நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண்டீர்களா?

About Neeraj Chopra

நீரஜ் சோப்ரா – இனி இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. 2021ம் ஆண்டிற்கான… இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் தங்க மெடலை வென்று சாதித்துள்ளார் நீரஜ் சோப்ரா. விளையாட்டு துறையில் அவ்வளவாக ஆர்வமில்லாத இந்தியர்களும் இப்போது உற்சாகமாக உள்ளனர். தன் வீட்டில் ஒரு நல்ல காரியம் நடந்தது போன்று உணர்கின்றனர். 

சந்தோசம் ஒருபக்கம் இருப்பினும் சோகமும் ஒருபக்கம் இருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தங்க மெடல்களை அசால்டாக வென்று குவித்துள்ளது. அந்த நாடுகளுக்கு சரிசமமான மக்கள்தொகையை கொண்ட நம் நாடு இப்போதுதான் தன்னுடைய முதல் தங்கத்தை வெல்கிறது என்பது ஒரு வகையில் வருத்தம் உண்டாக்கும் செய்தி. 

வெற்றிப்பட்டியலில் நாற்பத்தி எட்டாவது இடத்தை தாண்டி இடம்பெற்றிருந்தது இந்தியா. நீரஜ் சோப்ராவின் வெற்றிக்குப் பின் இந்தியா பல  இடம் தாவி 48வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. முகநூலில் எல்லோரும் நீரஜ் பாண்டே பற்றி ரைட்டப்கள் எழுத தொடங்கிவிட்டனர். அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வாழ்த்து சொல்ல தொடங்கி விட்டனர். இதற்கிடையில் ஒருவர் எழுதியிருந்த “அடுத்து என்ன இந்தியர்களே… கூகுளில் நீரஜ் சோப்ராவின் சாதியை தானே தேட போகிறீர்கள்…” என்ற வரியை காண முடிந்தது. 

இவ்வளவு மக்கள்தொகை கொண்ட இந்தியா ஒரேயொரு தங்க மெடலை வெல்ல இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்றால் அதற்கு சாதியும் ஒருவகையில் காரணம். நம் நாட்டை பிடித்த சாபக்கேடு இந்த சாதி. கல்வித்துறையில் எப்படி சாதி பாகுபாடு பார்க்கிறார்களோ அதேபோல விளையாட்டு துறையிலும் சாதி பாகுபாடு ரொம்ப வருடங்களாக நிலவி வருகிறது என்பதை தன்னுடைய “ஜீவா” படத்தில் தட்டி கேட்டிருப்பார் இயக்குனர் சுசூந்திரன். அதே சுசூந்திரன் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் உயர நினைக்கும் பள்ளி மாணவனுக்கு பிஈடி வாத்தியார் எவ்வளவு முக்கியமானவர் என்பதை தன்னுடைய “சாம்பியன்” படத்தில் காட்டி இருப்பார். அதேபோல ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் உயர நினைக்கும் கிராமபுற கல்லூரி மாணவனின் வாழ்க்கையை “கல்லூரி” படத்தில் காட்டியிருப்பார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். 

இயக்குனர் பா. ரஞ்சித் விகடனில் எழுதிய “ஆண்பால் பெண்பால் அன்பால்” தொடரில் தன்னுடைய மகளை ஒரு விளையாட்டு வீராங்கனையாக உருவாக்க ஆசைப்படுகிறேன் என்று எழுதியிருந்தார். பெரும்பாலான தமிழக தகப்பன்கள் ஏன் இந்திய தகப்பன்கள் சொல்ல தயங்கும் பதில் இது. கிட்டத்தட்ட எல்லா இந்திய அப்பன்களும் தன் மகளை மகனை டாக்டர்/இன்ஜினியர்/ டீச்சர் ஆக உருவாக்க தான் ஆசைப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத அபத்தமான உண்மை. “தங்கல்” படத்தில் வருவதை போன்ற அப்பன்கள் நம் சமூகத்தில் மிக குறைவு. ஒட்டுமொத்த இந்தியாவும் விளையாட்டு துறையில் மிக மிக மிக மோசமான நிலையில் உள்ளது என்பது தான் நான் சொல்ல வரும் கருத்து. இங்கு இருக்கும் இந்திய பெற்றோர்களுக்கு/ வருங்கால தலைமுறையினருக்கு கிரிக்கெட்டை தவிர (இப்போது ஓரளவுக்கு புட்பாலை நிறைய பேர் கவனிக்கின்றனர்) இதர விளையாட்டு துறையில் பெரிதாக ஆர்வமில்லை என்பதே உண்மை. அதனால் தான் இந்தியா ஒலிம்பிக்கில் இவ்வளவு மந்தமாக இருக்கிறது. பள்ளிகளில் பணியாற்றும் பிஇடி டீச்சர்களுக்கே அந்த அறிவு இருப்பதில்லை. அவர்களை மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு உழைக்கிறார்களா என்று. முதலில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அந்தக் கனவு இருக்க வேண்டும். அப்போதுதான் எம்.எஸ். தோனி படத்தில் வருவதைப் போல வெற்றி சிக்சரை அடித்த தோனியை பார்த்து “மை பாய்” என்று சொன்னதை போல அவர்களால் பெருமை தட்டிக்கொள்ள முடியும். மாரியப்பன் ரியோ ஒலிம்பிக்கில் தங்க மெடல் வென்றபோது இந்த “மை பாய்” முமெண்டில் சர்ச்சை ஏற்பட்டது எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது. 

