன நம்பி நாங்க இருக்கோம் பாரு... "  " எ...

Be the first to comment on "ஸ்கெட்ச் – சினிமா விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*