பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான்.
ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்நாடக
மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.
53 வயதான கிருஷ்ணா பூஜாரி கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள
கொரங்கிரபாடியில் வசித்து வருகிறார். சமீப காலமாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட இவரை தினமும் வாக்கிங் செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். டாக்டர்கள் அறிவுரைப் படி தினமும் வாக்கிங் செல்லும் பழக்கத்தை மேற்கொண்டார். அவர் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள ரயில்வே டிராக்கில்
3 மாதங்களாக இவருக்கு உடல் நலமில்லை. இதையடுத்து டாக்டர்கள், தினமும் வாக்கிங்
சென்றால் சரியாகும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அங்குள்ள ரயில்வே டிராக் அருகே அவர் வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த வார சனிக்கிழமை அன்று வழக்கம் போல வாக்கிங் சென்று கொண்டிருந்த வேளையில் தண்டவாளத் தில் விரிசல் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். அது சரியாக இருபுறத்தில் இருந்தும் ரயில் வரும் நேரம் என்பது நினைவில் இருக்க அந்த கணமே தன்னுடைய உடல்நிலையை மறந்துவிட்டு ஓட்டம் பிடித்து இருக்கிறார். தன்னுடைய வீட்டுக்கு அல்ல! அந்த இடாத்திற்குப் பக்கத்தில் இருக்கும் உடுப்பி ரயில்வே ஸ்டேசனுக்கு ஓடினார் தண்டவாள விரிசல் பற்றிய தகவல் சொல்ல.
மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கும் நிற்காமல் மூச்சிரைக்க ஓடியவர் ஸ்டேசனில் உள்ள ரயில்வே அதிகாரியிடம் விரிசல் அடைந்திருக்கும் தண்டவாள பிரச்சினையை கூறி உள்ளார். ரயில் வரும் நேரம் நெருங்கிவிட அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்று விரிசலை சரி செய்து உள்ளனர். அதற்குள் ரயில்வே ஸ்டேசனில் இருந்து அந்த வழியில் இருக்கும் ரயில்களுக்கு தண்டவாள விரிசல் பற்றிய தகவல் சென்றுவிட ரயில்கள் சில
நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டு வேலை முடிந்ததும் இயக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற மூன்று கிலோ மீட்டர்கள் மூச்சிரைக்க ஓடிய
இவரை அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர். இந்த மாதிரியான மனிதர்களுக்கு வெறும் பாராட்டு மட்டும் போதுமா? எதாவது சன்மானம் கொடுத்து உதவலாமே! இத்தனைக்கும் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்.
ரயில்வே துறையினரை அவசர உதவிக்கு அழைக்கும் எண்கள் அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசு அந்த அளவுக்கு மக்களை விழிப்புணர்ச்சியோடு செயல்பட அறிவுறுத்த வேண்டும்.
Be the first to comment on "உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை தடுக்க 3 கிலோமீட்டர் ஓடிய மனிதர்!"