இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர்வுக்கு என்னென்ன தண்டனைகள் தெரியுமா?

punishments for rape around the world

நம்மில் பெரும்பாலோனோர் கேட்டதும் பதறும் குற்றமென்றால் அது பாலியல் வன்புணர்வு தான். காரணம் அது ஒருவரை உடல்ரீதியாக, மனரீதியாக வாழ்நாள் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் போது அதை வெளிப்படையாகச் சொல்லும் சூழ்நிலை கூட இல்லை. காரணம் இங்கே நாம் பெண்களை சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் போலி பிம்பங்கள். ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானால் அவளது வாழ்க்கை முடிந்ததே விட்டது என்று எப்படியோ அப்பெண்ணை நம்ப வைத்துவிடுகிறோம். அவளும் அதை நம்பி தனக்கு இழைக்கப்படும் அநீதியை ஏற்று, வெளியே சொல்லக்கூட முடியாமல், அதிலிருந்து வெளியேறவும் முடியாமல் நடைப்பிணமாக வாழ்ந்து மடிகிறாள். பாலியல் வன்புணர்வு செய்பவனுக்கு தரப்படும் தண்டனைக்கு நிகராக, பெண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள போலி பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கும் சமூகத்திற்கும், இன்னமும் பாலியல் வன்புணர்வைக் கற்பழிப்பு என்று எழுதும் பத்திரிகைகளுக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

உலக நாடுகள் பலவற்றில் பாலியல் வன்புணர்வுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த நாடுகளில் என்னென்ன தண்டனைகள் என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

1 . சீனா

பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்களை இரண்டு விதங்களில் சீனா தண்டிக்கிறது. முதலாவதாகக் குற்றம் உறுதியான பிறகு அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது. இரண்டாவதாக, குற்றவாளிகளின் பிறப்புறுப்புகளை நீக்குவது.

2 . வட கொரியா

சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வரும் வடகொரியாவில், வன்புணர்வு குற்றத்திற்கான நீதி உடனடியாக வழங்கப்படும். வன்புணர்வில் ஈடுபடும் குற்றவாளிகள் பொதுவில் பின்மண்டையில்
சுட்டுக்கொல்லப்படுவர்.

3 ஆப்கானிஸ்தான்

உலக அளவில் வன்புணர்வு குற்றங்கள் மிக விரைவாக விசாரித்து தண்டனை வழங்கும் நாடுகளில் முதன்மையாக இருப்பது ஆப்கானிஸ்தான். நான்கே நாட்களில் வன்புணர்வு குற்றங்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி தலையில் சுடப்பட்டு கொல்லப்படுவார்.

4 . சவுதி அரேபியா

குற்றம் நடந்த சில நாட்களியே நீதி வழங்கப்படும். குற்றவாளி பொதுவில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுவார்.

5 . ஈரான்

பொதுமக்களும் வன்புணர்வு குற்றத்திற்கான தண்டனையைத் தெரிந்து கொள்ளும் வகையில், குற்றவாளி பொதுவில் தூக்கிலிடப்படுவார்.

6 . ஐக்கிய அரபு நாடுகள்

வன்புணர்வு சட்டங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் மிக எளிமையானது. ஒருவன் வன்புணர்வில் ஈடுபட்டால் அவன் ஏழு நாட்களில் கொல்லப்படுவான்.

7 . நார்வே

ஏழு முதல் பதினைந்து ஆண்டுகளுக்குச் சிறை தண்டனைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும்.

8 . பிரான்ஸ்

குற்றத்தின் தன்மையை பொறுத்து பதினைந்து முதல் முப்பது ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை வழங்கப்படும்.

தண்டனைகள் மட்டும் போதுமா?

ஒவ்வொரு முறையும் இந்தியாவில் வன்புணர்வு குற்றங்கள் நடக்கும் போதும், நாம் அனைவரும் உரத்த குரலில் தண்டனைகள் பற்றி மட்டும் பேசுகிறோம். ஆனால் ஒரு குற்றத்தை இல்லாமல் செய்ய தண்டனைகள் மட்டும் போதுமா நிச்சயம் இல்லை.

பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாலியல் கல்வி அறிமுகம் செய்யப்பட வேண்டும். பள்ளிக்கூடங்கள் இழந்த ஒழுக்கவியல் கல்வி மீண்டும் அறிமுகம் செய்யப்பட வேண்டும். பெற்றோர்கள் பாலியலை பற்றி தங்கள் குழந்தைகளிடம் ஓரளவுக்காவது பேச வேண்டும். என் மகனுக்குச் சம்பாதிக்க தேவையான அளவுக்கு மட்டும் கல்வி இருந்தால் போதுமானது என்று நினைக்கும் பெற்றோரா நீங்கள்? உங்கள் மகன் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் முதல் குற்றவாளி நீங்கள் தான். பெற்றோர்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு என்று அனைவரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய பிரச்சனை இது.

Related Articles

இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அ... இந்தியாவில் சாதி எப்படி தோன்றியது? அது எப்படி பரவியது? சாதி இந்திய மக்களை வாழ்வின் முன்னோக்கி நகர்த்துகிறதா இல்லை நரகத்துக்குள் தள்ளுகிறதா? குறிப்பாக ...
கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்... அது என்ன கிகி சேலஞ்ச்! உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வ...
வெ. இறையன்புவின் “நமக்குள் சில கேள... வெ. இறையன்பு மிக சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீட்டு நூலகம் வைத்திருப்பவர்களின் வீட்டில் கண்டிப்பாக அவருடைய புத்தகம் எதாவது இடம் ப...
கர்நாடக சீரியல் கில்லர் சயனைட் மோகனுக்கு... சீரியல் கில்லர் (Serial Killer) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி சினிமாக்களில் கேள்விப் பட்டிருப்போம். நாட்டில் தொடர் கொலைகள் நடக்கும் போதெல்லாம் தொடர் க...

Be the first to comment on "இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர்வுக்கு என்னென்ன தண்டனைகள் தெரியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*