மூடப்பட்டு வரும் சினிமா தியேட்டர்கள்? தியேட்டர் நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம்?

Cinema theaters to be closed_ How difficult is it to run a theater_

துருப்பிடித்துப் போன இரும்புக் கேட்டுகள், வெள்ளை படிந்து போன ஜன்னல் கண்ணாடிகள்,  புழுதிகளும் பறவை எச்சங்களும் நிறைந்த, சாயம் இழந்துபோன தியேட்டர் சுற்றுச்சுவர்கள் என்று தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் பொலிவிலும் வணிக லாபத்திலும் மங்கிப்போய் வருகின்றன. 

முதலில் மூடப்படும் நிலையில் இருக்கும் தியேட்டர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த மாதிரியான தியேட்டர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கூட்டணி முறையில் தொடங்கப்பட்டு இருக்கும்.  பிறகு கூட்டணியாக தொடங்கியவர்களுக்குள் சிறுசிறு பூசல்கள் விவாதங்கள் ஏற்பட அவர்கள் ஒவ்வொருவராக தனித்தனியாக பிரிந்து வேறு ஒரு தொழிலை நாடிச் சென்று விடுகின்றனர். கடைசியில் ஒட்டுமொத்த தியேட்டரை நிர்வாகிக்கும் பொறுப்பு ஒருவர் தலையில் வந்து விழுந்து விடுகிறது. கூட்டணியாக இருக்கும் போது ஜாலியாக இருந்த அந்த ஒருவர் இப்போது எப்படி ஒரு பெரிய தியேட்டரை நிர்வாகிப்பது என தெரியாமல் தடுமாறி போகிறார். 

கூட்டணி உடைந்து விட்டால் அவ்வளவு தான் இனி அந்த தொழில் வளர்ச்சி பெறுவது என்பது அசாத்திய திறமை கொண்ட மனிதர்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஆனால் எல்லா தியேட்டர் நிர்வாகிகளும் அசாத்திய திறமை கொண்டவர்களாக இருப்பது இல்லை. தியேட்டர் ஓனர்கள் சில எளிமையான மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த மாதிரியான படங்களை எடுத்து தன் தியேட்டரில் ஒளிபரப்பை விடுவது ரசிகர்களை எப்படி தன் தியேட்டருக்கு வரவழைப்பது போன்ற  நுணுக்கங்கள் எல்லாம் அவர்களுக்கு சரிவரப் புரிவதில்லை. அதாவது அவர்கள் காலத்திற்கு ஏற்ப மாறுவதில்லை. அவர்களில் சிலர் இன்னும் எம்ஜிஆர் சிவாஜி நாகேஷ் ரஜினி கமல் என்று அவர்களுக்குள்ளேயே இருக்கிறார்கள். 

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை அவர்களால் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்பது புரியாமல் இருக்கிறார்கள். இந்த மாதிரி அறியாமையுடன் தியேட்டர் நடத்தி வரும் சில தியேட்டர்களை தமிழ் ராக்கர்ஸ் போன்ற திருட்டு களவாணிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.  இதனால் தியேட்டர் ஓனர்களுக்கு கெட்ட பெயர் கிடைக்கிறது. ஏற்கனவே அவர்கள் லாபம் கிடைக்காமல் விரக்தி மனநிலையுடன் தியேட்டரை ஓடிக்கொண்டிருக்கின்றனர். பின்னாளில் அவர்கள் மீது திருட்டு பட்டம் விழும் போது அவர்கள் மேலும் ஆடிப் போய் விடுகிறார்கள். அந்த மாதிரியான தியேட்டர்களுக்கு ஒரு காட்சிக்கு அதிகபட்சம் வருபவர்கள் 5 பேர் முதல் 10 பேர் வரை. அந்தப் பத்து பேரிலும் 4 பேர் தியேட்டரில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். 

