கடந்த சில நாட்களாகவே ஏர்செல் நிறுவனத்தை பற்றி அரசல்புரசலாக செய்தி வெளியானது. அதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது ஏர்செல் சிக்னல் கிடைக்காமல் இருந்ததே காரணம். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதுமே யாருக்கும் ஏர்செல் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ஏர்செல் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உஷார் பார்ட்டிகள் ஜியோவிற்கு தாவிவிட இன்று ஏர்செல் சிக்னலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாமான்ய மக்களே.
என்ன ஆனது ஏர்செல் நிறுவனம்?
போதிய டவர் பராமரிப்பு இல்லாமை, கடன் பிரச்சினை ஆகிய காரணங்களால் ஏர்செல் நிறுவனம் பெரிய நஷ்டத்துக்குள்ளாகி திவாலாகிவிட்டது. அதனால் ஏர்செல் பயனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பது தான் இன்று தமிழகம் முழுக்க பேசப்படும் டாபிக்.
அதே சமயம் ஏர்செல் நிறுவனத்தின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அதில், எதிர்பாராத சில பிரச்சினைகள் காலமாக தங்களுக்கு சேவை வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. பல வருடங்களாக பயனாளியாக இருந்து அன்பை பகிர்ந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். வீணான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்னும் சில தினங்களில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு மீண்டும் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் தொடரும். அதற்குள் யாரும் MNP மூலமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. ஏர்செல் நம்பரிலிருந்து மற்றொரு நம்பருக்கு கால் டைவர்ட் செய்துகொள்ளவும். இதன் மூலம் உங்ஙளது இன்கமிங் கால் வசதியை தொடர்ந்து பெறலாம் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட இரண்டு தகவல்களில் எது உண்மை என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் விடை கிடைக்கலாம்.
Be the first to comment on "நொந்து போன Aircel பயனாளர்கள் – திவாலாகிவிட்டதா ஏர்செல் நிறுவனம்?"