வருகிற மே 19ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு கூட்டம் கூட்டுதல் பணப்பட்டுவாடா செய்தல் போன்ற பணிகள் அமோகமாக நடந்து வருகிறது.
தேர்தல் பறக்கும் படை :
அரவக்குறிச்சி தொகுதி நன்றாக பணம் புழங்கும் தொகுதி என்பதால் தேர்தல் பறக்கும் படை முச்சந்திகள் தோறும் நின்று வாகனங்களை பரிசோதீத்து வருகின்றனர். அப்படி இருந்தும் அரவக்குறிச்சி தொகுதியில் பெரிதாக எதுவும் பிடிபட்டதாக தெரியவில்லை. பறக்கும் படையினரின் கண்ணீரில் மண்ணைத் தூவி பணப்பட்டுவாடா செய்யத் தொடங்கிவிட்டனர் கட்சி ஆட்கள்.
செந்தில் பாலாஜி vs செந்தில் நாதன்
இந்த தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார் செந்தில் பாலாஜி. காரணம் அவர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறியதே. ஜெயிக்காவிட்டால் திமுக பிரமுகர்கள் மதிக்க மாட்டார்கள் ஆதலால் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அதற்காக ஒரு ஓட்டுக்கு உறுதியாக ரூ 4000ம் தர இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இது ஒருபுறமிருக்க அதிமுக சார்பில் நிற்கும் செந்தில் நாதன் தன் பங்கிற்கு ஒரு ஓட்டுக்கு 5000ம் தர இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு நாள் கூட்டத்திற்கு நபருக்கு 200 ரூபாய் கொடுக்கிறார்களாம். இன்னும் ஒரு சில ஊர்களில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சோற்றையும் வழங்கி 150 அல்லது 200 ரூபாய் தருகிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ளும் அரவக்குறிச்சி தொகுதி மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
நடுவுல தினகரன் :
அரவக்குறிச்சி தொகுதில அதிமுக எவ்வளவு தருதோ அதவிட 500 ரூபாய் எச்சாக தருவேன் என்று உறுதி எடுத்துள்ளாராம் தினகரன். அவருடைய சார்பில் நிற்க வைக்கும் ஆளுக்கு அரவக்குறிச்சி தொகுதியில் அவ்வளவு மவுசு இல்லை என்றாலும் தினகரன் கட்சியினர் விடாப்பிடியாக நிற்கின்றனர். வடிவேலு சொல்வது போல் அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான்யா இருக்கு என்கின்றனர் அரவக்குறிச்சி தொகுதி மக்கள்.
Be the first to comment on "செந்தில்பாலாஜி vs செந்தில் நாதன் – அரவக்குறிச்சி தொகுதியில் களைகட்டுகிறது தேர்தல் திருவிழா!"