தியேட்டருக்கு வரும் அந்த நான்கு பேரையும் பிடித்து உங்கள் பைகளில் கேமரா இருக்கிறதா என்றெல்லாம் செக் பண்ணிக் கொண்டிருந்தால் அந்த நான்கு பேரும் திரும்ப வருவார்களா? இந்த மொக்க தியேட்டருக்கு இவ்வளவு சீனா என்று வெறுத்து விட்டு ஓடிவிடுவார்கள்.  இப்படி வெறும் 10 பேர் 20 பேர் காக தியேட்டர் ஓட்டிக் கொண்டிருந்தால் தியேட்டரில் வேலை செய்யும் கழிவறை சுத்தம் செய்பவர்கள், டிக்கெட் கிழித்துக் கொடுப்பவர்கள்,  நாற்காலிகளில் உள்ள குப்பைகளை அகற்றுபவர்கள், கேன்டீன் நடத்துபவர்கள் போன்ற இப்படிப்பட்ட தொழில் செய்யும் நபர்கள்  எப்படிப் பிழைப்பது அவர்களுக்கு சம்பளம் என்று அந்த தியேட்டர் ஓனர் எதைக் கொடுப்பார்? 

அதேசமயம் தியேட்டர் நடத்துபவர்கள் மீதும் குறைகள் இருக்கிறது. தியேட்டர் நடத்துபவர்களே தியேட்டரை தொழில் பக்தியுடன் பராமரிப்பதில்லை.  அந்த தியேட்டர்க்குள் சென்றாலே பொயிலை எச்சில் நெடி மூக்கைத் தொலைக்கிறது அதுமட்டுமன்றி நாற்காலிகள் சரியான முறையில் இருப்பதில்லை. கைப்பிடி உடைந்து ஒரு பக்கம் சாய்ந்து மரப் பட்டைகள் எல்லாம் உரிந்து என்று நாற்காலிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. 

அதையும் மீறி அந்த தியேட்டருக்குள் போய் அமர்ந்தால் கொசுக்கள்  நம்மை சாகடித்து விடும். நாற்காலிக்கு கீழே பார்த்தால் சாராய பாட்டில் ஒன்று உருண்டு கிடக்கும். இன்னும் பக்கத்தில் உள்ள இன்னொரு நாற்காலியில் பார்த்தால் அதில் யாராவது எச்சில் துப்பி வைத்திருப்பார்கள் அல்லது வாந்தி எடுத்து வைத்திருப்பார்கள். 

அங்கு ஏசி வசதி இருக்காது. வெறும் பழைய ஃபேன் ஒன்று மட்டுமே கிரீச் கிரீச் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும். அதுவும் அவ்வளவு வேகமாக ஓடாது.  கொசுக்களும் ஈக்களும் எறும்புகளும் நிறைந்து கிடக்கும் அந்த தியேட்டரில் அமர்ந்து எப்படி நிம்மதியாக படம் பார்ப்பது. அதுமட்டுமன்றி தியேட்டர் ஸ்கிரீன் சரியான முறையில் பராமரிப்பது இல்லை. அது மங்கிப்போய் கிடைக்கும். காட்சிகள் அனைத்தும் பளிச்சென தெரியாமல் கொஞ்சம் இளம் மஞ்சள் நிறத்தில் தெரியும் இப்படிப்பட்ட காட்சிகளை எப்படி பார்த்து ரசிப்பது? இதற்காகவா காசு கொடுக்கிறோம் என்று ரசிகர்கள் தியேட்டரை விட்டு பாதியிலேயே எழுந்து சென்று விடுகிறார்கள்.  

தியேட்டரின் தரத்திற்கு ஏற்பத் தான் தியேட்டர் ஓனர்களும் டிக்கெட் விலையை நியமிக்கிறார்கள். முதல் நாள் ரிலீசாகும் படத்திற்கே ஐம்பது ரூபாய்தான் வைக்கிறார்கள். பெரிய நடிகர் என்றால் அந்த நடிகரின் வியாபாரத்தை பொருத்து முதல் நாள் அறுபது ரூபாய் பால்கனி 80 ரூபாய் என்று அமைகிறது. அதே சமயம் பண்டிகை காலங்களில் ரிலீஸாகும் விஜய் அஜித் ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இவர்கள் டிக்கெட்டை மிக அதிக விலை வைத்து வைக்கிறார்கள். சில சமயங்களில் அது 300ல் தொடங்கி ஆயிரம் வரை நீடிக்கிறது.  இந்த மொக்கை தியேட்டர் இவ்வளவு டிக்கெட் வசூலிக்கிறது என்று பண்டிகை காலங்களில் ரசிகர்கள் அவர்களிடம் கேட்டால் நாங்கள் எல்லாம் பண்டிகை காலங்களில் இவ்வளவு விலை வைத்து டிக்கெட் விற்பதால் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.  இதுவும் இல்லை என்றால் நாங்கள் எப்போதோ இந்த மாதிரியான தியேட்டர்களை மூடி விட்டு திருமண மண்டபமாக மாற்றி இருப்போம் என்று சொல்கிறார்கள் அவர்கள். 

