ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அசீஃபா பானு கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி காணாமல் போனார். ஒரு வாரம் கழித்து அசீபாவின் உடல் மீண்டும் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் ஆசிஃபா பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
சிறுமிக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை மயக்க நிலையில் கோயிலில் அடைத்து வைத்து கும்பல் ஒன்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எட்டு பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வுக்குழு. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் பாஜகவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். இதனால் இந்த அமைச்சர்களை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியிருந்தார். இதனையொட்டி ஜம்மு காஷ்மீரின் தற்போதைய முதல்வர் மெகபூபா முப்தி, ” சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் பொறுப்பற்ற சிலரின் பேச்சு மற்றும் செயல்களால் சட்டப்பூர்வ நடவடிக்கையில் தடை ஏற்படுத்த முடியாது, விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படும்” என்றார்.
ஏன் இப்படி?
ஏன் இப்படி என்று வினா எழுப்பினால் அதற்கு மதவெறி என்பது தான் விடை. அசீபா பானு, முகமது யூசுப் புஜ்வாலா, நசீமா பிபி ஆகிய தம்பதிகளுக்கு பிறந்தவர். இவர் வசித்து வந்த கத்துவா பகுதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு உள்ள முஸ்லிம்கள் ஆடு,மாடு,குதிரை மேய்த்து பிழைப்பு நடத்தும் குஜ்ஜார் இனத்தை சார்ந்தவர்கள். இந்நிலையில் காணாமல் போன அசிஃபா பானுவை பற்றி போலீசில் புகார் கொடுக்க, அங்குள்ள பாஜகவை சேர்ந்த காவல் அதிகாரிகளோ, ” அசீபா எதாவது பையனுடன் ஓடிப்போய் இருப்பார், எந்த பையன் ஊரில் காணாமல் போய்விட்டான் ” என்று பாருங்கள் எனக்கூறி கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதனால் வழக்கு தீவிரப்படுத்தப்பட்டு விசாரிக்கையில் குற்றம்புரிந்ததே போலீஸ்காரர்கள் தான் எனத் தெரிய வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது பாஜக கட்சியினர் பெரிதும் போற்றும் இந்து கோயிலில் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மட்டுமா?
இது போன்ற மனித தன்மையற்ற செயல்கள் ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் அதிகம் நடைபெற்றுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் பதவி ஏற்ற பிறகு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமிகள், பெண்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது.
இந்தியாவில் இந்து மட்டுமே இருக்க வேண்டும் மற்ற மதத்தினரை மனிதத்தன்மையற்று துன்புறுத்துவோம் என்பது போல உள்ளது பாஜக ஆட்சி என்றும் நான் பெண் குழந்தையை பெற்று எடுத்துள்ளேன். இந்தியாவில் நிலவும் மதவெறிப்பிடித்த காவி ஆட்சியை ஆதிக்கத்தை பார்க்கும்போது ஒரு அப்பாவாக என்னுடைய இதயத்துடிப்புகள் பயத்தில் அதிகரித்துள்ளது என்றும் பலரும் சமூக வலைதளங்களில் அந்த சிறுமிக்கு நீதி கேட்டும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
Be the first to comment on "அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்படுமா? அசிஃபாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது பாஜக அரசு?"