- சர்டிபிகேட் U/A , காலம் : 172.53 நிமிடங்கள்
- தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் & வெளியீடு : Screen scene entertainment
- ராவணன் மற்றும் அனுமன் வேடம் போட்டவர்களை அபிரர்களின் தலைவன் சுட்டுக்கொள்ளும் படத்தின் முதல் காட்சியே அபத்தம்.
- ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் சூப்பர். அதே போல காஸ்ட்யூம் டிசைனிங் மற்றும் கலை இயக்கம் இரண்டும் சூப்பர். தமிழ் மொழி உச்சரிப்புகளையும் நன்றாக செய்துள்ளனர்.
- அபிரர்களின் தலைவன் ராமராமனை கொன்றுவிட்டு மகன் ஜெயராமன் அரசாங்கத்திற்கு சொந்தமான புதையலை கொள்ளையடித்தவர்களையும் புதையலையும் எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதே கதை.
- ஸ்கிரீனை கிழித்துக்கொண்டு நாயகன் என்ட்ரி ஆக திரையில் “அவனே ஸ்ரீமன் நாராயணா” என்று வசனம் ஒலிக்க போலீஸ் உடையுடன் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு நாயகன் அறிமுகமாகிறார். செம மொக்கையான அறிமுக காட்சி.
- நாயகன் எந்நேரமும் சுருட்டுப் பிடித்துக்கொண்டே இருப்பது, அசால்ட்டாக எல்லாம் செய்து கிழிப்பது எல்லாம் அபத்தம்.
- சீன் பை சீன் மாஸ் காட்சியாக உருவாக்க முயன்றிருக்கிறார்கள், ஆனால் அது நிறைவேறவில்லை. காமெடியாக நினைத்து எடுத்த காட்சிகள் எல்லாம் கடுப்பை கிளப்புகின்றன.
- ஹாய் அமராவதி என்ற பத்திரிக்கை நடத்தி வருபவராக கதாநாயகி நன்றாக நடித்துள்ளார். படத்தில் உருப்படியான கதாபாத்திரம் என்றால் அது கதாநாயகி பாத்திரம் தான்.
- படம் ஆரம்பித்ததில் இருந்தே சலிப்பாக தான் இருந்தது, ஒரு காட்சி கூட சுவாரஸ்யமாக இல்லை. ஜாக்கிசான் ஸ்டைலில் காமெடி கலந்து சண்டை போடுகிறேன் என்று ஹீரோ செய்யும் குரங்குசேட்டை எல்லாம் எரிச்சலை ஏற்படுத்தின.
- பாடல்கள் அனைத்தும் படுமோசம், அதற்கான நடன அமைப்புகள் அதைவிட படுமோசமாக இருந்தது.
- இடைவேளையின் போது வருகிற ஹீரோ ஹீரோயின் குகை காட்சி மற்றும் பாரிஜாத மரத்தைச் சுற்றி மரம்மரம் என்ற குறிப்பை வைத்து புதையலை தேடும் காட்சி மட்டும் ஓரளவுக்கு ஓகே ரகம்.
- படத்தின் நீளம் மிக அதிகம். மன சோர்வும் உடல் சோர்வும் ஏற்படுகிறது.
- நடிகர் நடிகைகளின் பங்களிப்பு அருமை. இருந்தபோதிலும் படம் சுமாராக இருந்ததற்கு அழுத்தமற்ற கதையும் அலட்சியமான திரைக்கதையுமே காரணம்.
(ராமாயணம் கலந்த புதையலை தேடும் கதை)
மனம் கவர்ந்த வசனங்கள்:
- ராவணன், அசுரர்கள்ல உயர்ந்தவன்… மனிதர்கள்ல உண்மையானவன்…
- வழி தவறிப் போனவங்கள மன்னிக்கலாம், ஆனா தப்பான வழில போனவங்கள மன்னிக்க கூடாது…
- என்னோட ஆசைய என்னோட பலவீனமா நினைக்காத நாராயணா…
- துரோகிய ஒரே தடவ சுட்டுக் கொள்றது தண்டனை இல்ல அது விடுதலை. கொஞ்சம் கொஞ்சமா சிதைக்கறது தான் உண்மையான தண்டனை…
- குறிவச்ச துப்பாக்கிக்கு அனுமதி தேவை இல்ல… சுட்டுத் தள்ளு…
- தாடி நரைச்சாலும் பாடிய இன்னும் ஃபிட்டா தான் வச்சிருக்க…
Be the first to comment on "பர்சு பத்திரம் மக்களே! – அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்!"