சரிவை நோக்கியும் செல்லாமல் வளர்ச்சியை நோக்கியும் செல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள ஒரு தியேட்டரை பார்ப்போம்.  இந்த தியேட்டர்களிலும் ஏசி வசதி கிடையாது. ஆனால் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தியேட்டர்களில் உள்ளது போல் இல்லாமல் இந்த தியேட்டர்களில் (கார் பார்க்கிங் வசதி அவ்வளவாக கிடையாது) பைக் பார்க்கிங் வசதி போன்ற வசதிகள் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கின்றன. 

கழிவறை வசதி, கேன்டீன் வசதி போன்றவை எல்லாம் ஓரளவுக்கு பயன்படுத்தும் அளவுக்கு நன்றாக இருக்கின்றன.  சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தியேட்டர்களில் கேன்டீனில் உள்ள தீனி பொருட்கள் சிதறிக் கிடக்கும். அங்கு வாங்கும் காபியும் டீயும் சுடுதண்ணி போல் இருக்கும். ஆனால் இந்த தியேட்டர்களில் அந்தளவுக்கு இல்லாமல்  ஓரளவுக்கு சுவை உணரும் படி நன்றாகவே பொருட்கள் தரமானதாக இருக்கும். பழைய தியேட்டர்களில் விலை குறைவு,  நடு நிலைமையில் இருக்கும் தியேட்டர்களில் சில சமயங்களில் விலை குறைவாகவும் சில சமயங்களில் விலை ஏற்றம் ஆகவும் வைத்து விற்கிறார்கள். அது ஒரு முக்கிய குறையாக இருக்கிறது. இந்த தியேட்டர்களில் உள்ள நாற்காலிகள் ஓரளவுக்கு நல்ல இடைவெளியுடன் நல்ல தரத்துடன் நன்றாக உட்கார்ந்து படத்தை ரசிக்கும் அளவிற்கு இருக்கின்றன. அதனால் தான் இந்த மாதிரியான தியேட்டர்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஆனால் நல்ல வளர்ச்சி அடைந்த அப்டேட் ஆன தியேட்டர்களில் 3டி ஸ்கிரீன், ஏசி வசதி, கார் பார்க்கிங் வசதி, பைக் பார்க்கிங் வசதி போன்றவை எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது என்றாலும், அவர்கள் அந்த பார்க்கிங் கட்டணம் மற்றும் கேண்டினில் விற்கும் உணவுப் பொருட்களின் கட்டணம்  போன்றவை ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.  இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து, மாநகராட்சி, நகராட்சி, கிராமப்புற தியேட்டர்கள் எல்லாம் பார்க்கிங் கட்டணம் இவ்வளவு தான் நியமிக்க வேண்டும் என்று கட்டளை விதித்த போதிலும் அவர்கள் பார்க்கிங் கட்டணத்திற்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பார்க்கிங் பொறுப்பு தியேட்டருக்குச் சம்பந்தமில்லாத வேறொரு நபர்கள்தான் எடுத்து நடத்துகிறார்கள். அதனால் எதையும் நீங்கள் அவர்களிடம் தான் பேச வேண்டும் என்று கூறுகிறார்கள் இது தியேட்டர்கள் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி தியேட்டர்கள் நடத்துபவர்கள் சிரமத்தில் வாழ்க்கையை கழித்து கொண்டிருந்தாலும், தியேட்டரை நம்பி இருப்பவர்கள் அதைவிட மிகுந்த சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். வார நாட்கள் முழுக்க வேலை வேலை என்று அலைந்து விட்டு வார விடுமுறையில் ஒரு நாள் சந்தோசமாக இருக்கலாம் என்று தியேட்டருக்கு வருபவர்கள் தியேட்டர் டிக்கெட் விலையை பார்க்கிங் கட்டண விலையை கேண்டீன் உணவுப்பொருட்கள் விலை இவற்றையெல்லாம் கேட்டு அதிர்ந்து போய் அவர்களும் மன உளைச்சலுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாத் தரப்பும் வறுமையிலும் மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டிருக்க இந்த மதவெறி பிடித்த அரசியல்வாதிகள் எல்லாரும் திடீரென ஒரு நாள் வந்து “நீ எப்படி இந்த படத்தை இந்த தியேட்டரில் ஓட்டலாம்” என்று சொல்லிக்கொண்டு தியேட்டர் கண்ணாடிகளை, கதவுகளை, சீட்டுகளை எல்லாம் அடித்து துவம்சம் செய்யக்கூடிய முட்டாள் குரங்குகளாக மாறிவிடுகிறார்கள். “பத்மாவதி”, “பீகே”, “விஸ்வரூபம்”, “மெர்சல்” போன்ற படங்களின் போது தியேட்டர் ஊழியர்கள் தியேட்டர் ஓனர்கள் போன்றோர் இந்த அரசியல்வாதிகளால் அடைந்த துன்பங்கள்  சொல்லி மாளாது.  இப்படி அரசியல்வாதிகள் ஒரு பக்கம் தியேட்டருக்குள் நுழைந்து சீட்டுகளை லைட்டுகளை ஸ்கிரீன்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து விட அதேபோல சில முன்னணி நடிகர்களின் குரங்கு ரசிகர்களும் அந்த வேலையை செய்கிறார்கள். இப்படி இருக்கும் போது அவர்கள் தியேட்டரை மறுபடியும் புதுப்பிக்க யாரிடம் போய்க் காசு கேட்பார்கள்?  இதனால் தான் அவர்கள் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது, மதம் பற்றிய படங்கள் ரிலீசாகும் போது தியேட்டரில் பவுன்சர்களையும் போலீஸ்காரர்களையும் இறக்கி விடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் விலையையும் விதியை மீறி உயர்த்தி விடுகிறார்கள். 

பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இருந்தாலும், இன்றுவரை முறையான பராமரிப்பு, சரியான டிக்கெட் விலையுடன் இயங்கிக் கொண்டு இருக்கும் சில தியேட்டர்களின் பட்டியல்: 

மதுரை மாவட்ட தியேட்டர்கள்:

  1. 1939 –  சென்ட்ரல் டாக்கீஸ் தியேட்டர், மதுரை
  2. 1902 – தங்கரீகல் தியேட்டர், மதுரை
  3. 1974 – அலங்கார் தியேட்டர், மதுரை

நாகர்கோவில் மாவட்ட தியேட்டர்கள்: 

1950 – தங்கம் தியேட்டர், நாகர்கோவில்

1972 – ராஜேஷ் தியேட்டர், நாகர்கோவில்

வேலூர் மாவட்ட தியேட்டர்கள்: 

1954 – ராஜா தியேட்டர், வேலூர் 

1985 – கணேஷ் டாக்கீஸ், வேலூர்

திருவாரூர் மாவட்ட தியேட்டர்கள்: 

1990 – நடேஷ் தியேட்டர், திருவாரூர்

1986 – சோழா தியேட்டர், திருவாரூர்

திருநெல்வேலி மாவட்ட தியேட்டர்கள்: 

1971 – பூர்ணகலா தியேட்டர், திருநெல்வேலி

1954 – ரத்னா தியேட்டர் திருநெல்வேலி

இதர மாவட்ட தியேட்டர்கள்: 

1914 – டிலைட் தியேட்டர், கோயம்புத்தூர்

1983 – சத்யா தியேட்டர், தூத்துக்குடி

1873 – அசிம்பிலி ரூல்ஸ், நீலகிரி

1979 – கோமதி தியேட்டர், மயிலாடுதுறை

1942 – முருகன் தியேட்டர், திருச்சி

1989 –  ஓ எஸ் எம் தியேட்டர், நாகப்பட்டினம்

1969 – பாலாஜி தியேட்டர், சீர்காழி

1936 – நடராஜா தியேட்டர், காரைக்குடி

Related Articles

எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை... "பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்... " இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனி...
“சில்லுக்கருப்பட்டி” படம் தம... நடிகர் சூர்யா தரப்பில் ஹலீதா சமீம் இயக்கி இருக்கும் படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். மொத்தம் நான்கு கதைகள் என்பத...
பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயுசு முடியப் ப... கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறியியல் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியது. அப்போது இருந்தே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து உள்ளது...
ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து... ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆம...

Be the first to comment on "மூடப்பட்டு வரும் சினிமா தியேட்டர்கள்? தியேட்டர் நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம்?"

Leave a comment

Your email address will not be published.


*