புதிய தலைமுறையின் பொருள் புதிது நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா கேள்வி கேட்ட மதன் ரவிச்சந்திரன்
கேள்வி 1 : தேவராட்டம் படம் எப்படி வந்திருக்கு…???
பதில் : ரொம்ப நல்லா வந்திருக்கு… ஒவ்வொரு படத்திலயும் ஒவ்வொரு உறவ மேம்படுத்தி சொல்வேன்… இந்த படத்திலயும் ஒரு உறவ மேம்படுத்தி சொல்லிருக்கேன்… சோ படம் நல்லா வந்திருக்கு… புரொடியூரும் ஹேப்பி நடிச்ச ஹீரோவும் ஹேப்பி…
கேள்வி 2 : இந்தப் படம் ஆரம்பச்சிதிலிருந்தே ஏன் ஒரு சமூகத்தோட பேர வச்சிருக்கிங்கன்னு கான்ட்ரவெர்சி ஆச்சே அத எப்படி பாக்குறீங்க?
பதில் : முத்தையாவுக்கு தேவராட்டம் படம் மட்டும் பிரச்சினை இல்ல… குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், இப்ப தேவராட்டம்னு எல்லா படத்துக்கும் கான்ட்ரவர்சி இருக்கு…
கேள்வி 3 : முத்தையாவுக்குன்னே குறிவைக்கப் படுதா…
பதில் : அவிங்களூக்கு எதாவது ஒன்ன எதிர்க்கனும்… அப்படி இருக்கப்ப என் படம் சரியா அவிங்களுக்கு உக்காந்துக்குது… நான் என் படத்துல பின்புலத்த பாக்காதீங்க… பிரச்சினைய பாருங்கன்னு சொல்றேன்…
கேள்வி 4 : சமூக பிரச்சினைனு சொல்றப்பவே இது சமூக அக்கறையுள்ள படமானு கேள்வி வருது… மருது படத்துல பாட்டிக்கு தலைல எண்ணை தேச்சி இளநி கொடுத்த சீன் இருக்கு… மறைந்து போன ஒரு பழக்கத்த தோண்டி எடுக்குற மாதிரி இருக்கு… வன்மம் பிடித்த மூளை உள்ளவரோனு கேள்வி வருது… அப்படி இருக்கைல இது எப்படி சமூக அக்கறையுள்ள படம்னு வரும்…
இப்படி கேள்விகள் தொடரந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக பதில் அளிக்கிறார் இயக்குனர் முத்தையா. தேவர் மகன் படம் சாதியை தூக்கிப் பிடிக்கிறது என்று சொன்னால் உடனே மறுப்பு தெரிவிக்கிறார் கமல். தேவராட்டம் படம் இந்த சமூகத்தை என்ன செய்கிறது என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். அதற்கெல்லாம் முத்தையா என்ன சொல்கிறார் என்பதை அந்தப் பேட்டியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
Be the first to comment on "தேவராட்டம் மட்டுமல்ல எல்லா படத்தலயும் சாதி இருக்கு! – முத்தையா"