முன்பே கூறியிருந்ததை போல விளையாட்டு துறையில் இந்தியா இவ்வளவு மோசமாக இருக்க சாதியும் மதமும் மிக முக்கிய காரணம். நான் படித்தது சாதிப் பெயரை சுமந்து நிற்கும் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில். அந்தப் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்கொரு முஸ்லீம் நண்பன் இருந்தான். விளையாட்டு துறையில் அவனுக்கு அவ்வளவு ஆர்வம். ஈடுபாடு அதிகம். அவனுடைய ஓட்டம் அப்படி இருக்கும். பள்ளி படிக்கும்போதே உடம்பை ஈட்டி போல வைத்திருந்தான். ஆனால் அவன் வேற்று மதம் என்பதாலும் சொந்த சாதியை சார்ந்தவனில்லை என்பதாலும் எங்கள் பிஈடி வாத்தியார் அவனை சரியாக வழியாக நடத்தவில்லை. இந்தியாவே பாராட்டும் அளவிற்கு வளர்வான் என்று நாங்கள் எதிர்பார்த்த அந்த முஸ்லீம் நண்பன் இப்போது சென்னையில் மாதம் 12000 சம்பளத்திற்கு நாயா பேயாக அலைந்து வருகிறான். அதே சமயம் அந்த பிஈடி வாத்தியாரின் சாதியை சார்ந்த பெண் இப்போது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வெயில் மாதம் 27000 சம்பளம் வாங்கி கொண்டு இருக்கிறார். (பெண்கள் விளையாட்டு துறையில் சாதிப்பதை தவறாக நான் சொல்லவில்லை…)

மெத்தனத்துடனும் சோம்பேறித்தனத்துடனும் இருக்கிறார்கள் பிஈடி டீச்சர்கள் என்பதே உண்மை. அதே சமயம் சக ஆசிரியர்கள் அந்த பிஈடி டீச்சர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிறைய ஆசிரியர்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறார்கள் என்பது நானறிந்த உண்மை. குறிப்பாக ஆசிரியைகள். இப்படி நிறைய உண்மைகளை நாம் பேசாமலே மௌனம் காத்து வருகிறோம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பிஈடி பீரியட் என்றில்லாமல் எல்லா நாளும் பிஈடி பீரியட் அவசியம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும். அதே சமயம் பல இந்திய விளையாட்டு வீரர்கள் அரசு வேலை கிடைத்துவிட்டால் தன்னுடைய ஓட்டத்தை… உழைப்பை… நிறுத்துக் கொள்ளாமல் ஒலிம்பிக் தங்கத்தை கனவாக வைத்து தொடர்ந்து ஓட வேண்டும்…! 

Related Articles

“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரச... பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் க...
2019 தமிழ்படங்களுக்கு ஆனந்தவிகடன் மற்றும... ஆனந்த விகடன் மதிப்பெண்கள் பேட்ட - 41/100 விஸ்வாசம் - 40 பேரன்பு - 56 சர்வம் தாள மயம் - 45 வந்தா ராஜாவ தான் வருவேன் - 40 துல...
விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேச... அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நி...
பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒ...

Be the first to comment on "நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண்டீர்களா?"

Leave a comment

Your email address will not be published.


*